புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் முக்கிய விபரங்கள் கசிந்தன!
வரும் 23ந் தேதி புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. பட்ஜெட் விலையில் புதிய கார் மாடலை வாங்க காத்திருப்போருக்கு இந்த புதிய மாடல் மிகச் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் முக்கிய விபரங்கள் கசிந்துள்ளன. அதனை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

வரும் 23ந் தேதி புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. தீபாவளிக்கு பண்டிகையின்போது பட்ஜெட் விலையில் புதிய கார் மாடலை வாங்க காத்திருப்போருக்கு இந்த புதிய மாடல் மிகச் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், இந்த காரின் முக்கியத் தகவல்கள் கசிந்துள்ளன. புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் 3,610 மிமீ நீளமும், 1,645 மிமீ அகலமும், 1,560 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 2,400 மிமீ வீல் பேஸ் கொண்டது.

இந்த கார் நீளத்தில் போட்டியாளர்களான மாருதி செலிரியோ காரைவிட 85மிமீ வரையிலும், க்விட் காரைவிட 69 மிமீ வரையிலும் குறைவாக இருக்கிறது. ஆனால், புதிய சான்ட்ரோ காரின் வீல் பேஸ், மற்றொரு நேர் போட்டியாளரான டாடா டியாகோ காரின் வீல் பேஸும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சான்ட்ரோ கார் 160 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 235 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் ரகத்தில் வாடிக்கையாளர்களை சமரசம் செய்யும் அளவில் கருதலாம்.

இந்த காரில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 69 பிஎஸ் பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இந்த காரில் மேனுவல் கியர்பாக்ஸ்ஆப்ஷனில் வர இருக்கிறது.

மேலும், 'ஸ்மார்ட் ஆட்டோ' என்ற பெயரில் குறிப்பிடப்படும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட இருக்கிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வர இருக்கும் முதல் ஹூண்டாய் காரும் இதுதான் என்பதும் இந்த கார் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.

இந்த கார் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்று கூறுகிறது. மாருதி செலிரியோ காருடன் ஒப்பிடும்போது, புதிய சான்ட்ரோ காரின் மைலேஜ் லிட்டருரக்கு 2.8 கிமீ வரை குறைவு என்பதும் கவனிக்கத்தக்க விஷயமாக கூறலாம்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷனிலும் எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மாடலைவிட இது அதிக எரிபொருள் சிக்கனத்தையும், குறைவான எரிபொருள் செலவீனத்தையும் வழங்கும். சிஎன்ஜி எரிபொருள் கிடைக்கும் இடங்களில் சிறப்பான தேர்வாக அமையும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் ஓட்டுனருக்கான ஏர்பேக் மற்றும் அனைத்து சக்கரங்களுக்கும் சரியான அளவில் பிரேக் பவரை செலுத்தும் இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும். டாப் வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக்குகள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ரூ.3.5 லட்சம் முதல் ரூ.5.2 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிக்கு பட்ஜெட் கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
Source:Gaadiwaadi


Click it and Unblock the Notifications