இந்தியாவில் ரிலீசாகும் 9 புதிய ஹூண்டாய் கார்களின் பட்டியல்!

இந்தியாவில் 9 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. அந்த புதிய கார்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இந்தியாவில் 9 புதிய கார் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட 4 மாடல்களும், 5 புத்தம் புதிய கார் மாடல்களும் இதில் அடக்கம். அந்த கார்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 புதிய சான்ட்ரோ

புதிய சான்ட்ரோ

வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற சான்ட்ரோ பிராண்டில் புத்தம் புதிய கார் மாடலை ஹூண்டாய் அறிமுகம் செய்ய இருக்கிறது. சான்ட்ரோ பெயரில் வந்தாலும், இந்த புதிய கார் வடிவமைப்பில் முற்றிலும் புதிய மாடலாக இருக்கும்.

 இந்தியாவில் ரிலீசாகும் 9 புதிய ஹூண்டாய் கார்களின் பட்டியல்!

ஹூண்டாய் ஐ10 காரின் அடிப்படையில் நவீன டிசைன் தாத்பரியங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வர இருக்கிறது. நீளத்திலும், அகலத்திலும் சற்று பெரிய காராக இருக்கும். வரும் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஹூண்டாய் இயான் மற்றும் கிராண்ட் ஐ10 கார்களுக்கு இடையிலான விலையில் நிலைநிறுத்தப்படும்.

காம்பேக்ட் எஸ்யூவி

காம்பேக்ட் எஸ்யூவி

மாருதி பிரெஸ்ஸா மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்களின் விற்பனை எண்ணிக்கை சிறப்பாக இருந்து வருவதால், இந்த செக்மென்ட்டில் ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ். 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வரும் இந்த புதிய எஸ்யூவி 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கர்லினோ கான்செப்ட் எஸ்யூவியின் அடிப்படையில் வர இருக்கிறது.

 இந்தியாவில் ரிலீசாகும் 9 புதிய ஹூண்டாய் கார்களின் பட்டியல்!

குட்டி க்ரெட்டா போன்று வடிவமைப்பிலும் அசத்தலாக இருக்கும். இந்த எஸ்யூவி பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்

புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. முகப்பு க்ரில் அமைப்பு உள்ளிட்ட இடங்களில் மாறுதல்கள் செய்யப்பட்டு இருப்பதுடன், கண்ணாடி கூரை அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கும்.

 இந்தியாவில் ரிலீசாகும் 9 புதிய ஹூண்டாய் கார்களின் பட்டியல்!

இந்த காரில் சென்டர் கன்சோலில் சற்று பெரிய திரை அமைப்பு கொடுக்கப்பட இருக்கிறது. எஞ்சின் ஆப்ஷன்களில் மாற்றம் இருக்காது. ஆனால், அதிக மைலேஜ் தரும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது.

புதிய கிராண்ட் ஐ10

புதிய கிராண்ட் ஐ10

கடந்த ஆண்டு புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் வந்திருப்பது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

 இந்தியாவில் ரிலீசாகும் 9 புதிய ஹூண்டாய் கார்களின் பட்டியல்!

எனவே , புதிய தலைமுறை அம்சங்களுடன் கிராண்ட் ஐ10 காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இந்த காரில் பல பிரிமியம் அம்சங்கள் இடம்பெற்று இருக்கும். இன்னும் ஓர் ஆண்டில் இந்த புதிய கிராண்ட் ஐ10 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஹூண்டாய் எக்ஸெண்ட்

ஹூண்டாய் எக்ஸெண்ட்

புதிய தலைமுறை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் அடிப்படையிலான புதிய எக்ஸெண்ட் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏனெனில், இந்த காருக்கு மாருதி டிசையர் மற்றும் புதிய ஹோண்டா அ்மேஸ் கார்களால் நெருக்கடி இருக்கிறது.

 இந்தியாவில் ரிலீசாகும் 9 புதிய ஹூண்டாய் கார்களின் பட்டியல்!

இந்த சூழலில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை எக்ஸெண்ட் காரை ஹூண்டாய் மோட்டார்ஸ் அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய எலைட் ஐ20

புதிய எலைட் ஐ20

தனது வடிவமைப்பால் வாடிக்கையாளர்களை வசீகரித்த ஹூண்டாய் எலைட் ஐ20 கார் விற்பனையில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. இதனை தக்க வைக்கும் விதத்தில், புதிய தலைமுறை அம்சங்களுடன் எலைட் ஐ20 காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

 இந்தியாவில் ரிலீசாகும் 9 புதிய ஹூண்டாய் கார்களின் பட்டியல்!

அண்மையில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் புதிய பொலிவுடன் எலைட் ஐ20 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில்,இன்னும் ஓர் ஆண்டு இடைவெளியில் முற்றிலும் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கிரெட்டா

புதிய கிரெட்டா

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எஸ்பி பிளாட்ஃபார்மில் புதிய கிரெட்டா கார் உருவாக்கப்பட்டு வருகிறது. சிறப்பான கட்டுமானம், இலகு எடை கொண்ட மாடலாக மேம்படுத்தப்பட இருக்கிறது புதிய கிரெட்டா கார்.

 இந்தியாவில் ரிலீசாகும் 9 புதிய ஹூண்டாய் கார்களின் பட்டியல்!

தற்போதுள்ள மாடலைவிட மிகச் சிறப்பான வசதிகள் மற்றும் சிறப்பான இடவசதியுடன் புதிய கிரெட்டா கார் மேம்படுத்தப்பட இருக்கிறது. சக்திவாய்ந்த புதிய எஞ்சின் ஆப்ஷன்களுடன் புதிய கிரேட்டா காரை களமிறக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

டூஸான் ஃபேஸ்லிஃப்ட்

டூஸான் ஃபேஸ்லிஃப்ட்

ஜீப் காம்பஸ் அறிமுகத்தால் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவிக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. எனவே, புதிய மாடலை விரைவில் அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸ் தள்ளப்பட்டு இருக்கிறது.

 இந்தியாவில் ரிலீசாகும் 9 புதிய ஹூண்டாய் கார்களின் பட்டியல்!

வெளிநாடுகளில் புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது குறித்த ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. வடிவமைப்பில் மிகச் சிறப்பான மாற்றங்களை கண்டிருப்பதுடன், இன்டீரியர் அசத்தலாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கோனா கார்

கோனா கார்

அடுத்த ஆண்டு தனது கோனா எலக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. ஐ20 காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் கார் பிரிமியம் ஹேட்ச்பேக் ரகத்திலான வசதிகளை பெற்றிருக்கிறது.

 இந்தியாவில் ரிலீசாகும் 9 புதிய ஹூண்டாய் கார்களின் பட்டியல்!

இந்த கார் வடிவமைப்பு நவீன அம்சங்களுடன் வசீகரிக்கிரது. இந்த காரில் 39.2kWh பேட்டரி மற்றும் 64kWh பேட்டரி கொண்ட இரண்டு மாடல்களில் வர இருக்கிறது. முழுமையாக சார்ஜ் செய்தால்ல 240 கிமீ தூரம் வரை செல்லும். ரூ.25 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் மாடலாக வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Tuesday, March 20, 2018, 13:50 [IST]
English summary
Hyundai To Launch 9 New Car Models In India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+