TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
இந்திய வீரர்களின் கார் ரகசியங்கள்.. அடிக்கடி ஆடி காரில் வலம் வரும் ஜடேஜா.. மாமனார் மீது பயமா? பாசமா?
உலகின் மிக வலுவான கிரிக்கெட் அணிகளுள் ஒன்று இந்தியா. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற வேட்கையுடன் உள்ள இளம் தலைமுறை வீரர்களின் உதவியுடன், கிரிக்கெட் உலகில் தனது ஆதிக்கத்தை இந்தியா தொடர்ச்சியாக நிலை நாட்டி வருகிறது. அப்படிப்பட்ட இளம் தலைமுறை வீரர்கள் பயன்படுத்தும் கார்கள் குறித்த சுவாரசிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ரவீந்திர ஜடேஜா
ஆடி க்யூ7 (Audi Q7)
ஆடி க்யூ7 லக்ஸரி எஸ்யூவி காரை ரவீந்திர ஜடேஜா வைத்துள்ளார். இந்த கார் ரவீந்திர ஜடேஜாவின் திருமணத்திற்கு முன்னதாக, அவரது மாமனார் பரிசாக கொடுத்தது. அதனால்தான் என்னவோ, தனது மனைவியுடன் அடிக்கடி இந்த காரில் வலம் வருகிறார் ரவீந்திர ஜடேஜா.
ரவீந்திர ஜடேஜா வைத்துள்ள ஆடி க்யூ7 லக்ஸரி எஸ்யூவி காரில், 3.0 லிட்டர் வி6 (V6) டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 245 பிஎச்பி மற்றும் 600 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி சாலைகளில் சீறிப்பாயும் வல்லமை வாய்ந்தது.
ரஹானே
ஆடி க்யூ5 (Audi Q5)
இந்திய கிரிக்கெட் அணியில் வெகு விரைவாக புகழின் உச்சிக்கு சென்றவர் ரஹானே. இந்திய அணியை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் வகையில் பல இன்னிங்ஸ்களை விளையாடியுள்ள ரஹானே, ஆடி க்யூ5 காரை வைத்துள்ளார். இந்த காரை ரஹானே, அடிக்கடி பயன்படுத்தி வருகிறார்.
ரஹானேவிடம் உள்ள வெள்ளை நிற ஆடி க்யூ5 காரில், டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆடி க்யூ5 காரை வாங்குவதற்கு முன்பாக, சாதாரண மாருதி வேகன் ஆர் காரைதான் ரஹானே பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புவனேஸ்வர் குமார்
பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5)
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு அட்டாக், முன்னெப்போதும் இல்லாத வகையில், சமீப காலமாக சிறப்பான முறையில் முன்னேற்றம் கண்டு வருகிறது. இதற்கு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வலது கை வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமாரும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல.
பிஎம்டபிள்யூ 530டி எம்-ஸ்போர்ட் (BMW 530d M-Sport) காரை, புவனேஸ்வர் குமார் வைத்துள்ளார். இது மிகவும் லக்ஸரியான ஸ்போர்ட்டி வேரியண்ட். இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 3.0 லிட்டர் டீசல் இன்ஜின், 250 பிஎச்பி பவர், 540 என்எம் டார்க் திறனை உருவாக்கி, சாலைகளில் சீறிப்பாயும் வல்லமை வாய்ந்தது.
தினேஷ் கார்த்திக்
போர்ஸே கேமேன் எஸ் (Porsche Cayman S)
தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். போர்ஸே கேமேன் எஸ் காரை, தினேஷ் கார்த்திக் வைத்துள்ளார். கார்கள் என்றால் தினேஷ் கார்த்திக்கிற்கு எவ்வளவு பிரியம் என்பதற்கு இது ஒரு சாட்சி.
மிட் இன்ஜின்டு ஸ்போர்ட்ஸ் காரான போர்ஸே கேமேன் எஸ், பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 270 கிலோ மீட்டர்கள். அப்படியானால் இதன் செயல் திறன் எப்படி இருக்கும் என்று யூகித்து கொள்ளுங்கள்.
ஹர்திக் பாண்டியா
லேன்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் (Land Rover Range Rover Vogue)
புகழ்பெற்ற மனிதர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக விளங்கும் எஸ்யூவி கார்களில் ஒன்று லேன்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் செல்லப்பிள்ளை ஹர்திக் பாண்டியாவிடம், லேன்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் கார் உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கபில்தேவ் என புகழப்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா, கருப்பு நிற லேன்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் காரை வைத்துள்ளார். பாலிவுட் நட்சத்திரங்கள் பலரிடமும் கூட, இந்த கார் உள்ளது. இதுதவிர ஆடி ஏ6 (Audi A6) செடான் காரும், ஹர்திக் பாண்டியாவிடம் உள்ளது.
புஜாரா
ஆடி க்யூ3 (Audi Q3)
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவர் புஜாரா. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில், இவரது பங்களிப்பு அளப்பரியது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த வலது கை பேட்ஸ்மேனான புஜாரா, ஆடி க்யூ3 எஸ்யூவி காரை வைத்துள்ளார்.
புஜாரா போன்ற வெற்றிகரமான இளைஞர்களை குறிவைத்துதான் ஆடி க்யூ3 கார் களமிறக்கப்பட்டது. ஆடி க்யூ3 காரில், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 181 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது.
ஷிகார் தவான்
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் 350 (Mercedes Benz GL 350)
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் என்ற இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டுள்ள ஷிகார் தவானிடம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் 350 கார் உள்ளது. இந்திய மார்க்கெட்டின் முக்கியமான எஸ்யூவி கார்களில் இதுவும் ஒன்று. இந்த காரின் டீசல் வெர்ஷனை ஷிகார் தவான் வைத்துள்ளார்.
லோகேஸ் ராகுல்
மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 (Mercedes-AMG C43)
இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள உலகத்தரம் வாய்ந்த இளம் வீரர்களில் ஒருவர் லோகேஸ் ராகுல். வலது கை பேட்ஸ்மேனான லோகேஸ் ராகுல், தேவைப்படும் நேரங்களில் விக்கெட் கீப்பிங்கும் செய்து அசத்தக்கூடிய திறமை வாய்ந்தவர்.
லோகேஸ் ராகுல் சமீபத்தில், வெள்ளை நிற மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 செடான் காரை வாங்கியுள்ளார். இந்த காரில், 3.0 லிட்டர் வி6 (V6) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 348 பிஎச்பி பவரை வெளிப்படுத்த கூடிய திறன் வாய்ந்தது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்