TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
பல கோடி ரூபாய் மதிப்புடைய சூப்பர் கார்களில் கெத்தாக வலம் வரும் இந்திய பெண்கள்..
சூப்பர் கார்கள் மிகவும் விலை உயர்ந்தவை. இந்திய சாலைகளில் சூப்பர் பைக்குகளை பார்ப்பதே அபூர்வம் எனும்போது, சூப்பர் கார்களை பார்ப்பது என்பது அரிதிலும் அரிதான ஒரு விஷயம்தான். எனினும் இந்தியாவை சேர்ந்த சில பெண்கள் சூப்பர் கார்களை சொந்தமாக வைத்துள்ளனர். இதுகுறித்த சுவாரசிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மல்லிகா ஷெராவத்
லம்போர்கினி அவென்டெடார் எஸ்வி (Lamborghini Aventador SV)
பாலிவுட் திரையுலகம் மூலம் மிகவும் பிரபலமான பிறகு இந்தியாவிற்கு வெளியே மல்லிகா ஷெராவத் ஷெட்டில் ஆகி விட்டார். இங்கிலாந்து நாட்டில், லம்போர்கினி அவென்டெடார் எஸ்வி காரை, மல்லிகா ஷெராவத் சொந்தமாக வைத்துள்ளார்.
இது லம்போர்கினி அவென்டெடார் காரின் லைட்வெயிட் வெர்ஷன். மிகவும் சக்தி வாய்ந்த இன்ஜினை இந்த கார் பெற்றுள்ளது. இந்த வெள்ளை நிற சூப்பர் காரில், 6.5 லிட்டர் வி12 (V12) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 740 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த சக்தி 4 வீல்களுக்கும் வழங்கப்படுகிறது.
ஸ்வாதி பகா
ஃபெராரி கலிபோர்னியா டி (Ferrari California T)
டெல்லியை சேர்ந்த ஸ்வாதி பகாவிற்கு கார்கள் மீது அவ்வளவு பிரியம். இவர் முன்னதாக ஃபெராரி எப்430 ஸ்பைடர் (Ferrari F430 Spider), ஃபெராரி 458 இத்தாலியா (Ferrari 458 Italia) உள்ளிட்ட கார்களை சொந்தமாக வைத்திருந்தார்.
தற்போது அவரிடம் ஃபெராரி கலிபோர்னியா டி (Ferrari California T) கார் உள்ளது. இது அவரது மூன்றாவது ஃபெராரி கார். இந்த காரை ஸ்வாதி பகாவேதான் ஓட்டுவார். இது மட்டுமல்லாமல், பிஎம்டபிள்யூ இஸட் 4 மற்றும் ஜாக்குவார் எப்-டைப் வி6எஸ் உள்ளிட்ட கார்களையும் ஸ்வாதி பகா வைத்துள்ளார்.
ஹர்டு கவுர்
ஃபெராரி 458 இத்தாலியா (Ferrari 458 Italia)
ஹிப் ஹாப் பாடல்கள் மூலம் இசை துறையில் மிகவும் பிரபலமாக உருவெடுத்தவர் ஹர்டு கவுர். இந்த ஹிப் ஹாப் பாடகி உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்குகிறார். ஃபெராரி 458 இத்தாலியா (Ferrari 458 Italia) காரை, ஹர்டு கவுர் வைத்துள்ளார்.
மிகவும் பிரபலமான செகண்ட் ஹேண்டு சூப்பர் கார் டீலரான பிக் பாய்ஸ் டாய்ஸ் நிறுவனத்திடம் இருந்து இந்த காரை, ஹர்டு கவுர் வாங்கினார். இந்த ரத்த சிவப்பு நிற ஃபெராரி 458 இத்தாலியா காரில், 4.5 லிட்டர் வி8 (V8) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 562 பிஎச்பி பவரை வெளிப்படுத்தி சீறிப்பாயும் திறன் வாய்ந்தது. இந்த அதிசக்தி வாய்ந்த இன்ஜின் மூலமாக, பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.4 வினாடிகளிலேயே ஃபெராரி 458 இத்தாலியா எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷில்பா ஷெட்டி
பிஎம்டபிள்யூ ஐ8 (BMW i8)
பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி, கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். பிஎம்டபிள்யூ ஐ8 காரை கடந்த வருடம் ஷில்பா ஷெட்டி வாங்கினார். இந்த ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் மிகவும் தனித்துவமானது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரிடமும் இந்த கார் உள்ளது.
பிஎம்டபிள்யூ ஐ8 காரில், 1.5 லிட்டர் டிவின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 231 பிஎச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது. 2 டோர் கூப் வகை மாடல் காரான இது, 2 எலக்ட்ரிக் மோட்டார்களையும் பெற்றுள்ளது.
இது கூடுதலாக 131 பிஎச்பி பவரை வழங்கும். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை பிஎம்டபிள்யூ ஐ8 கார், வெறும் 4.4 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை வாய்ந்தது.