இயான் காருக்கு மாற்றாக வரும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ!!

மார்க்கெட்டில் மிக நீண்ட காலமாக இருக்கும் இயான் காருக்கு விடை கொடுக்க ஹூண்டாய் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த காருக்கு பதிலாக புதிய சான்ட்ரோ காரை நிலைநிறுத்தவும் திட்டமி

By Saravana Rajan

மார்க்கெட்டில் மிக நீண்ட காலமாக இருக்கும் இயான் காருக்கு விடை கொடுக்க ஹூண்டாய் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த காருக்கு பதிலாக புதிய சான்ட்ரோ காரை நிலைநிறுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இயான் காருக்கு மாற்றாக வரும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ!!

ஏஎச்2 என்ற குறியீட்டுப் பெயரில் புதிய பட்ஜெட் கார் மாடலை ஹூண்டாய் மோட்டார்ஸ் தயாரித்துள்ளது. தற்போது சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் வைத்து இந்த கார் இறுதிக் கட்ட சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

இயான் காருக்கு மாற்றாக வரும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ!!

இந்த கார் இயான் மற்றும் கிராண்ட் ஐ10 கார்களுக்கு இடையிலான ரகத்தில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்த கார் இயான் காருக்கு மாற்றாக நிலைநிறுத்தப்பட இருப்பதாத தெரிய வந்துள்ளது.

இயான் காருக்கு மாற்றாக வரும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ!!

அதேநேரத்தில், ஹூண்டாய் இயான் கார் விற்பனை உடனடியாக நிறுத்தப்படாது. புதிய சான்ட்ரோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், ஓரளவு விற்பனையில் வலு சேர்த்த பின்னர் இயான் கார் மாடலை கழற்றிவிடுவதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இயான் காருக்கு மாற்றாக வரும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ!!

2020ம் ஆண்டில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் நடைமுறைக்கு வரும்போது, புதிய சான்ட்ரோ கார்தான் ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரம்ப ரக மாடலாக விற்பனையில் இருக்கும். எனவே, புதிய சான்ட்ரோ கார் இயான் மற்றும் விற்பனை நிறுத்தப்பட்ட பழைய ஐ10 கார்களின் இடத்தை தக்க வைக்கும்.

இயான் காருக்கு மாற்றாக வரும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ!!

இயான் கார் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டாலும், அதே பிளாட்ஃபார்மை பயன்படுத்தி எதிர்காலத்தில் புதிய பட்ஜெட் கார்களை தயாரிக்கவும் ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, முதலீடு இல்லாமல் புதிய கார் மாடல்களை உருவாக்கும் வாய்ப்பை ஹூண்டாய் வசம் இருக்கிறது.

இயான் காருக்கு மாற்றாக வரும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ!!

மேலும், புதிய கார்களுக்கு உற்பத்தி பிரிவில் வழிவிடும் வகையில் இயான் உற்பத்தி நிறுத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனை ஹூண்டாய் சப்ளையர்கள் சிலர் உறுதி செய்துள்ளதாகவும் தெரிகிறது. இதனிடையே, புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் வரும் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Hyundai is planning to discontinue their Eon hatchback offering in India. The Korean carmaker will replace the ageing Eon, with the upcoming hatchback, codenamed AH2.
Story first published: Monday, August 6, 2018, 11:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X