ஹூண்டாய் வெர்னா காரில் 1.4 லிட்டர் டீசல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!
ஹூண்டாய் வெர்னா காரில் 1.4 லிட்டர் டீசல் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் எஞ்சின் 89 பிஎச்பி பவரை அளிக்கும். இந்த 1.4 லிட்டர் டீசல் மாடல் E மற்றும் EX ஆகிய இரண்டு வேரியண்ட்டுகள
ஹூண்டாய் வெர்னா காரில் 1.4 லிட்டர் டீசல் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பழைய ஹூண்டாய் வெர்னா கார் இந்தியாவில் 1.6 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டீசல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹூண்டாய் வெர்னா காரில் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

வாடிக்கையாளர்களிடமிருந்து போதிய அளவில் விசாரணை வந்தால், மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய ஹூண்டாய் வெர்னா காரில் இப்போது 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த 1.4 லிட்டர் டீசல் மாடல் E மற்றும் EX ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். 1.4 லிட்டர் டீசல் E வேரியண்ட் ரூ.9.29 லட்சத்திலும், EX வேரியண்ட் ரூ.9.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஐ20 ஆக்டிவ் கார்களில் பயன்படுத்தப்படும் அதே 1.4 லிட்டர் டீசல் எஞ்சின்தான் புதிய வெர்னா காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

இதுதவிர்த்து, புதிய வெர்னா 1.6 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடலில் SX+ என்ற புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. EX என்ற பேஸ் வேரியண்ட்டிற்கும் SX(O) என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டிற்கும் இடையில் இந்த புதிய வேரியண்ட் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த SX+ வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகல், 16 அங்குல அலாய் வீல்கள், பவர் ஃபோல்டிங் சைடு மிரர்கள், 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் புதிய SX(O) வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், அட்ஜெஸ்ட் வசதியுடன் பின் இருக்கை ஹெட்ரெஸ்ட்டுகள், டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல், வென்டிலேட்டட் லெதர் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய வெர்னா காரின் 1.6 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் SX+ வேரியண்ட் ரூ.11.52 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், 1.6 லிட்டர் டீசல் ஆட்டோமேட்டிக் SX(O) வேரியண்ட் ரூ.13.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications