ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் கார் அறிமுகம்

ஹோண்டா நிறுவனம் தனது ஹோண்டா ஜாஸ் காரின் ஃபேஸ் லிப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜாஸ் கார் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நிலையில் அதன் ஃபேஸ் லிப்ட் வெர்ஷனை தற்போது அந்நிறுவனம் அறிமுகப்

By Balasubramanian

ஹோண்டா நிறுவனம் தனது ஹோண்டா ஜாஸ் காரின் ஃபேஸ் லிப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜாஸ் கார் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நிலையில் அதன் ஃபேஸ் லிப்ட் வெர்ஷனை தற்போது அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் கார் அறிமுகம்

இந்த காரின் பெட்ரோல் வேரியன்டான வி மாடல் கார் ரூ 7.35 லட்சத்தில் விற்பனையாகிறது. டாப் என்ட் மாடலான விஎக்ஸ் என்ற டீசல் வேரியன்ட் ரூ 9.29 லட்சத்தில் விற்பனையாகிறது. மேலும் தற்போது உள்ள இ மற்றும் எஸ் வேரியண்ட்களை தற்போது நிக்கியுள்ளது அந்நிறுவனம்.

ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் கார் அறிமுகம்

புதிதாக வெளியாகவுள்ள இந்த ஜாஸ் கார் நிறுவனத்தில் 4 விதமான பெட்ரோல் வேரியன்ட்களும், 3 விதமான டீசல் வேரியன்ட்களும் விற்பனையாகிறது. ஹோண்டா நிறுவனம் தற்போது ஜாஸ் காரில் பெட்ரோல் வேரியண்டில் வி மற்றும் விஎக்ஸ்வேரியன்டில் சிவிடி மாடலையும் வெளியிடுகிறது.

ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் கார் அறிமுகம்

டீசல் வேரியன்டில் மேனுவல் ஆப்ஷன்கள் மட்டும்தான் இருக்கிறது. இது குறித்து அந்நிறுவன விற்பனைத்துறை இயக்குநர் கூறுகையில் :"இந்திய வாடிக்கையாளர்கள் ஆட்டோகியர் கார்களுக்கு மெதுவாக திரும்பி வருகின்றனர். அவர்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு

இந்த தொழிற்நுட்பத்தை இந்த காரில் புகுத்தியுள்ளோம். " என கூறினார்.

ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் கார் அறிமுகம்

புதிதாக வெளிவரவுள்ள இந்த ஹோண்டா ஜாஸ் கார் பல மாற்றங்களை கொண்டுள்ளது. அதன் பேஸ் வேரியன்டிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. காரின் வெளிப்புறத்தை பொருத்தவரையிலும் பின்பக்கம் எல்இடி விங் லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய க்ரோம் நிற டோர் ஹேண்டில்கள்,

ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் கார் அறிமுகம்

ரெடியண்ட் ரெட் மெட்டாலிக் மற்றும் லுனார் சில்வர் மெட்டாலிக் ஆகிய 2 கலர் ஆப்ஷன்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மார்டன் ஸ்டீல் மெட்டாலிக், கோல்டன் ப்ரெளன் மெட்டாலிக், ஓயிட் ஆர்சிட் பியர்ல் ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் கார் அறிமுகம்

காரின் உட்புறத்தை பொருத்தவரை டிசைனில் எந்த மாற்றமும் செய்ப்படவில்லை பழைய காரில் இருந்த அதே டிசைன்கள் தான். முக்கிய அப்டேட்டாக இன்போடெயின்மென்டில் டிஜிபேட் 2.0 என்ற சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது 7 இன்ச் ஸ்கிரின், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆகிய ஆப்ஷன்கள் உள்ளது.

ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் கார் அறிமுகம்

மேலும் ஏஎன்வி எனப்படும் ஆடியோ, வீடியோ நேவிகேஷன், சிஸ்டம், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரிவர்ஸ் கேமரா, ஆகிய வசதிகள் உள்ளது. இது மட்டும் இல்லாமல் ஆர்ம் ரெஸ்ட், ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக், ரியர் பார்க்கிங் சென்சார். ஆகிய வசதிகளும் இதில் உள்ளது.

ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் கார் அறிமுகம்

இது மட்டும் இல்லாமல் புஷ் ஸ்டார்ட் பட்டன், ஸ்மார்ட் கீ, கீலெஸ் ரிமோட், க்ரூஸ் கண்ட்ரோல், ஆகிய வசதிகள் டீசல் மற்றும் சிவிடி பெட்ரோல் வேரியன்களில் கிடைக்கிறது. இந்த கார் நேரடியாக மாருதி சுஸூகி பெலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாக திகழ்கிறது.

ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் கார் அறிமுகம்

இந்த கார்களுடன் போட்டியிட்டாலும் இந்த காரின் விலை சுமார் ரூ 2 லட்சம் அளவிற்கு வித்தியாசமாக உள்ளது. தற்போது பெலேனோ கார்கள் ரூ 5.36 லட்சத்திலும், ஐ20 கார்கள் ரூ 5.40 லட்சத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்த ஹோண்டா ஜாஸ் கார் ரூ 7.35 லட்சத்தில் தான் விற்பனைக்கு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 19, 2018, 18:05 [IST]
English summary
2018 Honda Jazz Facelift Launched In India; Prices Start ₹ 7.35 Lakh. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+