ரெனோ க்விட் காருக்கு போட்டியாக மினி எஸ்யூவியை களமிறக்கும் ஹூண்டாய்!!
ரெனோ க்விட் காருக்கு போட்டியாக புதிய மைக்ரோ எஸ்யூவியை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ரெனோ க்விட் காருக்கு போட்டியாக புதிய மைக்ரோ எஸ்யூவியை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வரும் 2020ம் ஆண்டிற்குள் 8 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில், 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் QXI என்ற குறியீட்டுப் பெயரில் புதிய எஸ்யூவி மாடலை ஹூண்டாய் அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இது கர்லினோ கான்செப்ட் அடிப்படையிலான மாடலாக இருக்கும் என்று தெரிவித்திருந்தோம். இந்தநிலையில், தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, காம்பேக்ட் எஸ்யூவியைவிட மிக குறைவான விலையில் அடுத்து ஒரு மைக்ரோ எஸ்யூவி ரக மாடலையும் ஹூண்டாய் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த எஸ்யூவி மாடலானது ரெனோ க்விட் காருக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும்.

இதனை ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஒய்.கே.கூ உறுதி செய்துள்ளார். எஸ்யூவி மார்க்கெட்டில் அனைத்து செக்மென்ட்டுகளிலும் எஸ்யூவி மாடல்களை நிலைநிறுத்தும் முனைப்புடன் ஹூண்டாய் செயலாற்றி வருகிறது.

புதிய மைக்ரோ எஸ்யூவியை உருவாக்கும் பணி நடந்து வருவதாகவும், இந்த புதிய எஸ்யூவி மார்க்கெட்டிற்கு வருவதற்கு மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் வரை பிடிக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த புதிய மைக்ரோ எஸ்யூவியில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அல்லது 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வடிவமைப்பிலும், வசதிகளிலும் போட்டியாளர்களைவிட மிகச் சிறப்பாக இருக்கும்.

எனவே, ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் உள்ள பல முன்னணி கார் மாடல்களுக்கு இந்த புதிய மைக்ரோ எஸ்யூவி கார் போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.4 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கலாம்.
Source: ACI


Click it and Unblock the Notifications