ஹூண்டாய் கார்களின் விலை 2 சதவீதம் ஏற்றம்; வரும் ஜூன் மாதம் முதல் அமல்
ஹூண்டாய் கார்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த விலையேற்றம் வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. கார் தயாரிப்பிற்கான செலவு மற்றும் உதிரிபாகங்கள் விலையேற்றம்
ஹூண்டாய் கார்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த விலையேற்றம் வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. கார் தயாரிப்பிற்கான செலவு மற்றும் உதிரிபாகங்கள் விலையேற்றம் காரணமாக இந்த விலை ஏற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் கார் நிறுவனம் இந்தியாவில் வெற்றிகரமாக பலவகை கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவன கார் தயாரிப்புகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இந்நிறுவனம் இந்தியாவில் இயான் என்ற ரூ 3.3 லட்சம் மதிப்பிலான சிறிய ரக வாகனங்கள் முதல் பிரிமியம் எஸ்.யூ.வி காராக ரூ 25.44 லட்சம் மதிப்பிலான டக்சன் காரையும் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட க்ரெட்டா எஸ்யூவி காரை தவிர மற்ற கார்களுக்கான விலையை 2 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த விலையுயர்வு வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விலையேற்றம் குறித்து அந்நிறுவனத்தின் விற்பனை அதிகாரி ராகேஷ் ஸ்ரீவட்ஷவா கூறுகையில் :" கார்களை தயாரிக்க ஆகும் செலவுகள் அதிகரிப்பு, உதிரிபாகங்களுக்கான விலை, பெட்ரோல் விலையேற்றத்தால் வந்த அதிக போக்குவரத்து செலவு, சில உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கான வரி என பல விலையேற்றம் காரணமாக தவிற்க்க முடியாமல் காரின் விலையும் ஏற்றப்பட்டுள்ளது " என கூறினார்.

மேலும் இந்த விலையேற்றம் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 2018 க்ரெட்டா எஸ்யூவி காருக்கு பொருந்தாதுஎன தெரிவித்துள்ளார். இரு தினங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காரின் விலை ரூ 9.44 லட்சத்தில் துவங்கி ரூ 15.03 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலையேற்றம் குறித்து மக்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டதால், ஹூண்டாய் கார்களை வாங்க தற்போது டீலர்களை தொடர்பு கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் விலையில் காரை வாங்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








