குட் நியூஸ்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி!

By Saravana Rajan

ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்த எஸ்யூவியை முடிந்தவரை விலையை குறைத்து நிர்ணயிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

குட் நியூஸ்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி!

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் மாடலாக கோனா எஸ்யூவி விற்பனைக்கு களமிறக்கப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

குட் நியூஸ்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி!

இந்த நிலையில், ஹூண்டாய் கோனா எஸ்யூவியின் விலை மிக அதிகம் நிர்ணயிக்கப்படும் என்று கருதப்பட்டது. இதனால், விற்பனை எதிர்பார்த்த அளவு இருக்காது என்பதை ஹூண்டாய் உணர்ந்து கொண்டுள்ளது. எனவே, விலையை குறைத்து நிர்ணயிப்பதற்காக ஹூண்டாய் கோனா எஸ்யூவியை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

குட் நியூஸ்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி!

முக்கிய உதிரிபாகங்களை இறக்குமதி செய்து சென்னையில் உள்ள தனது ஆலையில் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவியை அசெம்பிள் செய்து விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இதனை, ஹூண்டாய் தலைமை செயல் அ்திகாரியும் 20ம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது உறுதி செய்துள்ளார்.

குட் நியூஸ்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி!

வெளிநாடுகளில் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி பேட்டரி திறன் அடிப்படையில் பயணிக்கும் தூரத்தை பொறுத்து இரண்டு மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கோனா எஸ்யூவியின் பேஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

குட் நியூஸ்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி!

ஹூண்டாய் கோனா எஸ்யூவியில் இருக்கும் சக்திவாய்ந்த மின் மோட்டார் 131 பிஎச்பி பவரையும், 395 டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. இந்த காரில் 39.3kWh திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. முழுமையாக சார்ஜ் செய்யும்போது 300 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

குட் நியூஸ்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி!

ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியில் இருக்கும் பேட்டரியை 100KW திறன் கொண்ட DC குயிக் சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றும்போது ஒரு மணிநேரத்தில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். சாதாரண ஏசி பாயிண்ட் மூலமாக சார்ஜ் ஏற்றும்போது 6 மணி நேரம் பிடிக்கும்.

குட் நியூஸ்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி!

இந்த எஸ்யூவியானது 0 -100 கிமீ வேகத்தை 9.3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 167 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பை பெற்றிருப்பதால், பேட்டரி ஆற்றல் விரயமாவது தவிர்க்கப்படும்.

குட் நியூஸ்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி!

பேட்டரிகளானது தரைதளத்தில் கொடுக்கப்பட்டு இருப்பதால் உட்புரத்தில் இடவசதியில் எந்த பிரச்னையும் ஏற்படாது. இந்த எஸ்யூவியில் 17 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. உட்புறத்தில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 7 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

குட் நியூஸ்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி!

அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன்ட் சென்டரிங் சிஸ்டம், அவசர கால தானியங்கி பிரேக்குகள் போன்ற ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது. குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெறுவதற்கான கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.

குட் நியூஸ்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி!

வழக்கம்போல் மிகச் சிறப்பான டிசைன், தொழில்நுட்ப வசதிகள், பாதுகாப்பு அம்சங்களுடன் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் மாடலாக கோனா எஸ்யூவி இந்தியாவில் களமிறங்க உள்ளது. ரூ.25 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படும் இந்த எஸ்யூவி உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படும்போது சற்றே விலையை குறைத்து நிர்ணயிக்க வாய்ப்பு ஏற்படும்.

குட் நியூஸ்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி!

வெளிநாடுகளில் ஹூண்டாய் கோனா எஸ்யூவி பெட்ரோல், டீசல் மாடல்களிலும் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் முதலில் எலக்ட்ரிக் மாடலில்தான் கோனா வர இருக்கிறது. ஜீப் காம்பஸ், மற்றும் பங்காளியான ஹூண்டாய் டூஸான் போன்ற மாடல்களுக்கு நிகரானதாக இருக்கும்.

குட் நியூஸ்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி!

ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் மட்டுமே முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. வரவேற்பை பொறுத்தே அடுத்த கட்டமாக முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

Tamil
English summary
Hyundai Motors India has revealed that the Kona Electric SUV will come through the CKD route and will be assembled at Hyundai's Chennai plant. The Kona will be one of eight cars which the company plans to launch by 2020. This was confirmed by the company's CEO, at their 20th-anniversary celebrations.
Story first published: Monday, July 30, 2018, 11:10 [IST]
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more