புதிய ஹூண்டாய் ஹேட்ச்பேக் கார் சான்ட்ரோ பெயரிலேயே வர அதிக வாய்ப்பு!

ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய வகை அறிமுகமான AH2 HATCHBACK ரக காருக்கு வாடிக்கையாளர்களிடம் உரிய பெயர் வைக்க NAAMAKARAN என்ற போட்டியை தொடங்கியது. எதிர்பாரா விதமாய் SANTRO என்ற பழைய பெயரே அனைவரின் விருப்பமாகவும் விளங்கியது.

புதிய ஹூண்டாய் ஹேட்ச்பேக் கார் சான்ட்ரோ பெயரிலேயே வர அதிக வாய்ப்பு!

இதனை தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கோரிக்கையை அலங்கரிக்கும் விதமாக ஹூண்டாய் தனது A2H வித HATCHBACK காரை சான்ட்ரோ பிராண்டிலேயே வரும் அக்டோபர் 23 விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தெரிய வந்துள்ளது.

புதிய ஹூண்டாய் ஹேட்ச்பேக் கார் சான்ட்ரோ பெயரிலேயே வர அதிக வாய்ப்பு!

போட்டியில் கலந்து கொண்ட 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் SANTRO என்ற பெயரை பரிந்துரை செய்தது அந்த காரின் மீது அவர்களுக்கான நம்பிக்கையை பலப்படுத்தும் விதமாக உள்ளது. வருகின்ற அக்டோபர் 9 ஆம் தேதி ஹூண்டாய் தனது புதிய காரின் பெயர் மற்றும் இன்ன பிற இதர விபரங்களையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Article: உங்கள் வருமானத்திற்கு ஏற்ற காரை தேர்வு செய்வதில் குழப்பமா? - காரை எப்படி தேர்வு செய்வது ?

புதிய ஹூண்டாய் ஹேட்ச்பேக் கார் சான்ட்ரோ பெயரிலேயே வர அதிக வாய்ப்பு!

செப்டம்பர் 15 வரை உங்கள் விருப்ப பெயரை NAAMAKARAN வழியே விருப்பத்தை தெரிவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுவரை ஒன்றரை லட்சம் பதில்கள் வந்துள்ளதாகவும், போட்டி முதிவதற்குள் ஐந்து லட்சம் பதில்கள் வந்தடையும் எனவும் எதிர்பார்ப்பதாக ஹூண்டாய் நிறுவன மேலாளர் புனீத் ஆனந்த் கூறியுள்ளார்.

புதிய ஹூண்டாய் ஹேட்ச்பேக் கார் சான்ட்ரோ பெயரிலேயே வர அதிக வாய்ப்பு!

மேலும் அவர் SANTRO பெயரை ஒத்துதான் தங்களது புதிய வரவு இருக்கும் எனவும் பலம் சேர்த்துள்ளார். 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஹூண்டாய் SANTRO வாகனமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விற்பனையில் சக்கை போடு போட்டது .

புதிய ஹூண்டாய் ஹேட்ச்பேக் கார் சான்ட்ரோ பெயரிலேயே வர அதிக வாய்ப்பு!

வரவிருக்கும் வாகனம் இந்த நம்பிக்கையை முன்னேற்றும் வகையிலே அமைய வேண்டும் என்பது முக்கியம். அதுமட்டுமல்லாமல் கூடுதல் சிறப்பசங்களுடன் வந்தாலொழிய இப்போதுள்ள HATCHBACK வாகனத்துடன் ஈடு குடுக்க முடியுமென்பது மிகவும் முக்கியம்.

புதிய ஹூண்டாய் ஹேட்ச்பேக் கார் சான்ட்ரோ பெயரிலேயே வர அதிக வாய்ப்பு!

ஹூண்டாய் நிறுவன சான்ட்ரோ மற்றும் இயான் போன்ற ஹேட்ச்பேக் கார்களை ஒத்துப்பார்க்கையில் இந்த புதிய AH2 வாகனம் அதிக இடம், அதிக தொழில்நுட்பம், பல சிறப்பம்சங்கள் உள்ளவையே என்பதில் ஐயமில்லை. மேலும் இவை பெட்ரோல் என்ஜின், பெட்ரோல்- CNG மற்றும் பெட்ரோல் - LPG போன்ற எரிபொருள் வகை விருப்ப நிலைகளில் கவர்ச்சிக்கும்.

Most Read Article: சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய விதி.. கார், பைக் விலை உயர்ந்தது..

புதிய ஹூண்டாய் ஹேட்ச்பேக் கார் சான்ட்ரோ பெயரிலேயே வர அதிக வாய்ப்பு!

மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, AMT எனப்படும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் இதில் கூடுதல் சிறப்பம்சம். பாதுகாப்பை நோக்குகையில் ஏர் பேக், ABS - ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை செறிவுற அமைந்திருக்கும்.

புதிய ஹூண்டாய் ஹேட்ச்பேக் கார் சான்ட்ரோ பெயரிலேயே வர அதிக வாய்ப்பு!

வரவிருக்கும் புதிய AH2 HATCHBACK வாகனம் ஹூண்டாய் பெயரை வலுப்படுத்தும் விதமாய் அமைய வேண்டும். அதாவது ஒரு சில வருடங்களாவது விற்பனை மற்றும் செயல் திறனில் சாதனை பொறிக்க வேண்டும். SANTRO என்ற பெயரே ஹூண்டாய் நிறுவனம் தேர்ந்தெடுக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

நீங்கள் உங்கள் விருப்ப பெயரை ஹூண்டாய் நிறுவனத்திற்கு பரிந்துரைத்து , நண்பர்களிடம் நான் பெயர் வாய்த்த வாகனம் என்று சொல்லி பெருமைப்படுவீராக !!

Most Read Article: விஐபி, நீதிபதிகளின் வாகனங்களுக்கு டோல்கேட்களில் சிறப்பு பாதை.. காரணம் கேட்டா கோவப்படுவீங்க..

Most Read Articles

Tamil
English summary
Previously, we had reported about Hyundai starting the Naamakaran campaign to invite name suggestions for the upcoming AH2 hatchback. Now, BusinessLine reports that the Santro is the most favourite name for the upcoming hatchback. Hyundai will launch the AH2 hatchback in India on October 23, 2018.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more