'பேபி' க்ரெட்டாவாக வரும் புதிய ஹூண்டாய் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் கர்லினோ என்ற காம்பேக்ட் ரக எஸ்யூவியின் கான்செப்ட் மாடலை ஹூண்டாய் காட்சிப்படுத்தி இருந்தது.

ஆட்டோமொபைல் பிரியர்களால் பேபி க்ரெட்டா என்று குறிப்பிடப்படும் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

'பேபி' க்ரெட்டாவாக வரும் புதிய ஹூண்டாய் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் கர்லினோ என்ற காம்பேக்ட் ரக எஸ்யூவியின் கான்செப்ட் மாடலை ஹூண்டாய் காட்சிப்படுத்தி இருந்தது. தற்போது இந்த கான்செப்ட் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு தீவிர சாலை சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

'பேபி' க்ரெட்டாவாக வரும் புதிய ஹூண்டாய் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

அண்மையில் சோதனை ஓட்டத்தில் இருந்த இந்த எஸ்யூவியின் ஸ்பை படங்களை இந்தியன் ஆட்டோஸ் பிளாக் தளம் வெளியிட்டு இருக்கிறது. அதில், இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் உருவம், வடிவம் உள்ளிட்டவை குறித்து ஓரளவு அனுமானிக்கக்கூடிய விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

'பேபி' க்ரெட்டாவாக வரும் புதிய ஹூண்டாய் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கோனா எஸ்யூவி மாடல்களின் வடிவமைப்பு தாத்பரியங்களை கொண்டு கலந்து கட்டிய வடிவமைப்பை பெற்றிருக்கிறது. மாருதி பிரெஸ்ஸா உள்ளிட்ட மாடல்களுக்கு இது போட்டியாக வர இருக்கும் நிலையில், 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக இருக்கிறது.

'பேபி' க்ரெட்டாவாக வரும் புதிய ஹூண்டாய் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

ஹூண்டாய் ஸ்டிக்ஸ் என்ற பெயரில் இந்த எஸ்யூவி குறிப்பிடப்படுகிறது. இது வெர்னா கார் உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்மை பயன்படுத்திதான் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உருவம் பேபி க்ரெட்டாவாக கூறும் அளவுக்கு இருக்கிறது.

'பேபி' க்ரெட்டாவாக வரும் புதிய ஹூண்டாய் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

இந்த புதிய எஸ்யூவியில் 120 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 115 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பெட்ரோல் எஞ்சின் இந்திய மார்க்கெட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது விசேஷமான விஷயம்.

'பேபி' க்ரெட்டாவாக வரும் புதிய ஹூண்டாய் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

இந்த புதிய எஸ்யூவி மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும். ஹூண்டாய் சான்ட்ரோ காரில் இருப்பது போன்ற ஸ்மார்ட் ஆட்டோ ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் அளிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

'பேபி' க்ரெட்டாவாக வரும் புதிய ஹூண்டாய் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

புதிய ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவி ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த புதிய எஸ்யூவி மாடல் சந்தையில் விற்பனைக்கு களமிறக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Article Published On: Thursday, December 13, 2018, 11:48 [IST]
English summary
The production version of the Hyundai Carlino SUV, the Styx has been spied testing ahead of its launch. The sub-four metre SUV from Hyundai is expected to be launched in the market, sometime in April 2019.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+