ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்சென்ட் கார்களில் புதிய வசதிகள்!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் மேக்னா வேரியண்ட்டிலும், ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காரின் டாப் வேரியண்ட்டிலும் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்சென்ட் கார்களில் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்சென்ட் கார்களில் புதிய வசதிகள்!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் மேக்னா வேரியண்ட்டிலும், ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காரின் டாப் வேரியண்ட்டிலும் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்சென்ட் கார்களில் புதிய வசதிகள்!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரில் ரூஃப் ரெயில்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், ரியர் ஸ்பாய்லர் மறறும் பக்கவாட்டில் பிளாஸ்டிக் சட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் புதிய 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹூண்டாய் ஐ-புளூ அப்ளிகேஷன், பின் இருக்கைக்கு ஏசி வென்ட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்சென்ட் கார்களில் புதிய வசதிகள்!

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காரின் எஸ்எக்ஸ் மற்றும் ஆப்ஷனல் வேரியண்ட்டில் பூட் ரூம் மூடிக்கான ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஐ-புளூ அப்ளிகேஷன், வயர்லெஸ் சார்ஜர் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்சென்ட் கார்களில் புதிய வசதிகள்!

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்சென்ட் கார்கள் பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார்களில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 81 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 75 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வாங்க முடியும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்சென்ட் கார்களில் புதிய வசதிகள்!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் மாடலானது எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் டூயல் டோன் வண்ணம் மற்றும் அஸ்ட்டா ஆகிய 5 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதில், மேக்னா வேரியண்ட்டில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வேரியண்ட் ரூ.5.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்சென்ட் கார்களில் புதிய வசதிகள்!

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார் மாடலானது இ, எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் ஆகிய 4 வேரியண்ட்டில் கிடைக்கிறது. இதில், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் வேரியண்ட்டுகளில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. எஸ்எக்ஸ் வேரியண்ட் ரூ.6.98 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், எஸ்எக்ஸ் ஆப்ஷனல் வேரியண்ட் ரூ.7.74 லட்சத்திலும் கிடைக்கும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்சென்ட் கார்களில் புதிய வசதிகள்!

இந்த புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதுடன், கிராண்ட் ஐ10 காருக்கு ரூ.65,000 மதிப்புடைய சேமிப்பு சலுகைகளையும், எக்ஸ்சென்ட் காருக்கு ரூ.90,000 வரையிலான சேமிப்பு மற்றும் தள்ளுபடி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்சென்ட் கார்களில் புதிய வசதிகள்!

இந்த புதிய வசதிகள் மற்றும் தள்ளுபடி சலுகைகள் மூலமாக தங்களது ரகத்தில் மதிப்பு வாய்ந்த மாடல்களாக கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்சென்ட் கார்கள் முன்னிலை பெறுகின்றன. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வை அளிக்கும் என நம்பலாம்.

Article Published On: Tuesday, November 20, 2018, 13:59 [IST]
English summary
Hyundai has updated their i10 Grand and Xcent models with additional equipment and features. The updated Hyundai i10 Grand and Xcent are now better equipped to take on the rivals in their respective segment. The updates have been made for the mid-spec variant of the i10 Grand (Magna) while the Xcent gets updates for its top-spec variant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+