ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் சிவிடி மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மேக்னா மற்றும் அஸ்ட்டா ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கும். மேக்னா

By Saravana Rajan

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் சிவிடி மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் மட்டுமே விற்பனைக்கு வந்தது. அதேநேரத்தில், விரைவில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும் என்று ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்திருந்தது.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் சிவிடி மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்தநிலையில், புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் பெட்ரோல் எஞ்சின் தற்போது சிவிடி கியர்பாக்ஸ் மாடலிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேக்னா மற்றும் அஸ்ட்டா ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கும்.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் சிவிடி மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!

மேக்னா சிவிடி வேரியண்ட் ரூ.7.04 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், அஸ்ட்டா சிவிடி வேரியண்ட் ரூ.8.16 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் வந்துள்ளன. இது அறிமுகச் சலுகை விலையாக கருதப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் இந்த சிவிடி கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளின் விலை அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் சிவிடி மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!

தற்போதைய நிலையில், மாருதி பலேனோ, ஹோண்டா ஜாஸ் கார்களின் சிவிடி கியர்பாக்ஸ் மாடல்களைவிட குறைவான விலை கொண்ட சிவிடி மாடலாக எலைட் ஐ20 இருக்கிறது. மாருதி பலேனோ சிவிடி மாடல் ரூ.7.10 லட்சத்திலும், ஹோண்டா ஜாஸ் சிவிடி மாடால் ரூ.7.71 லட்சத்திலும் கிடைக்கிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் சிவிடி மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்லது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் சிவிடி மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் டீசல் மாடலில் 1.4 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் சிவிடி மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் டியூவல் ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய இரண்டும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக அனைத்து வேரியண்ட்டுகளிலும் கொடுக்கப்படுகிறது. இதுதவிர, ஏராளமான பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் இடம்பெற்றுள்ளது.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் சிவிடி மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!

நாடு முழுவதும் உள்ள ஹூண்டாய் டீலர்களில் எலைட் ஐ20 சிவிடி மாடலுக்கு முன்பதிவு பெறப்படுகிறது. விரைவில் டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்க இருக்கிறது. நகர்ப்புறத்தில் ஓட்டுபவர்களுக்கு மிகச் சிறந்த சாய்ஸாக இந்த புதிய சிவிடி மாடல் இருக்கும்.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் சிவிடி மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!

ஏஎம்டி உள்ளிட்ட பிற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட கார்களில் கியர் மாற்றத்தின்போது சிறிய அதிர்வு தெரியும். ஆனால், சிவிடி கியர்பாக்ஸ் மாடலில் அந்த அதிர்வு இல்லாமல் மிக ஸ்மூத்தாக இருக்கும். தற்போது பல மாடல்களில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு வருகிறது.

Article Published On: Tuesday, May 22, 2018, 10:55 [IST]
English summary
Hyundai Elite i20 CVT Automatic Launched In India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+