ரகசியமாக போருக்கு தயாராகும் இந்தியா… ஆயுதங்களுடன் ஹம்மர் கார் தயார்...

இந்திய ராணுவம் ரகசியமாக ஹம்மர் கார்களை அதிக ஆயுதங்களுடனும், அதிக ஆயுதங்களை ஏற்றி செல்லும் திறனுடனும் தயாரித்து வருகிறது. இதன் மூலம் இந்திய ராணுவம் ரகிசயமாக போருக்கு தயாராகி வருகிறதா என்ற சந்தேகம் எழு

By Bala

இந்திய ராணுவம் ரகசியமாக ஹம்மர் கார்களை அதிக ஆயுதங்களுடனும், அதிக ஆயுதங்களை ஏற்றி செல்லும் திறனுடனும் தயாரித்து வருகிறது. இதன் மூலம் இந்திய ராணுவம் ரகிசயமாக போருக்கு தயாராகி வருகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ரகசியமாக போருக்கு தயாராகும் இந்தியா… ராணுவ பயன்பாட்டிற்காக ஆயுதங்களுடன் ஹம்மர் கார் தயாரிப்பு...

இந்தியா ராணுவம் தங்களின் தளவாடங்களை மேம்படுத்தும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறது.முக்கியமாக கடந்த சில நாட்களுக்கு முன் டாடா சஃபாரி காரை ராணுவ அதிகாரிகளின் போக்குவரத்திற்காக வாங்கியது.

ரகசியமாக போருக்கு தயாராகும் இந்தியா… ராணுவ பயன்பாட்டிற்காக ஆயுதங்களுடன் ஹம்மர் கார் தயாரிப்பு...

இந்நிலையில் ராணுவ வீரர்கள் செல்வதற்காக கனரக வாகனத்தை ரகசியமாக தயாரித்து வருகிறது இந்திய ராணுவம். இந்த வாகனம் பல்வேறு அம்சங்களை கொண்டு போர் காலத்தில் ராணுவ வீரர்கள் அதிக அளவில் உதவும் வகையில் தயாரிக்கப்படுகிறது.

ரகசியமாக போருக்கு தயாராகும் இந்தியா… ராணுவ பயன்பாட்டிற்காக ஆயுதங்களுடன் ஹம்மர் கார் தயாரிப்பு...

கல்யாணி குரூப்ஸ் என்று அழைக்கப்படக்கூடிய கல்யாணி ஸ்ராடெஜிக் சிஸ்டம்ஸ் லிமிட்டட் என்ற நிறுவனம் தற்போது எல்எஸ்வி ரக வாகனத்தை இந்திய ராணுவத்திற்காக தயாரித்து வருகிறது. இந்த வாகனத்தை ஏ எம் ஜெனரல் என்ற பிளாட்ஃபார்மில் இந்த காரை கட்டமைத்து வருகிறது.

ரகசியமாக போருக்கு தயாராகும் இந்தியா… ராணுவ பயன்பாட்டிற்காக ஆயுதங்களுடன் ஹம்மர் கார் தயாரிப்பு...

இந்த பிளாட்ஃபார்மில் தான் அமெரிக்க ராணுவத்தின் முக்கிய காரான HMMWV என்று அழைக்கப்படக்கூடிய ஹம்மர் கார் தயாரிக்கப்படுகிறது. இந்த கார் ஆமதாபாத் - டாமன் ரோட்டில் டெஸ்ட் செய்யப்படும் போது எடுக்கபபட்ட புகைப்படத்துடன் ரஷ்லேன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரகசியமாக போருக்கு தயாராகும் இந்தியா… ராணுவ பயன்பாட்டிற்காக ஆயுதங்களுடன் ஹம்மர் கார் தயாரிப்பு...

அதன் படி இந்த வாகனம் முழுவதும் ஆயுதங்கள் பொருத்தப்பட்டும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த இந்த காரின் வெளிப்புற கட்டமைப்பு காரின் கீழ் இலகு ரக வெடிகுண்டு வெடித்தாலும் உள்ளே இருப்பவர்களுக்கு எதுவும் ஆகாத படி தயாரிக்கப்பட்டுள்ளது.

ரகசியமாக போருக்கு தயாராகும் இந்தியா… ராணுவ பயன்பாட்டிற்காக ஆயுதங்களுடன் ஹம்மர் கார் தயாரிப்பு...

இதன் ரூப்கள் ஜீப் போல தார்பாய்களின் டாப்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற கார்கள் போல கடினமான ரூப்கள் அமைக்கப்படவில்லை. இது இந்திய ராணுவத்தின் ரகசிய திட்டத்தை செயப்படுத்துவதற்காக இந்த வடிவமைப்பை பெற்றுஇருக்கலாம் என பேசப்படுகிறது.

ரகசியமாக போருக்கு தயாராகும் இந்தியா… ராணுவ பயன்பாட்டிற்காக ஆயுதங்களுடன் ஹம்மர் கார் தயாரிப்பு...

கல்யாணி குரூப் இந்த காரின் வெளிப்புற வெளிப்புறத்தை முற்றிலும் மாற்றிவிட்டு வலுவான கட்டமைப்பை சொந்தமாக செய்து வருகின்றனர். இந்த கட்டமைப்பு சிறிய ரக துப்பாக்கி துண்டுகள் துளைக்காத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

ரகசியமாக போருக்கு தயாராகும் இந்தியா… ராணுவ பயன்பாட்டிற்காக ஆயுதங்களுடன் ஹம்மர் கார் தயாரிப்பு...

இந்த வாகனத்தில் சி செக்ஷன் சேஸிஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு அதிக ட்ராஸினல் ரெஜிடிட்டி பெறுவது தான் முக்கியமான காரணம். இந்த காரில் உள்ள இன்ஜின் குறித்த விபரங்கள் தெரியவில்லை எனினும் இது 187 பிஎச்பி பவரை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நேரடியாக 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டேமெட்டிக் கியர் பாக்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரகசியமாக போருக்கு தயாராகும் இந்தியா… ராணுவ பயன்பாட்டிற்காக ஆயுதங்களுடன் ஹம்மர் கார் தயாரிப்பு...

கல்யாணி நிறுவனம் இந்த காருக்கு 3.2மி மற்றும் 3.5 மி ஆகிய இரண்டு வீல்பேஸ்களை கொண்டு கட்டமைத்துள்ளது. இந்த காரில் மொத்தம் 5 பேர் வரை பயணம் செய்யும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் அதிக ஆயுதங்களை எடுத்து செல்லவும், இதில் இட வசதிகள் உள்ளது.

ரகசியமாக போருக்கு தயாராகும் இந்தியா… ராணுவ பயன்பாட்டிற்காக ஆயுதங்களுடன் ஹம்மர் கார் தயாரிப்பு...

மிக முக்கிய அம்சமாக இந்த வாகனம் போயீங் சிஎச் -47 சின்னுக் ஹெலிகாப்டர் மற்றும் சி- 130 ஹெர்குலீஸ், ஆகிய வாகனங்கள் இரண்டு எல்எஸ்வி ரக வாகனங்களை எற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனம் 4.5 டன் எடையை நிகர் எடையாக கொண்டுள்ளது. பயணத்திற்கும் ஆயுதங்களை எடுத்து செல்வதற்கு ஏற்ற வகையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

ரகசியமாக போருக்கு தயாராகும் இந்தியா… ராணுவ பயன்பாட்டிற்காக ஆயுதங்களுடன் ஹம்மர் கார் தயாரிப்பு...

இந்த வாகனம் குறித்து ராணுவம் இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிடவில்லை, இதனால் இது ரகசிய தயாரிப்பாக இருக்ககூடும், மேலும் இங்கு வெளியிடப்பட்ட தகவல்கள் அனைத்தும் குறைவானவையே இந்த வாகனங்களில் பல ரகசிய வசதிகள் இருக்க கூடும்.

ரகசியமாக போருக்கு தயாராகும் இந்தியா… ராணுவ பயன்பாட்டிற்காக ஆயுதங்களுடன் ஹம்மர் கார் தயாரிப்பு...

பாலாவின் பார்வையில் :

இந்தியா போன்ற நாடுகள் நிச்சயம் ராணுவத்தில் பலம் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாம் மற்றவர்கள் மீது போர் தொடுக்க வில்லை என்றாலும் அவர்கள் நம் மீது தாக்கினால் நிச்சயம் அதை தடுக்க நம்மிடம் பெரிய படை இருக்க வேண்டும். அதே நேரத்தில் இந்தியா சில மாதங்களுக்கு முன் வாங்கிய ரஃபேல் விமான குறித்த சர்ச்சைக்கே ஒரு தீர்வு வராத நிலையில் இந்த ஹம்மர் கார் விவகாரத்தையாவது அரசு சரியாக கையாள வேண்டும்.

இந்திய ராணுவம் இதற்கு முன்னர் டாடா சஃபாரி காரை தங்கள் பயன்பாட்டிற்காக வாங்கியது. அந்த டாடா சஃபாரி காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் மேலே காணலாம்.

Article Published On: Friday, September 14, 2018, 14:00 [IST]
English summary
Indian army building armored hummer car for their transportation. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+