இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மவுசு இல்லையா?

எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் பெரிய மவுசு இல்லை என ஃபோக்ஸ்வேகன் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆண்ட்ராஸ் லாவுர்மேன் தெரிவித்துள்ளார்.

By Balasubramanian

2030க்குள் இந்திய ரோடுகளில் ஓடும் அனைத்து கார்களையும் எலெக்ட்ரிக் கார்களாக மாற்ற வேண்டும் என மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் பெரிய மவுசு இல்லை என ஃபோக்ஸ்வேகன் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆண்ட்ராஸ் லாவுர்மேன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மவுசு இல்லையா?

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் : '' இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை அதிகப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்களை எடுத்து வருவது வரவேற்க்கதக்கது. ஆனால் இந்தியா அதற்காக இன்னும் தயாராகவில்லை.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மவுசு இல்லையா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்யும் நிலையங்கள் அதிக அளவில் இல்லை. எலெக்ட்ரிக் காரை பொறுத்தவரை சார்ஜ் செய்வது மிகவும் அவசியம் என்பதால் கார் உரிமையாளர்கள் இதை பெரும் குறையாக கருதுகின்றனர். அதே நேரத்தில் எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை இந்தியாவிற்கு அதிகமாக உள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மவுசு இல்லையா?

மத்திய அரசு தற்போது இஇஎஸ்எல் முலம் பொதுத்துறை நிறுவன தேவைகளுக்காகவும், அரசு துறை தேவைகளுக்காகவும், எலெக்ட்ரிக் கார்களை வாங்கியுள்ளது. டாடா நிறுவனம் மூலம் டிகோர் என்ற வாகனத்தையும், மகேந்திரா நிறுவனம் மூலம் இவெரிட்டோ என்ற வாகனத்தையும் வாங்கி செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மவுசு இல்லையா?

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அரசு தேவைக்காக இன்னும் 20 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களை வாங்க இஇஎஸ்எல் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் இந்தியாவில் விரைவாக சார்ஜ் ஏற்ற கூடிய நிலையங்களை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மவுசு இல்லையா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டை அரசு ஊக்குவித்தாலும், கார்களை சார்ஜ் செய்யும் நிலையங்ககள் அதிகரிக்காதவரை எலெக்ட்ரிக் கார் எண்ணிக்கைகளை அதிகரிக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல. தற்போது டாடா மோட்டார்ஸ், மகேந்திரா ஆகிய நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து வரும் நிலையில் விரைவில் மாருது சுசூகி, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் குதிக்கவிருக்கிறது.

Article Published On: Monday, March 19, 2018, 18:33 [IST]
English summary
India Is Not Ready For Electric Vehicles: Volkswagen India Chief. Read in Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+