ரூ.9.44 லட்சத்தில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் E, E+, S, SX, SX[Dual Tone] மற்றும் SX[O] ஆகிய 6 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

By Saravana Rajan

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரூ.9.44 லட்சத்தில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் E, E+, S, SX, SX[Dual Tone] மற்றும் SX[O] ஆகிய 6 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் 7 வண்ணங்களில் கிடைக்கும். இரண்டு இரட்டை வண்ணக் கலவையிலும் வந்துள்ளது.

ரூ.9.44 லட்சத்தில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் முகப்பு க்ரில், பம்பர் மற்றும் ஹெட்லைட் அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரூஃப் ரெயில், அலாய் வீல்கள் மற்றும் டெயில் லைட் க்ளஸ்ட்டரும் புதிது. உட்புறத்தில் புதிய ஃபேப்ரிக் இருக்கைகள், ஆரஞ்ச் வண்ண பாகங்கள் மற்றும் புதிய ஏசி வென்ட்டுகள் மாற்றங்களாக இருக்கின்றன.

ரூ.9.44 லட்சத்தில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!!

பழைய மாடலில் இருந்த அதே எஞ்சின் ஆப்ஷன்கள்தான் புதிய மாடலிலும் வந்துள்ளது. புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

ரூ.9.44 லட்சத்தில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!!

இரண்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள். 1.4 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 88 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 126 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

ரூ.9.44 லட்சத்தில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் மேம்படுத்தப்பட்ட புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆன்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் மிரர் லிங்க் தொழில்நுட்ப வசதிகளை சப்போர்ட் செய்யும். கையில் கட்டிக் கொள்வதற்கான கீ பேண்ட் என்ற சாவி வழங்கப்படுகிறது. இந்த சாவி மூலமாக புஷ் பட்டன் மூலமாக காரை ஸ்டார்ட் செய்யவும், எஞ்சினை ஆஃப் செய்யவும் உதவும்.

ரூ.9.44 லட்சத்தில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!!

மேலும், இந்த கீ பேண்ட் மூலமாக வாடிக்கையாளர் எவ்வளவு தூரம் நடக்கிறார். அதன் மூலமாக செலவாகும் கலோரி அளவை காட்டும் வசதி சேர்க்கப்ப்டடு இருக்கிறது. க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்மார்ட் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், பை- பங்க்ஷனல் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.

ரூ.9.44 லட்சத்தில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்குகளும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் இடம்பெற்றுள்ளன.

ரூ.9.44 லட்சத்தில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் வெள்ளை, கருப்பு, சில்வர், சிவப்பு, சாம்பல், ஆரஞ்ச் மற்றும் நீல வண்ணங்களில் வந்துள்ளது. கருப்பு- வெள்ளை மற்றும் கருப்பு- ஆரஞ்ச் ஆகிய இரண்டு இரட்டை வண்ணக் கலவையிலும் கிடைக்கும்.

ரூ.9.44 லட்சத்தில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!!

விலை நிர்ணயம்

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் ரூ.9.44 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கும். டாப் வேரியண்ட் ரூ.15.03 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. மாருதி எஸ் க்ராஸ், ரெனோ கேப்ச்சர், ஹோண்டா பிஆர்வி உள்ளிட்ட மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

விலைப் பட்டியல்

வேரியண்ட்(பெட்ரோல்) விலை
1.6 E ₹9,43,908
1.6 E+ ₹9,99,900
1.6 SX ₹11,93,934
1.6 SX Dual Tone ₹12,43,934
1.6 SX AT ₹13,43,834
1.6 SX (O) ₹13,59,948
வேரியண்ட் (டீசல்) விலை
1.4 E+ ₹9,99,900
1.4 S ₹11,73,893
1.6 S AT ₹13,19,934
1.6 SX ₹13,23,934
1.6 SX Dual Tone ₹13,73,934
1.6 SX AT ₹14,83,934
1.6 SX(O) ₹15,03,934

More from DriveSpark

Article Published On: Monday, May 21, 2018, 15:22 [IST]
English summary
2018 Hyundai Creta Facelift launched In India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+