இந்திய ரயில்வே நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்; மத்தியரசின் கேமிங் பிளான்..!!

இந்திய ரயில்வே நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்; மத்தியரசின் கேமிங் பிளான்..!!

By Azhagar

மின்சார வாகன பயன்பாட்டை நாட்டு மக்கள் மத்தியில் ஊக்குவிக்க, இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் தற்போது இந்திய ரயில்வே நிர்வாகமும் கைக்கோர்த்துள்ளது.

இந்தியாவின் ரயில்நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்

2030ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் வாகன பயன்பாடு மின்சார ஆற்றலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான செயல்பாடுகள் ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி உட்பட சில நகரங்களில் மட்டும் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் ரயில்நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்

இதனால் இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டிற்கான கட்டமைப்பு பணிகள் குறைந்தளவில் மட்டுமே நடைபெற்று வருவதாக பல வாகன நிறுவனங்கள் கவலை தெரிவித்து வருகின்றன.

இந்தியாவின் ரயில்நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்

இதனைப்போக்க மத்தியரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. தற்போது இந்தியாவின் மின்சார வாகன கட்டமைப்பிற்கான பணிகளில் இந்திய ரயில்வே நிர்வாகமும் கைக்கோர்த்துள்ளது. அதில் முதல்படியாக நம் நாட்டின் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்தியாவின் ரயில்நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்

ரயில் நிலையங்களின் வாகன பார்க்கிங் இடங்களில், சார்ஜிங் நிலையங்கள் அமையவுள்ளன. இதனால் மின்சார வாகன பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கும் என மத்தியரசு திட்டமிடுகிறது.

இந்தியாவின் ரயில்நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்

முதற்கட்டமாக புது டெல்லி மற்றும் நிஜாமுதின் ரயில் நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமையவுள்ளன. இதற்கான தொடக்க பணிகளை ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவின் ரயில்நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்

ஒரே நேரத்தில் 10 மின்சார கார்களின் பேட்டரிகளை இந்த நிலையங்களில் சார்ஜ் செய்யலாம். மேலும் இந்த இரண்டு சார்ஜிங் நிலையங்களும் டிசி பாயின்ட்ஸ் தேவையில் இயங்கும். இதன் காரணமாக துரிதகதியில் பேட்டரிக்கு சார்ஜ் கிடைக்கும்.

இந்தியாவின் ரயில்நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்

தோராயமாக, ஏசி பாயின்ட்ஸ் கொண்ட சார்ஜர்கள் முழுவதுமாக சார்ஜாக 6 மணி நேரமாகும். அதனால் டிசி சார்ஜர்கள் முழு சார்ஜ் திறனை வெறும் 40 முதல் 60 நிமிடங்களில் எட்டிவிடும்.

இந்தியாவின் ரயில்நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்

ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுவது நல்ல திட்டம் தான். இதனால் மின்சார வாகன பயன்பாடு அதிகரித்து சுற்றுச்சூழலுக்கு பெரிய நன்மையை தரும்.

இந்தியாவின் ரயில்நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்

இந்திய ரயில்வே நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் பணிகளை BSES - Rajdhani Power Ltd (BRPL) நிர்வாகம் மேற்கொள்ளும்.

இந்தியாவின் ரயில்நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்

ரூ. 15 லட்சம் முதலீட்டில் டெல்லி மற்றும் நிஜாமுதின் பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கின்றன. டிசி திறன் படைத்த ஒரு சார்ஜிங் நிலையம் அமைய ரூ. 3 லட்சம் தேவைப்படுகிறது.

இந்தியாவின் ரயில்நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்

BSES நிர்வாகம் இந்த சார்ஜிங் நிலையங்களுக்கான செயல்பாடுகளை மேலாண்மை செய்யும். அதற்கான கட்டண விவரங்களை டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (DERC) நடைமுறைப்படுத்தும்.

இந்தியாவின் ரயில்நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்

இதுப்பற்றி பேசிய ரயில்வே அதிகாரி ஒருவர், இந்த இரு மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் வருவாயை கவனத்தில் கொண்டு அமைக்கப்படவில்லை. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்டு வரும் காற்று மாசுவை குறைப்பது தான் மத்திய அரசின் நோக்கம் என்று தெரிவித்தார்.

இந்தியாவின் ரயில்நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்

ரயில்வே நிர்வாகத்தின் துணையோடு மின்சார வாகன பயன்பாடு இந்தியாவில் அதிகரிக்கப்படும். இதன் காரணமாக பருவ நிலை மாற்றம் தொடர்பாக பாரீஸ் ஒப்பந்தத்தில் இந்தியாவின் பங்கு பெரியளவில் இருக்கும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

இந்தியாவின் ரயில்நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்

பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுவின் தேவைகளை குறைத்து, காற்று மாசு அதிகரிப்பதை தடுக்கவே மின்சார வாகன பயன்பாட்டை அரசு ஊக்குவிக்க முயல்கிறது.

இந்தியாவின் ரயில்நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்

இந்திய ரயில்வே நிர்வாகம் துணைக்கொண்டு நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைய தொடங்கினால், அது அரசிற்கு மேலும் வருவாயை அதிகரிக்கும் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் ரயில்நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்

இந்தியாவின் வாகன பயன்பாட்டை மின்சார ஆற்றலுக்கு மாற்றினால், மற்ற நாடுகளிலிருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயுக்களை இறக்குமதி செய்வது குறையும். தொடர்ந்து சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

இந்தியாவின் ரயில்நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்

மத்திய அரசின் வாகன கொள்கையில் இந்தியாவின் ரயில்வே நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைவது முக்கிய திட்டமாக அமையலாம்.

குறைந்த நேரத்தில் மின்சார வாகன பேட்டரிகள் சார்ஜாவது போன்ற அடிப்படை அம்சங்கள் காரணமாக, எதிர்காலத்தில் மின்சார வாகன பயன்பாடு இந்திய மக்கள் மத்தியில் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Read in tamil: Indian Railway Stations To Get Electric Vehicle Charging Points. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X