அடுத்த 7 ஆண்டுகளில் 38 பசுமை கார்கள்… ஹூண்டாய் அதிரடி அறிவிப்பு

ஹூண்டாய் நிறுவனம் அடுத்த 7 ஆண்டுகளில் 38 பசுமை வாகனங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நிறுவனத்தின் துணை சேர்மன் யூய்சன் சங் தெரிவித்துள்ளார்.

By Balasubramanian

இந்தியாவின் முதல் சர்வதேச மொபிலிட்டி உச்சி மாநாடு நிதி அயோக் சார்பில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஆட்டோமொபைல் துறையில் முதலீடு செய்து வரும் பல்வேறு தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த 7 ஆண்டுகளில் 38 பசுமை கார்கள்… ஹூண்டாய் அதிரடி அறிவிப்பு

அதில் கலந்து கொண்ட ஹூண்டாய் நிறுவனத்தின் துணை சேர்மன் பேசியதாவது : "ஹூண்டாய் நிறுவனம், ஹைபிரிட், பியூயல் சயல், எலெக்டரிக் என எல்லா விதமான மாற்று எரிசக்தி திறன் கொண்ட வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் எங்கள் நிறுவனத்துடன் பங்கு கொண்டு மொபிலிட்டி சேவை மற்றும் கார் பகிர்வுகளை செய்ய விரும்பும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் வரவேற்கிறோம்.

அடுத்த 7 ஆண்டுகளில் 38 பசுமை கார்கள்… ஹூண்டாய் அதிரடி அறிவிப்பு

பசுமையான வாகனம் என்பதை பொருத்தவரை பியூயல் செல் சிறப்பான தொழிற்நுட்பம் வெறும் ஹைட்ரஜனும் காற்றும் கலந்து அதன் மூலம் உருவாகும் திறனை கொண்டு வாகனத்தை இயக்க வைப்பது தான்.

அடுத்த 7 ஆண்டுகளில் 38 பசுமை கார்கள்… ஹூண்டாய் அதிரடி அறிவிப்பு

ஹூண்டாய் நிறுவனம் வரும் 2025ம் ஆண்டிற்குள் ஹைபிரிட், பியூயல் செல், எலெக்ட்ரிக் போன்ற பசுமை வாகன தொழிற்நுட்பங்களை கொண்டு 38 வகையான வாகங்கைள அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அடுத்த 7 ஆண்டுகளில் 38 பசுமை கார்கள்… ஹூண்டாய் அதிரடி அறிவிப்பு

அதற்கு முதல்படியாக கோனா எனும் எலெக்ட்ரிக் காரை சிகேடி முறைப்படி இந்தியாவிற்கு கொண்டு வந்து 2019ம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக பேட்டரி தயாரிக்கும் நிறுவனங்களை இந்தியாவில் தேடி வருகிறோம்." என கூறினார்.

அடுத்த 7 ஆண்டுகளில் 38 பசுமை கார்கள்… ஹூண்டாய் அதிரடி அறிவிப்பு

ஹூண்டாய் நிறுவனம் இந்த கோனா எஸ்யூவி காரை உச்சிமாநாட்டில் காட்சிபடுத்திருந்தது. இந்த கார் முழு சார்ஜில் 482 கி.மீ. வரை இயக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

அடுத்த 7 ஆண்டுகளில் 38 பசுமை கார்கள்… ஹூண்டாய் அதிரடி அறிவிப்பு

இந்த காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்துவதன் மூலம் அந்நிறுவனம் கார் தயாரிப்பில் இருந்து ஸ்மார்ட் மொபிலிட்டி சொலியூஷன் புரோவைடராக மாற்றம் பெறுகிறது. மேலும் அந்நிறுவனம் கனெக்ட்ட் கார் புரோகிராம் என்ற தொழிற்நுட்பத்தையும் அந்நிறுவனம் தயாரிக்கும் கார்களில் பொருத்தி தயாரிக்க திட்டமிட்டு வருகிறது.

ஹூண்டாய் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த நெக்ஸோ கார்களை கீழே உள்ள கேலரியில் பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Hyundai plans to launch 38 green vehicles by 2025. Read in Tamil
Story first published: Saturday, September 8, 2018, 11:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X