புதிய ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு!

புதுப்பொலிவுடன் விற்பனைக்கு வரும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு டீலர்களில் முன்பதிவு செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

By Saravana Rajan

புதுப்பொலிவுடன் விற்பனைக்கு வரும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு டீலர்களில் முன்பதிவு செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு!

எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் க்ரெட்டா கார் விற்பனையில் கலக்கி வருகிறது. இந்த நிலையில், புதிய மாடல்களின் வரவால் வாடிக்கையாளர் கவனம் திசை திரும்பும் வாய்ப்பு இருக்கிறது. இதனை கருதி, கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு!

வரும் ஜூனில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், டீலர்களில் இந்த காருக்கு ரகசிய முன்பதிவு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.25,000 முன்பணத்துடன் முன்பதிவு பெறப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் வெளிப்புறம், உட்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன புதிய ஹெட்லைட், க்ரில் அமைப்பு மற்றும் டெயில் லைட் க்ளஸ்ட்டருடன் வருகிறது புதிய க்ரெட்டா கார்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு!

உட்புறத்தில் முக்கிய மாற்றமாக 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். சென்டர் கன்சோல் அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு!

கூடுதலாக சன்ரூஃப் சேர்க்கப்பட்டு இருக்கிறது. க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்களும் கொடுக்கப்பட்்டு இருக்கின்றன. வென்டிலேட்டட் முன்புற இருக்கைகளும் புதிது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் தக்க வைக்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 154 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் 88 பிஎச்பி பவரையும், 224 என்எம் டார்க் திறனையும், 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் 126 பிஎச்பி பவரையும், 256 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு!

மூன்று எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் மாடல்களில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு!

தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட சற்றே கூடுதல் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் மாருதி எஸ் க்ராஸ், ரெனோ கேப்ச்சர் போன்ற மாடல்களுடன் நேருக்கு நேர் போட்டி போடும்.

Source: Autocarindia

Article Published On: Thursday, May 3, 2018, 11:13 [IST]
English summary
Hyundai Creta 2018 bookings begins. Autocar India reports that Hyundai Creta facelift can be booked at company dealerships for an amount of Rs 25,000. Hyundai is expected to launch the 2018 Creta facelift sometime in the month of June this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+