ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை!
டெல்லியில், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவிய நேரத்தில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான இந்திய நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் இந
ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் வைத்து தொடர்ந்து தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் சோதனை ஓட்டத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களையும், கூடுதல் விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

டெல்லியில், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவிய நேரத்தில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் ஹூண்டாய் ஃபேன் க்ளப் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பெரும்பாலான இந்திய நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த கார் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளிநாடுகளில் இரண்டு மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றன. 39kW மற்றும் 64kW திறன் கொண்ட இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த 39kW பேட்டரி பொருத்தப்பட்ட மாடல், முழுமையாக பேட்டரி சார்ஜ் செய்யப்படும்பட்சத்தில், அதிகபட்சமாக 312 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த மாடலில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 134 பிஎச்பி பவரையும், 395 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். மணிக்கு 155 கிமீ வேகம் வரை தொடும் திறனை பெற்றிருக்கும்.

கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியின் 64kW பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 482 கிமீ தூரம் வரை பயணிக்கும். அதிகபட்சமாக 204 பிஎச்பி பவரை அளிக்கும் வல்லமையை பெற்றிருக்கும். இதில், 39kW பேட்டரி பொருத்தப்பட்ட மாடல்தான் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிகிறது.

இரண்டு மாடல்களின் பேட்டரியையும் 100kW டிசி குயிக் சார்ஜர் மூலமாக வெறும் 50 நிமிடத்தில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். சாதாரணமான ஏசி சார்ஜர் மூலமாக பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்றுவதற்கு 6 மணிநேரம் பிடிக்கும். இந்த காரை விற்பனைக்கு கொண்டு வரும்போது முக்கிய நகரங்களில் சார்ஜ் நிலையங்களை அமைக்கவும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் இருக்கும் மாடலின் ஸ்பை படங்களை பார்க்கும்போது, வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் மாடல்களை ஒத்திருக்கிறது. 17 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய ஹூண்டாய் கார்களின் டிசைன் தாத்பரியங்களை பிரதிபலித்தாலும், முகப்பில் க்ரில் அமைப்பு இல்லாத டிசைனை பெற்றிருப்பது இதன் முக்கிய அம்சமாக இருக்கிறது.

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இதன் முக்கிய அம்சம். இந்த காரில் எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

ஏர்பேக்குகள், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக் சிஸ்டம், லேன் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், இந்தியாவில் அனைத்து வசதிகளும் தக்க வைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முக்கிய உதிரிபாகங்களாக தருவிக்கப்பட்டு, சென்னையில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் இந்தியா வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications