உங்க காருல இதை எல்லாம் பண்ணுனா ஜெயில் கம்பி தான் எண்ண வேண்டும்...!

இந்தியாவில் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வது என்பது அதிக அளவில் நடந்து வருகிறது. ஒருவர் காரை வாங்கி அதில் உள்ள சில அம்சங்களை மாற்றி தனக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்கின்றனர்.

ஆனால் இந்திய சட்டப்படி இப்படி கார் தயாரிப்பாளர்கள் செய்த கார்களை மாற்றியமைக்கலாமா? என்றால் கூடாது என்பதுதான் பதில். ஆம் கார் தயாரிப்பாளர்கள் தயாரித்த மாடல் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மாடலாகும். இதை நீங்கள் வாங்கி மாற்றியமைப்பது சட்டப்படி குற்றமாகும்.

உங்க காருல இதை எல்லாம் பண்ணுனா ஜெயில் கம்பி தான் எண்ண வேண்டும்...!

இந்திய அரசு இந்திய சாலைகளுக்கு என்று ஒரு விதி வகுத்து அதற்கு ஏற்றபடி செயல்படும் வாகனங்களை ஏஆர்ஏஐ என்ற அமைப்பு பரிசோதித்து ஆர்டிஓ பதிவு செய்து இந்தியாவிற்குள் அனுமதிக்கிறது. இந்த வாகனங்களை மாற்றியமைப்பது குற்றம்.

உங்க காருல இதை எல்லாம் பண்ணுனா ஜெயில் கம்பி தான் எண்ண வேண்டும்...!

ஆனால் சில மாற்றங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. பெரும்பாலான மாற்றங்களை செய்ய அனுமதி கிடையாது. அந்த வகையில் உங்கள் கார்களை நீங்கள் எப்படி எல்லாம் மாடிஃபிகேஷன் செய்தால் உங்களது கார்களை போலீசார் பறிமுதல் செய்வார்கள்? எது எல்லாம் குற்றம்? என கீழே உள்ள பட்டியலில் பார்க்கலாம்.

உங்க காருல இதை எல்லாம் பண்ணுனா ஜெயில் கம்பி தான் எண்ண வேண்டும்...!

நீளம் அதிகரிப்பது

காரை சரி பாதியாக அறுத்து அதில் காரின் நடுப்பகுதியை மட்டும் நீளமாக மாற்றி முன்னாலும் பின்னாலும் அதே வடிவத்தை கொண்டு மாடிபிஃகேஷன் செய்து காரை பொதுவெளியில் ஏஆர்ஏஐயின் சான்றிதழ் இல்லாமல் பயன்படுத்துவது குற்றம். இதற்காக உங்களது காரை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்யலாம். உங்கள் காரை நீளமான காராக மாற்ற நினைத்து இது போன்ற பிரச்னைகளில் சிக்கி கொள்ளதீர்கள்.

உங்க காருல இதை எல்லாம் பண்ணுனா ஜெயில் கம்பி தான் எண்ண வேண்டும்...!

நீளம் குறைப்பு

காரின் நீளத்தை அதிகரிப்பது மட்டும் அல்ல நீளத்தை குறைப்பதும் சட்டப்படி குற்றம்தான். சிலர் சிறிய ரக கார்கள் மீது விருப்பப்பட்டு தங்களது கார்களை சிறிதாக மாற்றி விடுகின்றனர். இதுவும் சட்டப்படி குற்றம்தான். இதை செய்வதால் உங்கள் வாகனத்தை போலீஸ் பறிமுதல் செய்து விடலாம்.

உங்க காருல இதை எல்லாம் பண்ணுனா ஜெயில் கம்பி தான் எண்ண வேண்டும்...!

கஸ்டமைஸ்டு

ரோட்டில் சில கஸ்டமைஸ்டு கார்கள் செல்வதை பார்த்திருப்போம். முன்னரே சொன்னது போல் சில மாற்றங்கள் அனுமதிக்கப்பட்டதுதான். ஆனால் சிலர் ஒரு காரின் பாடி முழுவதையும் நீக்கிவிட்டு வேறு ஒரு காரின் பாடியை பொருத்துகின்றனர். இது முற்றிலும் தவறு. முக்கியமாக ஃபெராரி, லம்போர்கினி போன்ற உயர் ரக காரின் பாடி போன்ற டுப்ளிகேட்கள் இதில் பொருத்தப்படுகின்றன. இது சட்டப்படி குற்றமாகும். இப்படி செய்தாலும் உங்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படலாம்.

உங்க காருல இதை எல்லாம் பண்ணுனா ஜெயில் கம்பி தான் எண்ண வேண்டும்...!

கன்வர்டபிள்

இந்தியாவில் முறையாக விற்பனை செய்யப்படும் கன்வர்டபிள் கார்கள் எல்லாம் விலை அதிகமாக இருக்கும். பெரும்பாலும் ஸ்போர்ட்ஸ் மாடல் கார்கள்தான் இந்த வசதியுடன் வருகிறது. இதனால் குறைந்த விலை காரை வைத்திருக்கும் பலர் தங்கள் காரை கன்வர்டபிள் மாடல் காராக மாற்றி வருகின்றனர். இது முற்றிலும் குற்றமாகும். இவ்வாறு உங்கள் காரை நீங்கள் மாடிஃபிகேஷன் செய்தால் நிச்சயம் அதை போலீசார் பறிமுதல் செய்வார்கள்.

உங்க காருல இதை எல்லாம் பண்ணுனா ஜெயில் கம்பி தான் எண்ண வேண்டும்...!

எக்ஸோ ஸ்கேலிட்டன் மாடிஃபிகேஷன்

காரின் எக்ஸோ ஸ்கேலிட்டன் என்பது கார் விபத்தில் சிக்கும்போதோ அல்லது ரோட்டில் உருளும் நிலை ஏற்பட்டோலோ காரின் உள்ளே இருக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பாக இருப்பது இந்த எக்ஸோ ஸ்கேலிட்டன்தான். ஆனால் சில ஆஃப் ரோடு பயன்பாட்டிற்காக பயன்படும் வாகனங்களில் இந்த எக்ஸோ ஸ்கேலிட்டன்கள் மாற்றப்படுகிறது. இவ்வாறு செய்வதால் வாகனத்தின் எடை அதிகரத்து சென்டர் ஆஃப் கிராவிட்டியில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த கார்களை பிரைவேட்டாக பயன்படுத்தலாம். ஆனால் பொது வீதியில் பயன்படுத்தினால் போலீசார் அதை பறிமுதல் செய்யலாம்.

உங்க காருல இதை எல்லாம் பண்ணுனா ஜெயில் கம்பி தான் எண்ண வேண்டும்...!

அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான்கள்

வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துவது குற்றமாகும். இவ்வாறான ஒலிப்பான்களை நீங்கள் பயன்படுத்துவது என்பது ரோட்டில் உங்களுடன் பயணிப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி கவனச்சிதறலை ஏற்படுத்தலாம். இதனால் அவர்கள் வாகனம் விபத்திற்குள்ளாகும் அபாயமும் உள்ளது. இந்திய அரசு இந்த வாகனங்கள் 82 டெசிபெல்லிற்கு அதிகமான சத்தத்தை ஏற்படுத்தகூடாது என சட்டம் விதித்துள்ளது. அதற்கு அதிகமான சத்தம் எழுப்பும் ஒலிப்பான்கள் அரசால் தடை விதிக்கப்பட்ட பொருட்களாகும். வெளி மார்கெட்டில் ஒலிப்பான் வாங்கினால் அதற்கான டெசிபெல் ரேட்டிங்கை பெற்று வாங்குங்கள்.

உங்க காருல இதை எல்லாம் பண்ணுனா ஜெயில் கம்பி தான் எண்ண வேண்டும்...!

எக்ஸாட்களை மாற்றுவது

வெளி மார்கெட்டில் கிடைக்கும் எக்ஸாட்களை மாற்றுவது என்பது சட்டப்படி குற்றமாகும். இந்த எக்ஸாட்களும் ஹாரன்களை போலதான் அதிக சத்தத்தை எழுப்பும். அதனால் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சத்தம் வரும் எக்ஸாட்களை பொருத்தியிருந்தால் அதை போலீசார் பறிமுதல் செய்து விடுவர். இது போன்ற எக்ஸாட்களை பொருத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து விடுவார்கள்.

உங்க காருல இதை எல்லாம் பண்ணுனா ஜெயில் கம்பி தான் எண்ண வேண்டும்...!

எடை மாற்றம்

கார் தயாரிப்பாளர்கள் ஒரு கார் மாடல் தயாரானதும் அதை ஏஆர்ஏஐ குழுவின் ஆய்விற்காக அனுப்புவர். அதில் கணிக்கப்படும் எடைதான் காரின் பதிவு சான்றிதழில் இடம் பெற்று இருக்கும். இந்த எடை 2 சதவீதம் வரை மாற்றம் வர மட்டுமே அனுமதியுள்ளது. அதற்கு மேல் அதிகரிக்கும் படி மாடிஃபிகேஷன் செய்தால் அது சட்டப்படி குற்றமாகும். பெரும்பாலும் இந்த பிரச்னை அலாய் வீலில் மட்டும் தான் இந்த மாற்றம் ஏற்படும். கார் தயாரிப்பாளர்களின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவும் காரை டிசைன் செய்யும் போதே இதை எல்லாம் மனதில் கொண்டுதான் செய்வார்கள். காரின் எடை மாற்றம் ஏற்பட்டாலும் உங்கள் கார் பறிமுதல் செய்யப்படலாம்.

உங்க காருல இதை எல்லாம் பண்ணுனா ஜெயில் கம்பி தான் எண்ண வேண்டும்...!

பவரில் மாற்றம்

காரின் பவரை மாற்ற ஏராளமான வழிகள் உள்ளன. டியூனிங் பாக்ஸ்களை பொருத்துவது, இசியூவை ரீமேப் செய்வது, மார்கெட்டில் கிடைக்கும் அதிக பவரை தரும் இசியூவை மாற்றுவது உள்ளிட்ட பல வழிகள் உள்ளன. ஆனால் அது எல்லாம் சட்ட விரோதம்தான். இவ்வாறாக நாம் காரில் உள்ள பவரை அதிகரிக்க குறுக்கு வழிகளை கையாண்டால் நம் காரை போலீசார் பறிமுதல் செய்யலாம்.

உங்க காருல இதை எல்லாம் பண்ணுனா ஜெயில் கம்பி தான் எண்ண வேண்டும்...!

இன்ஜின் மாற்றம்

நம் காரில் கார் தயாரிப்பு நிறுவனம் பொருத்தும் இன்ஜினை நீக்கி விட்டு வேறு ஒரு இன்ஜினை பொருத்துவது என்பது சட்டப்படி குற்றமாகும். இன்ஜினின் அனைத்து பெர்ஃபார்மென்ஸ்களையும் பொறுத்தே கார் வடிவமைக்கப்படும். அதனால் காரின் இன்ஜினை மாற்றக்கூடாது. அவ்வாறு செய்தால் போலீசார் உங்கள் காரை பறிமுதல் செய்யலாம்.

Most Read Articles
English summary
If you modify your car like this ready to visit jail. Read in Tamil
Story first published: Friday, October 26, 2018, 19:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X