புத்தாண்டு கொண்டாட்டத்தில் இதை செய்தால் நடக்கப்போவது இதுதான்... போலீசார் விடுத்த திடுக் எச்சரிக்கை

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தமிழக போலீசார் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2018ம் ஆண்டு நிறைவடைந்து, 2019ம் ஆண்டு பிறக்கவுள்ளது. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களை கட்டியுள்ளன. இந்தியாவில் இன்று (டிசம்பர் 31) மாலை முதல், புத்தாண்டு கொண்டாட்டங்கள் தீவிரமடைய தொடங்கும்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் இதை செய்தால் நடக்கப்போவது இதுதான்... போலீசார் விடுத்த திடுக் எச்சரிக்கை

குறிப்பாக நள்ளிரவு 12 மணியளவில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சகட்டத்தை எட்டும். புத்தாண்டு பிறப்பதற்கு முந்தைய நாள், அனைவரும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது என்பது வழக்கமான ஒன்றாகதான் உள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் இதை செய்தால் நடக்கப்போவது இதுதான்... போலீசார் விடுத்த திடுக் எச்சரிக்கை

ஆனால் ஒரு சிலர், மது அருந்தி விட்டு அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டி கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இன்னும் ஒரு சிலர் மது போதையில் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபடுகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் இதை செய்தால் நடக்கப்போவது இதுதான்... போலீசார் விடுத்த திடுக் எச்சரிக்கை

இதனால் அவர்களுக்கு மட்டுமின்றி, சாலையில் பயணிக்கும் இதர வாகன ஓட்டிகளுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில், சமீப காலமாக இத்தகைய கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் இதை செய்தால் நடக்கப்போவது இதுதான்... போலீசார் விடுத்த திடுக் எச்சரிக்கை

ஆனால் இம்முறை அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்குதான் கடும் தண்டனை காத்திருக்கிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் இதை செய்தால் நடக்கப்போவது இதுதான்... போலீசார் விடுத்த திடுக் எச்சரிக்கை

சாலை விபத்து மற்றும் குற்றங்கள் இல்லாத புத்தாண்டு தினமாக இருக்க வேண்டும் என்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன்படி இன்று இரவு சென்னையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் இதை செய்தால் நடக்கப்போவது இதுதான்... போலீசார் விடுத்த திடுக் எச்சரிக்கை

சென்னையில் மட்டும் மொத்தம் 368 இடங்களில் நாளை (ஜனவரி 1) வாகன தணிக்கை நடத்தப்படவுள்ளது. மைலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தி.நகர், அடையார் உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் இதை செய்தால் நடக்கப்போவது இதுதான்... போலீசார் விடுத்த திடுக் எச்சரிக்கை

இதனிடையே குடிபோதையில் வாகனங்களை இயக்கும் நபர்களின் லைசென்ஸை ரத்து செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அவர்களின் பெயர் குற்ற ஆவண காப்பகத்தில் சேர்க்கப்படும்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் இதை செய்தால் நடக்கப்போவது இதுதான்... போலீசார் விடுத்த திடுக் எச்சரிக்கை

எனவே பாஸ்போர்ட் மற்றும் விசா வெரிபிகேஷனுக்கு அவர்களால் தடையில்லா சான்றிதழை அவ்வளவு எளிதாக பெற முடியாது. இதுதவிர குடிபோதையில் வாகனங்களை ஓட்டும் நபர்களுடைய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு விடும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Most Read Articles
English summary
If You Caught On Drunken Driving Tonight, You Will Lose Your Driving Licence. Read in Tamil
Story first published: Monday, December 31, 2018, 19:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X