ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காரை ஆன்லைனில் முன்பதிவு செய்வோருக்கு சலுகை மழை!!

Written By:

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காருக்கு புதுமையான ஆன்லைன் முன்பதிவு திட்டத்தை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக கவர்ச்சிகரமான பரிசுகளையும், சேமிப்புச் சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெற வாய்ப்புள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காருக்கு சலுகைகளுடன் ஆன்லைன் முன்பதிவு!

ஹூண்டாய் HyBuy என்ற பெயரில் எக்ஸ்சென்ட் காருக்கான இந்த சிறப்பு ஆன்லைன் முன்பதிவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு பரிசுகள், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் ரூ.78,500 மதிப்பிலான சேமிப்புச் ச லுகைகளை பெறுவதற்கான வாய்ப்புகளை வாடிக்கையாளர் பெற முடியும்.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காருக்கு சலுகைகளுடன் ஆன்லைன் முன்பதிவு!

இந்த சலுகைகளை பெறுவதற்கு ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்வது அவசியம். www.hybuy.com என்ற இணையப் பக்கத்தில் சென்று உங்களது சுய விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர், ஹூண்டாய் HyBuy திட்டத்தை உங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலமாக நண்பர்கள் மற்றும் உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காருக்கு சலுகைகளுடன் ஆன்லைன் முன்பதிவு!

இந்த பகிர்வுக்கு எந்த அளவுக்கு நண்பர்கள் மூலமாக பகிரப்படுகிறதோ, அந்த அளவுக்கு பரிசுகளை தொடர்ந்து வெல்ல முடியும். இந்த திட்டத்தின் கீழ் 250 எக்ஸ்சென்ட் கார்களை மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காருக்கு சலுகைகளுடன் ஆன்லைன் முன்பதிவு!

எனவே, முன்பதிவு செய்யும் 250 நபர்களில் சமூக வலைதளங்கள் மூலமாக இந்த திட்டத்தை அதிக அளவு கொண்டு செல்லும் வாடிக்கையாளர்களில் ஒருவருக்கு அமேஸான் எக்கோ டாட் சாதனத்தையும், ஒருவர் நீங்கள் வாங்கப்போகும் எக்ஸ்சென்ட் காருக்கு அன்டர்பாடி கோட்டிங் கட்டணமில்லாமல் பெறுவதற்கு வழி இருக்கிறது.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காருக்கு சலுகைகளுடன் ஆன்லைன் முன்பதிவு!

அதிகபட்சமாக சமூக வலைதளங்களில் பகிர்வுகள் மற்றும் விருப்பங்களை பெறும் ஒரு வாடிக்கையாளருக்கு மேற்கண்ட இரண்டு சலுகைகளுடன் சேர்த்து காரை அலங்கரித்து கொடுக்கும் சலுகையையும் பெறுவார். இந்த 250 பேரில் ஒரு அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் ஹாங்காங் நகரில் உள்ள டிஸ்னிலேண்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பையும் பெறலாம்.

?rel=0&wmode=transparent" frameborder="0">

இந்த திட்டத்தின் கீழ் ரூ.10,000 முன்பணம் செலுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். அப்போதே, உங்களுக்கு அருகாமையிலுள்ள டீலர் விபரத்தையும் கொடுக்க வேண்டும். டெலிவிரி கொடுக்கும் பணிகள் அந்த டீலர் வாயிலாக மேற்கொள்ளப்படும்.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காருக்கு சலுகைகளுடன் ஆன்லைன் முன்பதிவு!

இந்த சிறப்பு சேமிப்பு சலுகை திட்டம் நேற்று துவங்கிய நிலையில், அடுத்த மாதம் 10ந் தேதி வரை அமலில் இருக்கும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 250 வாடிக்கையாளர்கள் மட்டுமே மேற்கண்ட சலுகைகளை பெற முடியும் என்பதால், முன்பதிவுக்கு முந்துங்கள்.

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Hyundai Motors India Limited (HMIL) recently launched the 3rd phase of the innovative digital marketing campaign - 'HyBuy' for their XCENT. This month-long campaign will be held between 10th April to 10th May.
Story first published: Wednesday, April 11, 2018, 14:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark