ஹூண்டாய் எலான்ட்ரா காரில் கூடுதல் வசதிகள் அறிமுகம்!

ஹூண்டாய் எலான்ட்ரா செடான் காரில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் எலான்ட்ரா காரில் கூடுதல் வசதிகள்!

டி- செக்மென்ட் செடான் கார் ரகத்தில் ஹூண்டாய் எலான்ட்ரா கார் மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஹூண்டாய் எலான்ட்ரா காரில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஹூண்டாய் எலான்ட்ரா காரில் கூடுதல் வசதிகள்!

இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து சில கூடுதல் வசதிகளை எலான்ட்ரா காரில் சேர்த்துள்ளது ஹூண்டாய் நிறுவனம். ஆனால், ஹூண்டாய் எலான்ட்ரா காரின் எஸ்எக்ஸ்(O) டாப் வேரியண்ட்டில் மட்டுமே கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

ஹூண்டாய் எலான்ட்ரா காரில் கூடுதல் வசதிகள்!

இந்த வேரியண்ட்டில் தற்போது வயர்லெஸ் சார்ஜர், அவசர சமயத்தில் பிரேக் பிடிக்கும்போது இண்டிகேட்டர் மற்றும் பிரேக் லைட்டுகள் சேர்ந்து ஒளிர்ந்து பின்னால் வரும் வாகனங்களை எச்சரிக்கும் வசதி, ஆட்டோ லிங்க் தொடர்பு வசதி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் எலான்ட்ரா காரில் கூடுதல் வசதிகள்!

இந்த வேரியண்ட்டில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, டூயல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் என பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை.

ஹூண்டாய் எலான்ட்ரா காரில் கூடுதல் வசதிகள்!

இதுதவிர, இந்த வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், சன்ரூஃப், சுறா துடுப்பு வடிவிலான ஆன்டென்னா, 10 விதமான நிலைகளில் மாற்றும் வசதி கொண்ட ஓட்டுனர் இருக்கை, டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள், லெதர் இருக்கைகள், 10 ஸ்போக் அலாய் வீல்கள் என எக்கச்சசக்கமான சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

ஹூண்டாய் எலான்ட்ரா காரில் கூடுதல் வசதிகள்!

ஹூண்டாய் எலான்ட்ரா கார் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்் 150 பிஎச்பி பவரையும், 191 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

 ஹூண்டாய் எலான்ட்ரா காரில் கூடுதல் வசதிகள்!

டீசல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 126 பிஎச்பி பவரையும், 259 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

 ஹூண்டாய் எலான்ட்ரா காரில் கூடுதல் வசதிகள்!

ஹூண்டாய் எலான்ட்ரா காரின் டாப் வேரியண்ட்டில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் விலையும் ரூ.23,000 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடல் ரூ.18.78 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.19.92 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

 ஹூண்டாய் எலான்ட்ரா காரில் கூடுதல் வசதிகள்!

ஸ்கோடா ஆக்டேவியா, டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் ஆகிய கார்களுடன் போட்டி போடும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் வர இருக்கும் ஹோண்டா சிவிக் கார் வருகையும் ஹூண்டாய் எலான்ட்ரா காருக்கு போட்டியாக இருக்கும். எனவே, சந்தைப்போட்டியில் சிறந்த தேர்வாக எலான்ட்ராவை மாற்றும் முயற்சியை ஹூண்டாய் ஈடுபட்டுள்ளது.

Most Read Articles
English summary
Hyundai has silently updated their D-segment offering, the Elantra with new features and an updated list of equipment. The current-generation Hyundai Elantra was first introduced in the Indian market in 2016 and has been a popular offering in its segment.
Story first published: Tuesday, October 2, 2018, 12:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X