இந்த ஆண்டின் (ICOTY 2019) சிறந்த கார் விருதை வென்றது புதிய மாருதி ஸ்விஃப்ட்!

2019ம் ஆண்டின் சிறந்த காருக்கான விருதை புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் வென்றுள்ளது. இந்த விருதை மாருதி கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனிச்சி அயுகவாவிடம், நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தத ஜேகே டயர

இந்த ஆண்டின் சிறந்த கார் விருதை (ICOTY 2019) வென்றுள்ளது புதிய மாருதி ஸ்விஃப்ட் கார். கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

 இந்த ஆண்டின் சிறந்த கார் விருதை வென்றது புதிய மாருதி ஸ்விஃப்ட்!

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய கார் மற்றும் பைக்குகளில் சிறந்த மாடலை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவின் தலைசிறந்த ஆட்டோமொபைல் பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள் மற்றும் வாகனத் துறை பத்திரிக்கையாளர்கள் அடங்கிய நடுவர் குழு இந்த விருதுகளை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன

 இந்த ஆண்டின் சிறந்த கார் விருதை வென்றது புதிய மாருதி ஸ்விஃப்ட்!

சிறந்த காருக்கான விருது ICOTY என்ற பெயரிலும், சிறந்த பைக்கிற்கான விருது IMOTY என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டு வழங்கப்படுகின்றன. 2006ம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்த பெருமைமிகு விருதுகள் வழங்கப்படுகின்றன.

 இந்த ஆண்டின் சிறந்த கார் விருதை வென்றது புதிய மாருதி ஸ்விஃப்ட்!

இந்த நிலையில், இந்த ஆண்டின் சிறந்த கார் விருதுக்கு (ICOTY 2019) நடுப்பு 2018ம் ஆண்டில் அறிமுகமான பல கார் மாடல்கள் போட்டி போட்டன. புதிய ஹூண்டாய் சான்ட்ரோ, ஹோண்டா அமேஸ், டொயோட்டா யாரிஸ், மஹிந்திரா மராஸ்ஸோ, புதிய மாருதி எர்டிகா, மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, புதிய மாருதி ஸ்விஃப்ட் என இந்த ஆண்டின் சிறந்த அறிமுக கார் மாடல்கள் போட்டி போட்டன.

 இந்த ஆண்டின் சிறந்த கார் விருதை வென்றது புதிய மாருதி ஸ்விஃப்ட்!

பல்வேறு அம்சங்கள் கணக்கில்கொள்ளப்பட்டு மதிப்பீடு செய்து புள்ளிகள் வழங்கப்பட்டன. ஆட்டோமொபைல் பத்திரிக்கை துறையை சேர்ந்த 18 பத்திரிக்கையாளர்கள் உள்பட நடுவர் குழு இந்த ஆண்டின் சிறந்த கார், பைக் மாடல்களை தேர்வு செய்யும் பொறுப்பை ஏற்றது.

 இந்த ஆண்டின் சிறந்த கார் விருதை வென்றது புதிய மாருதி ஸ்விஃப்ட்!

அதில், இந்த ஆண்டின் சிறந்த கார் விருதைபுதிய மாருதி ஸ்விஃப்ட் கார் வென்றுள்ளது. இந்த விருதை மாருதி கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனிச்சி அயுகவாவிடம், நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தத ஜேகே டயர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரகுபதி சிங்கானியா வழங்கினார்.

 இந்த ஆண்டின் சிறந்த கார் விருதை வென்றது புதிய மாருதி ஸ்விஃப்ட்!

பிப்ரவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.தனது துள்ளலான டிசைன், நவீன தொழில்நுட்ப அம்சங்கள், சிறந்த எஞ்சின் ஆப்ஷன்கள் என வாடிக்கையாளர்கள் மத்தியில் கொடுக்கும் பணத்திற்கு சரியான மதிப்பு மிக்க மாடலாக வலம் வருகிறது.

 இந்த ஆண்டின் சிறந்த கார் விருதை வென்றது புதிய மாருதி ஸ்விஃப்ட்!

ரூ.4.99 லட்சத்திலிருந்து ரூ.8.96 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் கிடைக்கிறது.

 இந்த ஆண்டின் சிறந்த கார் விருதை வென்றது புதிய மாருதி ஸ்விஃப்ட்!

சிறந்த கார் விருதை புதிய மாருதி ஸ்விஃப்ட் பெற்ற நிலையில், இரண்டாவது இடத்தை புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரும், மூன்றாவது இடத்தை ஹோண்டா அமேஸ் காரும் பெற்றன.

 இந்த ஆண்டின் சிறந்த கார் விருதை வென்றது புதிய மாருதி ஸ்விஃப்ட்!

ஆட்டோமொபைல் பத்திரிக்கைகள், செய்தி தளங்கள் மற்றும் டிவி நிறுவனங்களும் இதுபோன்ற விருதுகளை வழங்கினாலும், அனைத்து பத்திரிக்கைகள் மற்றும் ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த நடுவர்களால் வழங்கப்படும் இந்த விருது நியாயமானதாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.

 இந்த ஆண்டின் சிறந்த கார் விருதை வென்றது புதிய மாருதி ஸ்விஃப்ட்!

இந்த விருது வாடிக்கையாளர் மத்தியில் அதிக கவனம் பெறுவதால், வர்த்தகத்திலும் பலன் அளிக்கிறது. இதனால், இந்த விருதை பெறுவதில் கார், பைக் நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

Article Published On: Friday, December 21, 2018, 16:57 [IST]
English summary
Maruti Suzuki Swift wins the prestigious Indian Car Of The Year (ICOTY) 2019 Award. Launched at Auto Expo 2018 (held back in February) the third-generation Maruti Swift instantly became a market success, just like its predecessors. In fact, the Maruti Swift is often regarded as the most-loved hatchback in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+