இந்தியாவில் விற்பனையான டபிள்யூ ஆர் வி கார் ஹோண்டாவிற்கு புதிய மைல் கல்

இந்தியா முழுவதும் மொத்தம் 50,000 டபிள்யூ ஆர் வி கார்களை விற்றுள்ளது ஹோண்டா நிறுவனம். அந்த நிறுவனத்தின் மொத்தம் விற்பனையில் 28 சதவீதத்தை இந்த கார் பெற்றுள்ளது.

By Balasubramanian

இந்தியா முழுவதும் மொத்தம் 50,000 டபிள்யூ ஆர் வி கார்களை விற்றுள்ளது ஹோண்டா நிறுவனம். அந்த நிறுவனத்தின் மொத்தம் விற்பனையில் 28 சதவீதத்தை இந்த கார் பெற்றுள்ளது. கார் அறிமுகமாகி ஒரு வருடத்தில் இந்த வளர்ச்சியை கண்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையான 50,000 டபிள்யூ ஆர் வி கார் ஹோண்டாவிற்கு புதிய மைல் கல்

இது குறித்து அந்நிறுவன தலைவர் யோசிரோ கூறுகையில் : "இந்தியாவில் டபிள்யூ ஆர் வி கார் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளதை பெருமையாக கருதுகிறோம். 50,000 கார்களை விற்பனை செய்தது எங்கள் நிறுவனத்தின் ஒரு மைல் கல்லாகும். மக்கள் தங்கள் ஸ்டேட்டஸ்களை வெளிப்டுத்த எங்கள் காரை தேர்ந்தெடுப்பதாகவே உணருகிறோம்." இவ்வாறு கூறினார்.

இந்தியாவில் விற்பனையான 50,000 டபிள்யூ ஆர் வி கார் ஹோண்டாவிற்கு புதிய மைல் கல்

இந்த காரின் டாப் மாடல் வெரியன்டான வி.எக்ஸ் தான் மொத்த விற்பனையில் 80 சதவீதத்தை கொண்டுள்ளது. பெட்ரோல், டீசல் வெரியண்ட்களை பொறுத்தவரை 42:58 என்ற அளவில் விற்பனையாகியுள்ளது.

இந்தியாவில் விற்பனையான 50,000 டபிள்யூ ஆர் வி கார் ஹோண்டாவிற்கு புதிய மைல் கல்

இந்தியாவின் வடக்கு பகுதியில் 30 சதவீதமும், மேற்கு பகுதியில் 28 சதவீதமும், கிழக்கு பகுதியில் 15 சதவீதமும், தெற்கு பகுதியில் 27 சதவீதமும் மொத்த கார்கள் விற்பனையாகியுள்ளது.

இந்தியாவில் விற்பனையான 50,000 டபிள்யூ ஆர் வி கார் ஹோண்டாவிற்கு புதிய மைல் கல்

இந்த காரின் பெட்ரோல் வெரியண்டை பொறுத்தவரை 5 கியருடன் 6,000 ஆர்.பி.எம். இல் 89 பிஎச்பி.யும் 4,800 ஆர்.பி.எம். இல் 110 என்.எம். டார்க் திறனை வெளிபடுத்தக்கூடியது. இது சுமார் 17.5 கி.மீ., மைலேஜ் தருகிறது.

இந்தியாவில் விற்பனையான 50,000 டபிள்யூ ஆர் வி கார் ஹோண்டாவிற்கு புதிய மைல் கல்

இதன் டீசல் வெரியண்டை பொறுத்தவரை 6 கியருடன் 3600 ஆர்.பி.எம் இல் 98.5 பிஎச்.பி மற்றும் 1750 ஆர்.பி.எம் இல் 200 என் எம் டார்க் திறனை வெளிபடுத்தக்கூடியது. இது சுமார் 25.5 கி.மீ. வரை மைலேஜ் தருகிறது.

இந்தியாவில் விற்பனையான 50,000 டபிள்யூ ஆர் வி கார் ஹோண்டாவிற்கு புதிய மைல் கல்

இந்த காரின் டிசைனை பொருத்தவரை ஹோண்டா கம்பெனி கார்களான ஜாஸ், மற்றும் சிஆர்வி ரக காரில் பல டிசைகள் இதில் இடம்பெற்றுள்ளன. எனினும் ஜாஸ் மற்றும் சிஆர்வி கார்களில் உள்ள குறைகள் டபிள்யூ ஆர் வி காரில் இல்லை.

இந்தியாவில் விற்பனையான 50,000 டபிள்யூ ஆர் வி கார் ஹோண்டாவிற்கு புதிய மைல் கல்

டபிள்யூ ஆர் வி காரில் ஹோண்டா சிட்டி காரில் உள்ள முக்கிய அம்சமான 7 இன்ச் இன்போடெயிண்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதில் ஸ்மார்ட் போன் இணைப்பு பின் பக்க கேமரா இணைப்பு ஆகிய வசதிகள் இருக்கிறது.

இந்தியாவில் விற்பனையான 50,000 டபிள்யூ ஆர் வி கார் ஹோண்டாவிற்கு புதிய மைல் கல்

இதன் விலையை பொருத்தவரை டில்லி எக்ஸ் ஷோரூம் விலைப்படி பெட்ரோல் வெரியன்ட்கள் ரூ 7.78 லட்சத்தில் இருந்து ரூ 9 லட்சம் வரையிலும் டீசல் வெரியன்ட்கள் ரூ 8.81 லட்சத்தில் இருந்து ரூ 9.99 லட்சம் வரையிலும் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 28, 2018, 17:29 [IST]
English summary
Honda WRV Crosses 50,000 Sales Milestone. Read in Tamil.
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+