கிராஷ் டெஸ்ட்டில் முட்டி மோதி ஆவ்ரேஜ் மார்க் வாங்கிய ஹூண்டாய் எலைட் ஐ20!

ஒட்டுமொத்த தர மதிப்பீடுகளின் அடிப்படையில் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் 5க்கு 3 என்ற தர மதிப்பீட்டை பெற்றது. இது கூட பரவாயில்லை. இந்த கிராஷ் டெஸ்ட் ஆய்வு முடிவில், ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் கட்டுமானம

குளோபல் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் மத்திய தர மதிப்பீட்டை பெற்றிருப்பதுடன், கட்டுமானம் குறித்த அதிர்ச்சியான விஷயமும் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கிராஷ் டெஸ்ட்டில் முட்டி மோதி ஆவ்ரேஜ் மார்க் வாங்கிய ஹூண்டாய் எலைட் ஐ20!

தென் ஆப்ரிக்காவில் விற்பனையாகும் ஹூண்டாய் எலைட் ஐ20 காரை குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தியது. இது கிட்டத்தட்ட இந்தியாவில் விற்பனையாகும் மாடலுக்கு இணையான பாதுகாப்பு தர அம்சங்களை பெற்றிருக்கிறது.

கிராஷ் டெஸ்ட்டில் முட்டி மோதி ஆவ்ரேஜ் மார்க் வாங்கிய ஹூண்டாய் எலைட் ஐ20!

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 2018ம் ஆண்டு ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் சீட்பெல்ட் ப்ரீடென்ஷனர் ஆகிய பாதுகாப்பு வசதிகள் இருந்தன. இந்த கார் 1,286 கிலோ கெர்ப் எடை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராஷ் டெஸ்ட்டில் முட்டி மோதி ஆவ்ரேஜ் மார்க் வாங்கிய ஹூண்டாய் எலைட் ஐ20!

இந்த காரை மணிக்கு 64 கிமீ வேகத்தில் தடுப்பு மீது மோதச் செய்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில், புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் அதிகபட்சமான 17 புள்ளிகளுக்கு 10.15 புள்ளிகளை பெற்றது. சிறியவர்களுக்கான பாதுகாப்பில் அதிகபட்சமான 49 புள்ளிகளுக்கு 18.16 புள்ளிகளை பெற்றது.

கிராஷ் டெஸ்ட்டில் முட்டி மோதி ஆவ்ரேஜ் மார்க் வாங்கிய ஹூண்டாய் எலைட் ஐ20!

ஒட்டுமொத்த தர மதிப்பீடுகளின் அடிப்படையில் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் 5க்கு 3 என்ற தர மதிப்பீட்டை பெற்றது. இது கூட பரவாயில்லை. இந்த கிராஷ் டெஸ்ட் ஆய்வு முடிவில், ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் கட்டுமானம் மற்றும் தரை தள பகுதி கட்டுமானத் தரம் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கிராஷ் டெஸ்ட்டில் முட்டி மோதி ஆவ்ரேஜ் மார்க் வாங்கிய ஹூண்டாய் எலைட் ஐ20!

தென் ஆப்ரிக்காவில் விற்பனையில் இருக்கும் மாடலில் சைடு பாடி ஏர்பேக்குகள், கர்டெயின் ஏர்பேக்குகல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் ஆகியவை இல்லாததும் குறைவான மதிப்பீடு பெறுவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்தியாவில் விற்பனையாகும் ஹூண்டாய் எலைட் ஐ20 மாடலில் டூயல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், விபத்தின்போது கதவுகள் தானாக திற்ககும் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன. விலை உயர்ந்த மாடலில் சைடு மற்றும் கர்டெயின் ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், கேமரா மற்றும் ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் கொடுக்கப்படுகின்றன.

கிராஷ் டெஸ்ட்டில் முட்டி மோதி ஆவ்ரேஜ் மார்க் வாங்கிய ஹூண்டாய் எலைட் ஐ20!

எனவே, இந்தியாவில் விற்பனையாகும் டாப் வேரியண்ட் மாடல் சற்று கூடுதல் பாதுகாப்பான மாடலாக கருதினாலும், கட்டுமானம் குறித்த குளோபல் என்சிஏபி அமைப்பின் ஆய்வு முடிவுகள் சற்று ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் கொடுக்கின்றன. இந்தியாவில் விற்பனையில் முன்னிலை வகிக்கும் பல கார் மாடல்கள் கிராஷ் டெஸ்ட்டில் தொடர்ந்து சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Saturday, November 3, 2018, 10:58 [IST]
English summary
The Global NCAP (New Car Assessment Programme) has revealed the crash test results for the Hyundai i20. The Hyundai i20 has scored a three-star safety rating in the latest crash test conducted by the Global NCAP.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+