ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் பேஸ் மாடலில் டூயல் ஏர்பேக் வசதி!

கார்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கு கார் நிறுவனங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலு

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் விலை குறைவான வேரியண்ட்டுகளிலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் பேஸ் மாடலில் டூயல் ஏர்பேக் வசதி!

கார்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கு கார் நிறுவனங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், பட்ஜெட் கார்களில் கூட இப்போது சிறப்பான பாதுகாப்பு வசதிகளை அளிக்கின்றன.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் பேஸ் மாடலில் டூயல் ஏர்பேக் வசதி!

அந்த வகையில், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் டூயல் ஏர்பேக்குகள் மற்றும் இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் பேஸ் மாடலில் டூயல் ஏர்பேக் வசதி!

தற்போது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் எரா, மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்த மூன்று வேரியண்ட்டுகளிலுமே மேற்கண்ட பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் பேஸ் மாடலில் டூயல் ஏர்பேக் வசதி!

விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டில் கூடுதலாக ரியர் பார்க்கிங் சென்சார், ரியர் வியூ கேமரா ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. விபத்தின்போது கதவுகள் தானாக திறக்கும் வசதியும் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டில் வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் பேஸ் மாடலில் டூயல் ஏர்பேக் வசதி!

இதன்மூலமாக, பட்ஜெட் கார் மார்க்கெட்டில், அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்களில் ஒன்றாக ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் மாறி இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனையில் முன்னிலை வகிக்கும் இந்த காரின் விலை குறைவான வேரியண்ட்டுகளிலும் இப்போது அதிசிறந்த பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகவே பார்க்க முடியும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் பேஸ் மாடலில் டூயல் ஏர்பேக் வசதி!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரில் 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் பேஸ் மாடலில் டூயல் ஏர்பேக் வசதி!

மேலும், இதன் டீசல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த மாடலானது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. பட்ஜெட் கார் மார்க்கெட்டில் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் அந்தஸ்துடன் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 வலம் வருகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் பேஸ் மாடலில் டூயல் ஏர்பேக் வசதி!

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காரைத் தொடர்ந்து தற்போது கிராண்ட் ஐ10 காரிலும் ஏர்பேக்குகள் மற்றும் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக அனைத்து வேரியண்ட்டுகளிலும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Hyundai is now offering safety features like dual front airbags and ABS with EBD as standard across all variants of the Grand i10 car.
Story first published: Monday, October 1, 2018, 17:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X