2019 ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!!

அமெரிக்காவின் உட்டா நகரில் நடந்த புதிய சான்டா ஃபீ எஸ்யூவியின் மீடியா டிரைவ் நிகழ்வின்போது, புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஹூண்டாய் எலான்ட்ரா பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

By Saravana Rajan

புதுப்பொலிவுடன் கூடிய 2019 ஹூண்டாய் எலான்ட்ரா கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த புதிய காரின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

2019 ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!!

அமெரிக்காவின் உட்டா நகரில் நடந்த புதிய சான்டா ஃபீ எஸ்யூவியின் மீடியா டிரைவ் நிகழ்வின்போது இந்த புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஹூண்டாய் எலான்ட்ரா பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் புதிய தலைமுறை மாற்றங்களுடன் வந்த ஹூண்டாய் எலான்ட்ரா கார் இப்போது வடிவமைப்பில் சிறிய மாறுதல்களுடன் மேலும் வசீகரிக்கிறது.

2019 ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!!

புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர் மிக கூர்மையான டிசைன் தாத்பரியங்களுடன் எல்இடி பகல்நேர விளக்குகளுடன் கவர்ச்சி சேர்க்கிறது. வலிமையான முன்பக்க க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டு டிசைனில் மாற்றங்கள் இல்லை. ஆனால், புதிய டிசைனிலான 18 அங்குல அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

2019 ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!!

பின்புறத்தில் மிக நேர்த்தியாகவும், அட்டகாசமாகவும் டிசைன் செய்யப்பட்ட டெயில் லைட் க்ளஸ்ட்டர் காரின் அழகுக்கு வலு சேர்க்கிறது. மிக பிரம்மாண்டமான பம்பர் அமைப்பும் மிகச் சிறப்பான டிசைன் அம்சங்கள். பழைய மாடலைவிட மிக நேர்த்தியாக மாற்றங்களை செய்துள்ளனர் ஹூண்டாய் வடிவமைப்பு பொறியாளர்கள்.

2019 ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!!

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரில் ஓட்டுனரின் கண்களுக்கு புலப்படாத இடங்களில் வரும் வாகனங்கள் குறித்து எச்சரிக்கும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, மோதலை உணர்ந்து வேலை செய்யும் தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம், பாதசாரிகள் சாலையை கடப்பதை எச்சரிக்கும் வசதி, தடம் மாறுதலை எச்சரிக்கும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

2019 ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!!

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. பேஸ் மாடல்களில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் முந்தைய தலைமுறை மாடலில் இருந்து தக்க வைக்கப்பட்டுள்ளது.

2019 ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!!

தற்போது விற்பனையில் உள்ள ஹூண்டாய் எலான்ட்ரா காரில் பயன்படுத்தப்படும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள்தான் புதிய மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் எஞ்சின் 150 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சின் 126 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

2019 ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!!

இந்த இரண்டு எஞ்சின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். உலகின் சில நாடுகளில் இந்த கார் 128 பிஎச்பி பவரை அளிக்கும் 1.4 லிட்டர் எஞ்சின் மற்றும் 201 பிஎச்பி பவரை அளிக்கும் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களிலும் கிடைப்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

2019 ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!!

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலானது அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா ஆக்டேவியா, டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா ஆகிய கார் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
The 2019 Hyundai Elantra facelift has been unveiled globally. The premium sedan offering from the company was unveiled during one of the media drives for the new Santa Fe in Utah, USA.
Story first published: Saturday, August 25, 2018, 10:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X