ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி இந்திய அறிமுகம் உறுதியானது... 300 கிமீ தூரம் பயணிக்கும்!

Written By:

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கோனா மின்சார எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்த உறுதியானத் தகவல் வெளியாகி இருக்கிறது.

 ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி இந்திய அறிமுகம் உறுதியானது

ஜெனீவா நகரில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய கோனா மின்சார எஸ்யூவியை காட்சிக்கு வைத்திருக்கிறது. சர்வதேச அளவில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது மின்சார கார் மாடலாக வருவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி இந்திய அறிமுகம் உறுதியானது

இந்த நிலையில், ஜெனீவா மோட்டார் ஷோவில் நடந்த நிகழ்ச்சியில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒய்கே. கூ கலந்து கொண்டார். அப்போது, புதிய கோனா எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து முக்கியத் தகவல்களை தெரிவித்துள்ளார்.

 ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி இந்திய அறிமுகம் உறுதியானது

இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா தளத்திடம் அவர் கூறியிருப்பதாவது," அடுத்த ஆண்டு மத்தியில் புதிய கோனா மின்சார எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

 ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி இந்திய அறிமுகம் உறுதியானது

"கோனா மின்சார எஸ்யூவிக்கு பெரிய அளவிலான விற்பனையை எதிர்பார்க்கவில்லை. எனினும், எங்களது தொழில்நுட்ப வல்லமையையும், மின்சார கார்களின் எதிர்காலத்திற்காக நாங்கள் எடுத்து வரும் முயற்சிகளையும், அர்ப்பணிப்பையும் எடுத்து காட்டும் விதத்திலேயே, அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

 ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி இந்திய அறிமுகம் உறுதியானது

ஹைப்ரிட் கார்களுக்கு மானியத் திட்டங்கள் எதுவும் இல்லை. எனவே, மின்சார கார் தயாரிப்பில் முழு கவனத்தையும் செலுத்துவோம்," என்று கூறியுள்ளார்.

 ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி இந்திய அறிமுகம் உறுதியானது

இந்த நிலையில், இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியானது பேட்டரி முழு சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 300 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

இந்த எஸ்யூவியில் 39.2kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது.

 ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி இந்திய அறிமுகம் உறுதியானது

இந்த எஸ்யூவியில் இருக்கும் மின்மோட்டார் அதிகபட்சமாக 134 பிஎச்பி பவரையும், 395 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை 9.7 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்க 155 கிமீ வேகம் வரை செல்லும்.

 ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி இந்திய அறிமுகம் உறுதியானது

புதிய ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் லித்தியம் அயான் பேட்டரியை 54 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யும் திறன் வாய்ந்ததாக இருக்கும். சாதாரணமாக வீட்டிலிருந்து பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 6 மணி 10 நிமிடங்கள் பிடிக்கும்.

 ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி இந்திய அறிமுகம் உறுதியானது

பேட்டரி மற்றும் மின் மோட்டார் இருந்தாலும், உட்புற இடவசதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் இடவசதியிலும் மாற்றங்கள் இல்லை என்பதுடன், முன்புறத்திலும் பூட் ரூம் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி இந்திய அறிமுகம் உறுதியானது

இந்த எஸ்யூவி காரில் 5 பேர் செல்வதற்கான இருக்கை வசதி இருக்கிறது. வழக்கம்போல் ஹூண்டாய் கார்களில் இடம்பெறும் நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்புடன் வருகிறது.

 ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி இந்திய அறிமுகம் உறுதியானது

மாதத்திற்கு 50 முதல் 60 கோனா மின்சார எஸ்யூவிகள் விற்பனையாகும் என்பது ஹூண்டாய் நிறுவனத்தின் எதிர்பார்ப்பு. ஆனால், ரூ.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வரும் என்ற தகவல்தான் இந்த எஸ்யூவியின் விற்பனைக்கு பாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
While there have been reports of the Hyundai Kona electric launch in India, Autocar has confirmed that the Kona EV will be launched in India by mid-2019.
Story first published: Wednesday, March 7, 2018, 17:28 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark