புதிய ஃபோக்ஸ்வேகன் டி - க்ராஸ் எஸ்யூவி வெளியீடு: க்ரெட்டா போட்டியாளர்

புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவி இரண்டு விதமான வீல் பேஸ் கொண்ட மாடல்களில் வர இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் அதிக வீல் பேஸ் கொண்ட மாடலாகவும், இந்தியா உள்ளிட்ட வளரும் கார் சந்தைகளில் குறைவான வீல்

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு இணையான ரகத்தில் வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் டி - க்ராஸ் எஸ்யூவி சர்வதேச அளவிலான மாடலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும், இந்த புதிய எஸ்யூவியின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி - க்ராஸ் எஸ்யூவி வெளியீடு: க்ரெட்டா போட்டியாளர்

புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவி இரண்டு விதமான வீல் பேஸ் கொண்ட மாடல்களில் வர இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் அதிக வீல் பேஸ் கொண்ட மாடலாகவும், இந்தியா உள்ளிட்ட வளரும் கார் சந்தைகளில் குறைவான வீல் பேஸ் கொண்ட மாடலாகவும் செல்ல இருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி - க்ராஸ் எஸ்யூவி வெளியீடு: க்ரெட்டா போட்டியாளர்

எஸ்யூவி மாடல் என்பதால் வலிமையான க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் இரு மருங்கிலும் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. எல்இடி பகல்நேர விளக்குகளும் ஹெட்லைட்டில் இடம்பெற்றுள்ளது. போலோ காரை போன்ற சாயலில் பம்பர், அதன் மேலாக பனி விளக்குகள் என முன்புறம் ஜெர்மானிய கார்களுக்கு உரிய மிடுக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி - க்ராஸ் எஸ்யூவி வெளியீடு: க்ரெட்டா போட்டியாளர்

பக்கவாட்டில் ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவி மிக அசத்தலாக இருக்கிறது. வலிமையான உடல் அமைப்பு பக்கவாட்டில்தான் தெரிகிறது. அதற்கு ஈடான விதத்தில், வீல் ஆர்ச்சுகள், சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூஃப் ரெயில்களும், காரை சுற்றிலும் இடம்பெற்றிருக்கும் பாடி கிளாடிங் சட்டங்களும் எஸ்யூவி மிடுக்கை கூட்டுகிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி - க்ராஸ் எஸ்யூவி வெளியீடு: க்ரெட்டா போட்டியாளர்

பின்புறத்தில் டெயில் லைட்டுகள் மிக வித்தியாசமாகவும், நேர்த்தியாகவும் இடம்பெற்றுள்ளது. இரண்டு டெயில் லைட் க்ளஸ்ட்டர்களையும் கருப்பு வண்ண பிளாஸ்டிக் சட்டம் மூலமாக இணைக்கப்பட்டு இருப்பது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. வலிமையான பம்ப் அமைப்பு இந்த சிறிய எஸ்யூவிக்கு கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி - க்ராஸ் எஸ்யூவி வெளியீடு: க்ரெட்டா போட்டியாளர்

வென்ட்டோ காருக்கு பதிலாக வர இருக்கும் புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் செடான் கார் உருவாக்கப்பட்ட அதே MQB A0 பிளாட்ஃபார்மில் டி க்ராஸ் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே மாடல் இந்தியாவில் சிறிய மாறுதல்களுடன் வர இருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி - க்ராஸ் எஸ்யூவி வெளியீடு: க்ரெட்டா போட்டியாளர்

இந்தியா, பிரேசில் மற்றும் சீனா உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் வர இருக்கும் ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் கார் 4.19 மீட்டர் நீளமும், 1.56 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த காரின் வீல் பேஸ் 2.65 மீட்டர் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் இருக்கைகள் மிக சிறப்பாகவும், அதிக லெக்ரூம் வசதி கொண்டதாகவும் இருக்கும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி - க்ராஸ் எஸ்யூவி வெளியீடு: க்ரெட்டா போட்டியாளர்

புதிய விட்ரஸ் செடான் கார் போலேவே இந்த எஸ்யூவியிலும் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.2 அங்குல திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்களுடன் வருகிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி - க்ராஸ் எஸ்யூவி வெளியீடு: க்ரெட்டா போட்டியாளர்

இந்த கார் பாதுகாப்பு வசதிகளிலும் சிறப்பாக இருக்கிறது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஆட்டோமேட்டிக் கொலிஷன் பிரேக் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி - க்ராஸ் எஸ்யூவி வெளியீடு: க்ரெட்டா போட்டியாளர்

புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் காரில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 94 பிஎச்பி பவரையும், 114 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் இரண்டுவிதமான ட்யூனிங்கில் கிடைக்கும். 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் வரும். 5 ஸ்பீடு மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 7 ஸ்பீடு டியூல் க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி - க்ராஸ் எஸ்யூவி வெளியீடு: க்ரெட்டா போட்டியாளர்

வரும் 2020 ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ கேப்ச்சர், நிஸான் கிக்ஸ் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறப்பான சாய்ஸாக அமையும்.

Article Published On: Saturday, October 27, 2018, 13:09 [IST]
English summary
German automaker Volkswagen has revealed the new T-Cross SUV in Amsterdam. The T-Cross is the first small SUV from the stable of Volkswagen. The Volkswagen T-Cross will be offered in two variants: short wheelbase for the European markets and long wheelbase variant for emerging markets.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+