2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் 2018 ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் கசிந்தன..!!

Written By:

அறிமுக விழா நடைபெறுவதற்கு முன்னரே ஹூண்டாயின் புதிய ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த காருக்கான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

2018 ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் கசிந்தன..!!

இந்தியாவில் விற்பனையாகும் கார்களின் ப்ரீமியம் தர ஹேட்ச்பேக் கார்களில் பிரபலமான மாடல் என்றால் அது ஐ20.

ஹோண்டா ஜாஸ், மாருதி பலேனோ கார்கள் இருந்த போதிலும், ஹூண்டாய் ஐ20-க்கான சந்தை மிக பெரியது.

2018 ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் கசிந்தன..!!

தற்போது இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஹூண்டாய் தயாரித்து வரும் நிலையில், புதிய தோற்றம் கொண்ட ஐ20 காரின் புகைப்படங்கள் இணையத்தில் ஒரு ரவுண்டு வருகின்றன.

2018 ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் கசிந்தன..!!

புகைப்படங்கள் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் தகவல் படி, ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் உள் மற்றும் வெளி கட்டமைப்புகளில் கவனிக்கத்தக்க சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

2018 ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் கசிந்தன..!!

காரின் முன்பக்கத்தில் முற்றிலும் புதிய பரந்தளவிலான பம்பர் இடம்பெற்றுள்ளது. ஹூண்டாய்-க்கான கேஸ்கேடு கிரில்லில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

2018 ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் கசிந்தன..!!

தவிர காரின் முகப்பு விளக்குகளிலும் பட்டி டிக்கரிங் பார்க்கப்பட்டுள்ளன. ஐ20 காரின் முன்பக்கத்தில் பிரொஜக்டர் விளக்குகள், எல்.இ.டி பகல்நேர விளக்குகள் மற்றும் ஹெட்லைட் கிளஸ்டர் அகியவை அமைக்கப்பட்டுள்ளன.

2018 ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் கசிந்தன..!!

இவற்றை தவிர ஃபேஸ்லிஃப்ட் ஐ20 கார், தற்போது விற்பனையில் உள்ள மாடலை போலவே காட்சியளிக்கிறது. இருந்தாலும் காரின் பின்பகுதியில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2018 ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் கசிந்தன..!!

முன்னர் பம்பரில் அமைக்கப்பட்ட கார் எண் பலகை தற்போது பூட் லிட்டிற்கு மேலே உள்ளது. டெயில்-கேட் புதியதாக காட்சியளிக்கிறது. எல்.இ.டி டெயில் விளக்குகளும் வித்தியாசமாக உள்ளன. புதிய அலாய் வீல்கள் இந்த காரின் பொருத்தப்பட்டுள்ளன.

2018 ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் கசிந்தன..!!

அதேபோல காரின் உள்கட்டமைப்பில் புதிய மற்றும் பெரிய இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், ஹூண்டாய் வெர்னா காரில் இருப்பது போலவே 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் காரின் டாஷ் போர்டு டூயல் நிறத்தில் கருப்பு மற்றும் பீஜ் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2018 ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் கசிந்தன..!!

ஐ20 காரின் மத்திய கன்சோல் கிரோம் நிறத்தில் உள்ளது. பட்டன் உட்பட இன்பொடெயின்மென்ட் சிஸ்டத்தை சுற்றியுள்ள வசதிகள் அனைத்தும் அதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்பம் சார்ந்த தேவைகளில் ஆப்பிள் கார்பிளே கனெக்ட்டிவிட்டி, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற தேவைகள் இந்த காரில் இடம்பெறலாம்.

2018 ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் கசிந்தன..!!

இது தவிர ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், சென்சாருடன் கூடிய பொருத்தப்பட்ட ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படலாம்.

2018 ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் கசிந்தன..!!

தற்போதைய மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் திறன் கொண்ட எஞ்சின்கள் தான் இந்த புதிய மேம்படுத்தப்பட்ட மாடலிலும் இடம்பெறுகிறது.

2018 ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் கசிந்தன..!!

பெட்ரோல் மாடல் ஐ20 கார் 82 பிஎச்பி பவர் மற்றும் 115 என்.எம் டார்க் திறனை வழங்கும். அதேபோல டீசல் யூனிட் ஐ20 கார் 89 பிஎச்பி பவர் மற்றும் 220 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

2018 ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் கசிந்தன..!!

தற்போதைய ஐ20 காரின் பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. அதேபோல டீசல் மாடல் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் தேர்வை பெற்றிருக்கும்.

இவற்றை விடுத்து புதிய ஃபேஸ்லிஃப்ட் ஐ20 காரின் பெட்ரோல் எஞ்சின் கார் மட்டும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேவையை பெற்றிருக்கும்.

2018 ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் கசிந்தன..!!

இந்தியாவின் ப்ரீமியர் ஹேட்ச்பேக் செக்மென்ட்டை தன் வசம் வைத்துள்ள மாருதி பலேனோவிற்கு சரியான போட்டியை ஏற்படுத்தும் வகையில் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் விரைவில் களம் காணவுள்ளது.

2018 ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் கசிந்தன..!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஐ20 ஃபேஸ்லிஃப்ட் கார் வெளியான பிற்பாடு, இந்தியாவின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்டில் அதீத போட்டியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Read in Tamil: 2018 Hyundai i20 Facelift Images At Dealership Leaked Launch At Auto Expo 2018. Click for Details...
Story first published: Saturday, February 3, 2018, 15:38 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark