2 புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் களமிறக்கும் ஹோண்டா கார் நிறுவனம்!

இந்தியாவில், 2 புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

By Saravana Rajan

இந்தியாவில், 2 புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

2 புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் களமிறக்கும் ஹோண்டா கார் நிறுவனம்!

இந்த இரண்டு எஸ்யூவி மாடல்களில் ஒன்று 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக இருக்கும். மாருதி பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் டாடா நெக்ஸான் மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

2 புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் களமிறக்கும் ஹோண்டா கார் நிறுவனம்!

மற்றொரு மாடல், ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட மாடல்களுக்கு நேரடி போட்டியை தரும் ரகத்தில் இருக்கும். இந்த இரண்டு எஸ்யூவி மாடல்களுமே, புதிய ஹோண்டா அமேஸ் கார் உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டு வருகிறது.

2 புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் களமிறக்கும் ஹோண்டா கார் நிறுவனம்!

காம்பேக்ட் எஸ்யூவி மாடலானது 2021ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள டபிள்யூஆர்வி காருக்கு மாற்றாக இது நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

2 புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் களமிறக்கும் ஹோண்டா கார் நிறுவனம்!

இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் விலையை மிக சவாலாக நிர்ணயிக்க ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், மிகச் சிறந்த இடவசதியையும் பெற்றிருக்கும்.

2 புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் களமிறக்கும் ஹோண்டா கார் நிறுவனம்!

இரண்டாவது புதிய எஸ்யூவி மாடலானது சற்று பிரிமியம் மாடலாக இருக்கும். இது 5 சீட்டர் மாடலா அல்லது 7 சீட்டர் மாடலா என்பது குறித்து தகவல் இல்லை. ஆனால், விலை அடிப்படையில் பார்க்கப்போனால், ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக இருக்கும்.

2 புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் களமிறக்கும் ஹோண்டா கார் நிறுவனம்!

தற்போது விற்பனையில் இருக்கும் ஹோண்டா கார்களில் பயன்படுத்தப்படும் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் இந்த இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களிலும் பயன்படுத்தப்பட உள்ளது. காம்பேக்ட் எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சினும் பயன்படுத்தப்படும். சற்று பிரிமியம் மாடலில் ஹோண்டா சிட்டி எஞ்சின் ஆப்ஷன்கள் பயன்படுத்தப்படும்.

2 புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் களமிறக்கும் ஹோண்டா கார் நிறுவனம்!

எஸ்யூவி கார் மார்க்கெட்டில் இருக்கும் வலுவான வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஹோண்டா கார் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது.

2 புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் களமிறக்கும் ஹோண்டா கார் நிறுவனம்!

காம்பேக்ட் எஸ்யூவி மாடல் ரூ.7 லட்சம் விலையிலும், சற்று பிரிமியம் எஸ்யூவி மாடலானது ரூ.10 லட்சம் ஆரம்ப விலையிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களும் எதிர்கால ஹோண்டா வர்த்தகத்தில் மிக முக்கிய மாடல்களாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

Most Read Articles
English summary
The Honda WR-V has been a successful product for the Japanese automaker in the Indian market. Now, Autocar India reports that Honda is working on two new SUVs for India. Both the new models will be mass market SUVs and will be Honda's best-selling products in the country.
Story first published: Monday, April 30, 2018, 17:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X