புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுக விபரம்!

Written By:

இந்திய வாடிக்கையாளர் மத்தியில் நீங்கா இடம்பிடித்த மாடல் ஹூண்டாய் சான்ட்ரோ. பட்ஜெட் கார்களில் மிகச் சிறப்பான அம்சங்களை கொண்ட இந்த கார் புதிய மாடல்களுக்கு வழிவிடும் வகையில் விற்பனை நிறுத்தப்பட்டது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுக விபரம்!

ஹூண்டாய் சான்ட்ரோ விட்டுச் சென்ற வெற்றிடத்தில் சரியான புதிய மாடல் இல்லாத நிலை ஹூண்டாய் நிறுவனத்திற்கு ஏற்பட்டது. இந்த குறையை போக்கும் விதத்தில் மீண்டும் புதிய சான்ட்ரோ காரை களமிறக்க ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுக விபரம்!

மேலும், தனது வெற்றிகரமான சான்ட்ரோ பெயரை மீண்டும் பயன்படுத்தலாம் என்ற யோசனையும் அந்நிறுவனத்திடம் இருக்கிறது. இதனால், புத்தம் புதிய சான்ட்ரோ கார் அறிமுகம் செய்யும் பணிகளில் ஹூண்டாய் தீவிரமாக உள்ளது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுக விபரம்!

இந்த சூழலில், அடுத்த வாரம் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் காட்சிக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுக விபரம்!

2018 முதல்ல 2020ம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் 9 புதிய கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுக விபரம்!

அதில், முதலாவது மாடலாக ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக எக்கானமிக் டைம்ஸ் ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுக விபரம்!

மேலும், வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக புதிய தலைமுறை சான்ட்ரோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுக விபரம்!

பழைய சான்ட்ரோ காரைவிட புதிய மாடல் அகலத்திலும், உயரத்திலும் பெரிய காராக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுக விபரம்!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் பெட்ரோல் எஞ்சின் மற்றும் சிஎன்ஜி மாடல்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுக விபரம்!

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒய்.கே.கூ," சான்ட்ரோ பிராண்டை மீண்டும் கொண்டு வருவதற்கு வாடிக்கையாளர் மற்றும் டீலர்களிலிருந்து அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய காருக்கு சான்ட்ரோ பெயரை பயன்படுத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்," என்று கூறி இருக்கிறார்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுக விபரம்!

வடிவமைப்பு, வசதிகளில் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக வரும் ஹூண்டாய் சான்ட்ரோ கார் நிச்சயம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
According to reports, the Hyundai Santro facelift launch in India is expected before Diwali this year.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark