கைவிரல் ரேகை மூலமாக காரை திறக்கும் நுட்பத்தை வெளியிட்ட ஹூண்டாய்!

கார்களில் புதுமையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. இருப்பினும், ஹைடெக் திருடர்களால் அது போதிய பலன் தராத நிலை சமயத்தில் ஏற்பட்டு விடுகிறது. தற்போது கார் சாவி இருந்தால் உரிமையாளர் இல

மொபைல்போன்களில் கை விரல் ரேகையை பயன்படுத்தி திரையை திறப்பது போல, உரிமையாளரின் விரல் ரேகையை வைத்து கார் கதவுகளை திறக்கும் வசதியை ஹூண்டாய் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த இருக்கிறது.

கைவிரல் ரேகை மூலமாக காரை திறக்கும் நுட்பத்தை வெளியிட்ட ஹூண்டாய்!

கார்களில் புதுமையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. இருப்பினும், ஹைடெக் திருடர்களால் அது போதிய பலன் தராத நிலை சமயத்தில் ஏற்பட்டு விடுகிறது. தற்போது கார் சாவி இருந்தால் உரிமையாளர் இல்லாமலேயே காரை திறந்து ஸ்டார்ட் செய்துவிட முடியும்.

கைவிரல் ரேகை மூலமாக காரை திறக்கும் நுட்பத்தை வெளியிட்ட ஹூண்டாய்!

இந்த நிலையில், உரிமையாளர் மட்டுமே காரை திறந்து ஸ்டார்ட் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை ஹூண்டாய் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதாவது, கை விரல் ரேகையை அடையாளம் கண்டு, கார் கதவு திறக்கும் நுட்பத்தை ஹூண்டாய் தனது கார்களில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

கைவிரல் ரேகை மூலமாக காரை திறக்கும் நுட்பத்தை வெளியிட்ட ஹூண்டாய்!

முதலாவதாக, ஹூண்டாய் சான்டா ஃ பீ எஸ்யூவியில் இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதுவும் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இந்த கை விரல் ரேகை மூலமாக கார் கதவுகளை திறக்கும் தொழில்நுட்பம் கொண்ட சான்டா பீ எஸ்யூவி விற்பனை செய்யப்பட இருக்கிறது.

கைவிரல் ரேகை மூலமாக காரை திறக்கும் நுட்பத்தை வெளியிட்ட ஹூண்டாய்!

அதன்பிறகு, பிற நாடுகளிலும் இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும். வெறும் கார் கதவுகளை திறப்பதற்கு மட்டுமல்ல, காரை ஸ்டார்ட் செய்வதற்கும் இது உதவியாக இருக்கும். அத்துடன், காரின் மெமரி ஃபங்ஷன் அடிப்படையில் இருக்கையையும் அட்ஜெஸ்ட் செய்துவிடும்.

கைவிரல் ரேகை மூலமாக காரை திறக்கும் நுட்பத்தை வெளியிட்ட ஹூண்டாய்!

மேலும், கை விரல் உரியவருக்கு ஏற்றவாறு பதிவு செய்யப்பட்டிருக்கும் விதத்தில், ஸ்டீயரிங் வீல், சைடு மிரர்களையும் சரியான கோணத்தில் திருப்பி வைத்துவிடும். பதிவின் அடிப்படையில் சரியான அளவில் காருக்குள் வெப்பநிலையையும் பராமரிக்கும்.

கைவிரல் ரேகை மூலமாக காரை திறக்கும் நுட்பத்தை வெளியிட்ட ஹூண்டாய்!

கார் கதவில் கைப்பிடிக்கும் அருகில் இருக்கும் சென்சாரில் விரல் ரேகையை பதிவு செய்தால், கார் கதவு திறந்து கொள்ளும். இது நிச்சயம் உரிமையாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கைவிரல் ரேகை மூலமாக காரை திறக்கும் நுட்பத்தை வெளியிட்ட ஹூண்டாய்!

இந்த தொழில்நுட்பம் மிகவும் உயரிய பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருப்பதாகவும், இதன் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை திருடர்களால் முறியடித்து திறக்க முடியாது என்றும் ஹூண்டாய் கூறுகிறது. சாதாரண சாவி மற்றும் ஸ்மார்ட் சாவியை விட இந்த கை விரல் ரேகை சாவி தொழில்நுட்பம் மிக உயரிய பாதுகாப்பை வழங்குமாம்.

Most Read Articles
English summary
Hyundai will introduce smart fingerprint technology in cars soon. Read in Tamil.
Story first published: Wednesday, December 26, 2018, 18:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X