ரூ. 7.79 லட்சம் ஆரம்ப விலையில் ஹூண்டாய் வெர்னா 1.4லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கார் விற்பனைக்கு அறிமுகம்

Written By:
Recommended Video - Watch Now!
Bangalore Bike Accident At Chikkaballapur Near Nandi Upachar - DriveSpark

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட புதிய வெர்னா மாடல் காரை ரூ. 7.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஹூண்டாய் வெர்னா காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் திறன் அறிமுகம்

வெர்னா காரின் புதிய 1.4 லிட்டர் பெட்ரோல் மாடல் கார் இ மற்றும் எக்ஸ் என இரண்டு வேரியண்டுகளில் வெளிவந்துள்ளன.

டெல்லி எக்ஸ்-ஷோரூம் படி ரூ. 7.79 லட்சம் மற்றும் ரூ. 9.09 லட்சம் மதிப்பில் முறையே வெர்னாவின் வேரியன்டுகள் விலை பெறுகின்றன.

ஹூண்டாய் வெர்னா காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் திறன் அறிமுகம்

கடந்த வருடம ஹூண்டாய் நிறுவனம் புதிய தலைமுறைக்கான வெர்னா காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. வெளியாவதற்கு முன்னதாக இந்த காரை 30,000 பேர் முன்பதிவு செய்தனர்.

ஹூண்டாய் வெர்னா காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் திறன் அறிமுகம்

மேலும் இந்தியளவில் சுமார் 2 லட்சம் பேரால் 2017 வெர்னா காரின் விபரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டன. இந்த காரை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய 10,500 ஆர்டர்கள் குவிந்தன.

ஹூண்டாய் வெர்னா காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் திறன் அறிமுகம்

1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு மாடல்களில் வெளியான புதிய வெர்னா கார், இந்தியாவின் 2017ம் ஆண்டின் சிறந்த கார் என்ற விருதை தட்டி சென்றது.

Trending On Drivespark Tamil:

2 டிரக்குகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமான வென்ட்டோ கார்... ஆனால்...!!

மாருதி பிரிஸ்ஸா முதல் ஆடி கியூ5 மாடல் வரை... 2018ல் விற்பனைக்கு வரும் டாப் 10 புதிய எஸ்யூவி கார்கள்

ஹூண்டாய் வெர்னா காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் திறன் அறிமுகம்

தற்போது இதில் கூடுதல் அம்சமாக வெளியாகியுள்ள வெர்னாவின் புதிய வேரியன்ட் 1.4 லிட்டர் கப்பா டூயல் விடிவிடி பெட்ரோல் எஞ்சினை பெற்றுள்ளது. இது அதிகப்பட்சமாக 99 பிஎச்பி பவர் மற்றும் 132 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ஹூண்டாய் வெர்னா காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் திறன் அறிமுகம்

6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை பெற்றுள்ள இந்த கார், தற்போதைய மாடலிருந்து 8 சதவீத எரிவாயு கொள்ளளவை கூடுதலாக வழங்கும். இதன்மூலம் மணிக்கு 19.1 கி.மீ மைலேஜ் கிடைக்கும்.

ஹூண்டாய் வெர்னா காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் திறன் அறிமுகம்

தற்போதைய வெர்னா கார் 1.5 லிட்டர் திறன் பெற்ற பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களை பெற்றுள்ளன. பெட்ரோல் மாடல் வெர்னாவின் மூலம் 121 பிஎச்பி பவர் மற்றும் 151 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

ஹூண்டாய் வெர்னா காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் திறன் அறிமுகம்

டீசல் எஞ்சின் வெர்னா கார் அதிகப்பட்சமாக 126 பிஎச்பி பவர் மற்றும் 260 என்.எம் டார்க் திறன் வழங்கும். இரண்டு எஞ்சின் தேர்வுகளுமே 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேவைகளில் வெளிவருகிறது.

ஹூண்டாய் வெர்னா காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் திறன் அறிமுகம்

2018 வெர்னா காரை அறிமுகம் செய்துவிட்டு பேசிய ஹூண்டாய் இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தை பிரிவின் இயக்குநரான ராகேஷ் ஸ்ரீவதஸ்தவா,

புதிய தலைமுறைக்கான வெர்னா கார் இந்தியாவில் வெளியான நாளிலிருந்தே, விற்பனையில் ஒரு சூப்பர் செடான் மாடலாக உருவெடுத்துள்ளது. அந்த விற்பனை திறனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவே தற்போது 1.4 லிட்டர் கப்பா டூயல் விடிவிடி எஞ்சினில் புதிய வெர்னா கார் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஹூண்டாய் வெர்னா காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் திறன் அறிமுகம்

எஞ்சினின் திறன் சற்று குறைக்கப்பட்டுள்ளதால் புதிய தலைமுறைக்கான வெர்னா கார், எரிவாயு சிக்கனத்தில் சிறந்த மாடலாக இருக்கும்.

Trending On Drivespark Tamil:

பயன்பாட்டில் இருக்கும் உலகின் அதிவேக டாப்- 5 பயணிகள் விமானங்கள்!

நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும் போது நாம் பின்பற்ற வேண்டிய 5 முக்கிய கட்டளைகள்..!!

ஹூண்டாய் வெர்னா காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் திறன் அறிமுகம்

புதிய எஞ்சின் கொண்ட ஹூண்டாய் வெர்னா காரின் இ வேரியன்ட் விலை ரூ.7,79,990 என்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட இ.எக்ஸ் மாடல் ரூ.9,09,990 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Read in Tamil: Hyundai Verna With 1.4-litre Petrol Engine Launched In India; Prices Start At Rs 7.79 Lakh. Click for Details...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark