புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் எப்போது துவங்குகிறது தெரியுமா?

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு முன்பதிவு எப்போது துவங்கப்பட இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் எப்போது துவங்குகிறது தெரியுமா?

வரும் அக்டோபர் 23ந் தேதி புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. வடிவமைப்பில் முற்றிலும் புதிய மாடலாக அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த கார் வர இருப்பது வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டி இருக்கிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் எப்போது துவங்குகிறது தெரியுமா?

இந்த நிலையில், புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு சில டீலர்களில் ஏற்கனவே ரகசியமாக முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. எனினும், அதிகாரப்பூர்வமாக வரும் அக்டோபர் 10ந் தேதி முதல் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு முன்பதிவு துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் எப்போது துவங்குகிறது தெரியுமா?

அண்மையில் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஸ்கெட்ச் படங்கள் வெளியாகின. அதில், முற்றிலும் புதிய வடிவமைப்பில் சான்ட்ரோ கார் வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. இயான் காருக்கு மாற்றாக எதிர்பார்க்கப்படும் இந்த கார் வடிவத்தில் இயானைவிட பெரிதாக இருக்கிறது. அழகிய க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் எப்போது துவங்குகிறது தெரியுமா?

உட்புற வடிவமைப்பு மிக பிரிமியமாக இருக்கும். தரமான உதிரிபாகங்களுடன் வாடிக்கையாளர்களை கவரும். தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டேஷ்போர்டில் இயைந்துபோல கொடுக்கப்பட்டு இருக்கும் கியர் லிவர், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் எப்போது துவங்குகிறது தெரியுமா?

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பெட்ரோல், எல்பிஜி- பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி- பெட்ரோல் மாடல்களில் வர இருக்கிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் எப்போது துவங்குகிறது தெரியுமா?

இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் நிரந்தர அம்சமாக சேர்க்கப்பட்டிருக்கும். டாப் வேரியண்ட்டில் சில கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் எப்போது துவங்குகிறது தெரியுமா?

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ரூ.3 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ரெனோ க்விட், மாருதி வேகன் ஆர், டாடா டியாகோ உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும். மாதத்திற்கு 10,000 யூனிட்டுகளை விற்பனை செய்யும் இலக்குடன் சான்ட்ரோ காரை களமிறக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

Tamil
English summary
Hyundai is all set to launch their new hatchback, codenamed the AH2 in India. The company will introduce the new car in the Indian market on the 23rd October 2018. According to reports from carandbike, Hyundai will start pre-bookings of the new AH2 hatchback from the 10th October 2018.
Story first published: Monday, September 17, 2018, 13:53 [IST]
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more