TRENDING ON ONEINDIA
-
காஷ்மீர் தாக்குதல்... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம்.. மவுனமாக இருக்கும் பாக், சீனா
-
திடீரென நடத்தப்பட்ட ரெய்டில் நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் பறிமுதல்... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்...
-
கார்த்தி வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு நடித்த தேவ் படம் எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம்
-
தலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை
-
வேற லெவல் பிளான் உடன் மீண்டும் நிலவிற்கு செல்லும் நாசா; பின்னணி என்ன?
-
ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா? “நச்”சுன்னு நாலு காரணம் சொன்ன ஆஷிஷ் நெஹ்ரா
-
ஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு
-
ஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம்! இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்!
சிங்கம் சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் வைக்க காரின் சீட் பொசிஷனை மாற்றினால் போதுமாம்லே!
கார்களில் உள்ள சீட் ரெக்லைன் வசதியை பயன்படுத்தி, சிக்ஸ் பேக் உடற்கட்டை கொண்டு வருவதற்கான உடற்பயிற்சிகளை செய்ய முடியுமாம். அது எப்படி? என்பது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் இந்தியர்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போதுமான உடற்பயிற்சி செய்யாததே இதற்கு காரணம். ஆனால் நேரமின்மை என்ற ஒற்றை காரணத்தால், பெரும்பாலானோரால், சீராக உடற்பயிற்சி செய்ய முடிவதில்லை.
ஆனால் வெறுமனே காருக்குள் அமர்ந்திருக்கையில், உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் உடற்கட்டை கொண்டு வர முடியும் என்கிறார் ஒருவர். இதற்காக சீட் ரெக்லைன் வசதியை அவர் பயன்படுத்துகிறார். சீட் ரெக்லைன் என்பது கார்களின் டிரைவர் இருக்கையை படுப்பதற்கு ஏற்றாற்போல் சாய்த்து கொள்ளும் வசதியாகும்.
ரோகித் சிங் கல்கோத்ரா என்பவர்தான், தனது வீடியோவில் இதனை கூறியிருக்கிறார். அவர் முதலில் சீட் ரெக்லைன் வசதியை பயன்படுத்தி, காரின் டிரைவர் இருக்கையை முழுவதுமாக சாய்த்து, வெயிட் பென்ச் போல் மாற்றிவிடுகிறார். வெயிட் பென்ச் என்பது பெரும்பாலும் உடற்பயிற்சி கூடங்களில் காணப்படும்.
இந்த புதிய பொசிஷன் மூலமாக 'க்ரன்ச்சஸ்' எனும் உடற்பயிற்சியை செய்ய முடியும் என அந்த இளைஞர் கூறுகிறார். இதை செய்வதன் மூலமாக வயிற்றின் அடிப்பகுதியில் உள்ள தசைகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
இதன்பின் இருக்கையை சில டிகிரிகள் மேலே தூக்கி கொண்ட அவர், மீண்டும் 'க்ரன்ச்சஸ்' உடற்பயிற்சியை செய்ய தொடங்குகிறார். இந்த புதிய பொசிஷனில் 'க்ரன்ச்சஸ்' செய்வதன் மூலமாக, வயிற்றின் மேல் பகுதி தசைகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடிவதுடன், கொழுப்பையும் குறைக்க முடியும் என அவர் தெரிவிக்கிறார்.
இந்த 2 உடற்பயிற்சிகளையும் மிக எளிதாக செய்ய முடியும். குறிப்பாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டிருக்கும் நேரங்களிலும், காரை பார்க்கிங் செய்து விட்டு யாரேக்கேனும் காத்திருக்கும் நேரங்களிலும் மிக எளிதாக இதனை செய்யலாம்.
இந்த உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமாக சிக்ஸ் பேக் கொண்டு வர முடியும் என்கிற ரீதியில் அந்த வீடியோவில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. மாருதி ஸ்விப்ட் காரில், ரோகித் சிங் கல்கோத்ரா உடற்பயிற்சி செய்யும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
எனினும் காருக்குள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக மட்டும் சிக்ஸ் பேக் உடற்கட்டை கொண்டு வந்து விட முடியாது. சிக்ஸ் பேக் என்ற கனவை நிறைவேற்ற வேண்டுமானால், உடற்பயிற்சியுடன் கடுமையான டயட் கடைபிடிப்பதும் அவசியம். ஆனால் இந்த உடற்பயிற்சிகள் நல்ல பலனை அளிக்கும்.
அதே நேரத்தில் மிக நீண்ட நேரம் காருக்குள் இருப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது என்பதையும் உணர்ந்து கொள்வது அவசியம். நீண்ட நேரம் காருக்குள் அமர்ந்திருந்தால், உடலின் பல்வேறு பாகங்களில் வலி ஏற்படும்.
ஒருவேளை தினமும் நீண்ட நேரம் பயணம் செய்வது என்பது உங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தால், 'ஸ்ட்ரெச்சிங்' உடற்பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். உங்கள் உடல் ஃபிட் ஆக இருக்க இந்த உடற்பயிற்சிகள் உதவும்.
டார்ஸோ டிவிஸ்டிங், நெக் டிவிஸ்டிங் மற்றும் ஹேண்ட் ஸ்ட்ரெச்சிங் போன்ற உடற்பயிற்சிகளையும் கூட காருக்குள் அமர்ந்து கொண்டே ஒருவரால் செய்ய முடியும். டிராபிக் ஜாமில் சிக்கி கொள்ளும் சமயங்களில், உங்கள் பொன்னான நேரத்தை இதற்கு செலவிடலாம்.
Source: Actor Rohit Singh Kalgotra