இதை படிச்சா உங்களுக்கு கார் வாங்குற ஆசையே போயிரும்..!

இன்று உலக ஆட்டோமொபைல் சந்தையில் இந்தியா ஒரு முக்கிய இடத்தில் இருக்கிறது. பல்வேறு நாடுகளில் உள்ள ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனை செய்யவோ அல்லது இந்தியாவில் தங்

இன்று உலக ஆட்டோமொபைல் சந்தையில் இந்தியா ஒரு முக்கிய இடத்தில் இருக்கிறது. பல்வேறு நாடுகளில் உள்ள ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனை செய்யவோ அல்லது இந்தியாவில் தங்கள் தயாரிப்புகளை தயாரிக்கவோ ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

ஆனால் சமீபகாலமாக இந்தியர்களுக்கு கார் பயன்பாட்டின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. பலர் கார்களை வாங்குவதில் அதிக தயக்கம் காட்டி வருவதாகவும் பேசப்படுகிறது. அதற்கு பல்வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன. இதை பார்க்கும் முன் நாம் பார்க்க வேண்டிய வேறு ஒரு சம்பவம் இருக்கிறது.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

பெங்களூருவை சேர்ந்தவர் அணிஷ் குல்கர்னி. தற்போது 36 வயதாகும் இவர் கடந்த 2006ம் ஆண்டு திருமணமாகி தனது முதல் காராக ஹூண்டாய் சான்ட்ரோ காரை வாங்கினார்.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

இவர் இந்த காரை வாங்குவதற்கு முக்கிய காரணம் இவரும், இவரது மனைவியும் டிரைவிங் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தனர். இதனால் தங்கள் தினசரி பயன்பாட்டிற்கு இந்த கார் நிச்சயம் தேவைப்படும் என இருவரும் எண்ணினர்.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

இந்த காரில்தான் அலுவலகம் செல்வது, வார விடுமுறைகளில் வெளியூர் அல்லது ஷாப்பிங் செல்வது என்று தங்கள் புதுமண வாழ்க்கையை அவர்கள் சிறப்பாக துவங்கினர்.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

இப்பொழுது 2018. குல்கர்னி தற்போது சற்று பணக்காரர் ஆகிவிட்டார். அவரிடம் இப்பொழுது அந்த சான்ட்ரோ கார் இல்லை. அதற்கு பதிலாக ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரை வைத்திருக்கிறார். ஆனால் இன்று அவரது வாழ்வு முறையே மாறிவிட்டது.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

அவர் பெங்களுரூவில் வசித்து வருகிறார். அவர் வசிக்கும் இடத்தில் இருந்து அவரது அலுவலகம் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இதற்கு அவர் தினமும் காரில் செல்வது இல்லை. பெங்களுருவில் சமீப காலமாக ஏற்படும் டிராபிக், காரில் பயணிப்பவர்களுக்கு ஏற்றதாக இல்லை.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

இதனால் இவர் வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு சைக்கிளில் அலுவலகத்திற்கு செல்கிறார். அது காரில் செல்வதை விட குறைந்த நேரம்தான் செலவாகிறது. மேலும் அது அவரது உடலுக்கு சிறந்ததாக இருக்கிறது.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

அதே நேரத்தில் மற்ற நாட்களில் ஓலா /உபேர் போன்ற புக்கிங் கால் டாக்ஸியிலோ அல்லது பைக் டாக்ஸி, மெட்ரோ ரயிலிலோ பயணிக்கிறார். சில நேரங்களில் கார்களில் ஷேர் ரைடில் கூட பயணிக்கிறார்.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

அவரது மனைவியும் தற்போது தன் கணவரை போலவே செய்கிறார். ஆனால் அவர் அலுவலகத்திற்கு சைக்கிளில் செல்வது இல்லை. எப்பொழுதும் மற்ற வாகனங்களில்தான் செல்கிறார். தங்களது சொந்த வாகனத்தை இருவரும் தவிர்க்கின்றனர்.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

தங்களது ஃபோக்ஸ்வேகன் காரை வெளியூர்களுக்கு செல்லும் போது குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள் கார் வாங்கிய போது அவர்கள் தினப்பயன்பாட்டிற்கு பயன்படும் என்பதற்காவே காரை வாங்கினர்.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

இப்படியாக காலம் ஒவ்வொருவரது வாழ்விலும் நேர் எதிர்மாறான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் கார் பயன்படுத்தும் வழக்கத்தையே மாற்றி விடுகின்றனர். இது மட்டும் இல்லாமல் ஷேர் ரைடிங் என்ற வாய்ப்பு அன்றைய காலகட்டத்தில் இல்லாத ஒன்று. இன்று இது சுலபமாக கிடைக்கும் என்று காலம் மாறியுள்ளது.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

தற்போது உலகம் முழுவதும் பெருகி வரும் டிராபிக்கால் பொது வாகன பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவில் தொடர்ந்து வாகன விற்பனைதான் அதகிரித்து வருகிறது. வாகனம் வாங்கும் அளவிற்கு வசதியுள்ள மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

எதிர்காலத்தில் இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் கார் வாங்கும் திறன் வந்து விடும். ஆனால் அவர்களுக்கு அவசியம் இருக்கிறதோ இல்லையோ, பயன்படுத்துகிறார்களோ இல்லையோ அவர்களிடம் கார் இருக்கும் என்ற மோசமான நிலை உருவாகும்.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

சில வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற இடங்களில் கிட்டத்தட்ட இந்த நிலை வந்து விட்டது. அதை உணர்ந்த அவர்கள் மெது மெதுவாக மாறத்துவங்கியுள்ளனர். இன்று நியூயார்க், சான் பிரான்ஸிஸ்கோ போன்ற நகரங்களில் பெரும்பாலானோர் சொந்தமாக கார் வைத்திருப்பதில்லை.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

கார் ஷேரிங்கில் செல்வது என்பது குறைந்தது 3 கார்களுக்கான தேவையை குறைக்கிறது. 2030ம் ஆண்டு அமெரிக்காவில் கார் விற்பனை தற்போது உள்ளதைவிட 12 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

இதை உணர்ந்த பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தாங்களே கார் ஷேரிங் ரைட் மற்றம் ரென்டல் ரைடுகளை நடத்தி வருகின்றனர்.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

இது குறித்து சர்வதேச ஆட்டோ சந்தை வல்லுநர் கூறுகையில் "எதிர்காலத்தில் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற தேவையே மக்களுக்கு இருக்காது. உபேர் போன்ற கார் ரென்டல் அல்லது ஷேர் ரைடிங்தான் மலிவானதாக இருக்கும்" என்றனார்.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்றில் இந்தியர்களின் சராசரி வருமானமாக 2,134 அமெரிக்க டாலர் இருக்கும் நிலையில் தற்போது ஆண்டிற்கு 30 லட்சம் கார்கள் விற்பனையாகிறது. இது ஒவ்வொரு 1000 பேருக்கு 50 வாகனங்கள் என கணக்கிடப்படுகிறது.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

இதுவே 7,329 அமெரிக்க டாலரை சராசரி வருமானமாக கொண்ட சீனர்கள் ஆண்டிற்கு 2.40 கோடி கார்களை வாங்குகின்றனர். இது ஒவ்வொரு 1000 பேருக்கு 231 வாகனங்கள் என கணக்கிடப்படுகிறது.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

கடந்தாண்டு கூட மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் மாருதி சுஸூகி நிறுவனத்தின் சேர்மன் பார்கவா ஆகியோர் இளம் தலைமுறையினர் கார்களை வாங்க தயங்குவதாக தெரிவித்திருந்தனர்.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

பெரு நகரங்களில் டிரண்டில் என்ன இருக்கிறது என்பதுதான் வர்த்தகமாகும் அந்த வகையில் மாறி வரும் வாழ்க்கை முறை, மாசு குறித்த விழிப்புணர்வு, போக்குவரத்து நெருக்கடி, நீண்ட நேர பயணம், அதிக பார்க்கிங் கட்டணம், மெட்ரோ ரயில்கள், புதிதாக வந்துள்ள ஆஃப் பேஸ் மொபிலிட்டி ஆகியன தற்போது அதிகமாக வாகனம் வாங்கி வரும் இந்தியர்களையும் வாகனம் வாங்குவதை குறைக்க வழி வகுத்து வருவதாக பேசப்படுகிறது.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

அதே நேரத்தில் மக்கள் கார்களில் பயணிக்கவே எதிர்காலத்தில் விரும்புவார்கள். கார் பயன்பாட்டை மக்கள் மத்தியில் இருந்து அவ்வளவு எளிதாக நீக்கி விட முடியாது.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

மும்பை ஐஐடி பட்டதாரியான சிங்தா லால் என்ற 25 வயது பெண்மணி சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் அவர் தற்போது குர்கானில் பணியாற்றுவதாகவும்,

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

ஒரு 4 அறை வீட்டில் தனது நண்பர்களுடன் தங்கியிருப்பதாகவும், எல்லா வேளைகளிலும் வெளியிலேயே சாப்பிடுவதாகவும், அவரது பிறந்த நாளுக்கு ஒரு சிறிய ரக படகையே வாடகைக்கு எடுத்து கொண்டாடியதாகவும் தெரிவித்திருந்தார்.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

மேலும் அவர் தனக்கு கார் வாங்க வசதியிருக்கிறது. ஆனால் விருப்பமில்லை எனவும் காரை பராமரிப்பது கூடுதல் செலவாக தோன்றுவதாகவும், ஓலா, உபேர் மெட்ரோ, ஜூம் கார் போன்ற வசதி இருப்பதால் அதைதான் தான் பயன்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஆட்டோமொபைல் பற்றி செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

இதே போன்றுதான் ஐதராபாத்தை சேர்ந்த கணேஷ் சங்கர் என்பவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிகிறார். இவர் கூறுகையில் "நான் எனது பணத்தை மொத்தமாக காரில் கொண்டு முடக்க விரும்பவில்லை. எனது அலுவலகத்தில் கேப் வசதி இருக்கிறது. வார விடுமுறைகளில் வெளியே செல்ல ஓலா, உபேரை பயன்படுத்துகிறேன்.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

அதுவே குறைந்த விலையில் கிடைக்கிறது. வெளியூர்களுக்கு செல்ல ஜூம் காரை பயன்படுத்துகிறேன். இதுதான் எனக்கு டென்ஷன் இல்லாத பயணத்தையும், குறைந்த செலவையும் ஏற்படுத்துகிறது" என கூறுகிறார்.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

இதே போல டிஜிட்டல் கன்சல்டண்ட்டாக உள்ள துருவ் சோப்ரா ஒரு காலத்தில் மெர்சிடிஸ் சி கிளாஸ் காரை வைத்திருந்தார். ஆனால் அதை விற்று விட்டு தற்போது மாருதி SX4 கார் வாங்கியுள்ளார். ஏன் என்று அவரிடம் கேட்ட போது மெர்சிடிஸிற்கு தினமும் சுமார்

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

3 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஒரு ஆடம்பர கார் வைத்திருக்கிறோம் என்ற பெயருக்காக மட்டும் இவ்வளவு செலவு செய்வது எனக்கு சரியாக படவில்லை என்றார்.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

மக்கள் பலர் ஓலா, உபேர் போன்ற கேப்களை பயன்படுத்த முக்கிய காரணம் அவர்கள் சொந்தமாக கார் வைத்திருந்தால் ஒன்று காரை அவர்களே ஓட்ட வேண்டும். பயணத்தின் போது ஓய்வு எடுக்கவோ நம்முடன் பயணம் செய்பவர்களுடன் முழு ஈடுபாட்டுடன் நேரம் கழிக்கவோ முடியாது. அப்படி செய்ய வேண்டும் என்றால் அதற்காக ஒரு டிரைவரை தனியாக நியமிக்க வேண்டும்.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

மேலும் காரை பார்க் செய்யவும் இடம் தேட வேண்டும் அதற்காக அதிக நேரத்தையும் செலவு செய்ய வேண்டும். ஆனால் கேப்களில் இந்த பிரச்னைகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் பல இடங்களில் கட்டண பார்க்கிங் உள்ளது. கடந்த ஐந்தாண்டிற்கு முன் 4 மணி நேரத்திற்கு ரூ.20ஆக இருந்த பார்க்கிங் கட்டணம் இன்று 1 மணி நேரத்திற்கு 20ஆக மாறிவிட்டது. இது எல்லாம்தான் மக்கள் மத்தியில் சொந்தமாக கார் வாங்குவதில் ஏற்றும் சிக்கல் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

இது மட்டும் அல்ல டிராபிக் பிரச்னை பெரும் பிரச்னையாக இருக்கிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் சுமார் 45 நிமிடத்தில் கடந்த இடத்தை இன்று கடக்க சுமார் 2 மணி நேரம் ஆகிறது. இந்த பிரச்னை இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் உள்ளது.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

நியூயார்க் இந்த பிரச்னையை சந்தித்த போது அங்குள்ள நடந்து செல்பவர்கள் மற்றும் சைக்கிளில் செல்பவர்களுக்கான தனியாக பாதைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 400 மைல் (640 கி.மீ) தூரத்திற்கு பாதை அமைக்கப்பட்டது. பல மக்கள் கார்களில் சென்று டிராபிக்கில் சிக்குவதை விட நடந்து அல்லது சைக்கிளில் செல்லாம் என்ற முடிவில் இந்த பாதையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

மேலும் அங்கும் பலர் சொந்த கார்கள் இருந்தும் பஸ், ரயில், சைக்கிள், டாக்ஸி, கார் ஷேரிங் போன்ற போக்குவரத்தை பயன்படுத்த துவங்கிவிட்டனர். அது அவர்களுக்கு குறைவான செலவை ஏற்படுத்துவதோடு, விரைவாகவும் ஒரு இடத்திற்கு செல்ல முடிகிறது.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

தற்போது இந்திய மக்களும் மெது மெதுவாக பல்வேறு காரணங்களால் அந்த நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். முக்கியமாக டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வந்தவுடன் பலர் கார்களை பயன்படுத்துவதை குறைத்து கொண்டதாக ஒரு ஆய்வு முடிவு சொல்கிறது.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

இது மட்டும் அல்ல இன்று வோகோ, ரேப்பிட்டோ, பவுண்ஸ், ஓலா பெடல் போன்ற நிறுவனங்கள் பைக்குகளை வாடகைக்கு விடும் வாய்ப்புகளையும் வழங்குகிறது. இது பெரும்பாலான நகரங்களில் இல்லை என்றாலும் பெரு நகரங்களை குறித்து வைத்து இது போன்ற நிறுவனங்கள் துவங்கப்படுகின்றன.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

2015ம் ஆண்டில் தினமும் சுமார் 10 லட்சம் ரைடுகளை வெற்றிகரமாக புக் செய்து வந்த ஓலா மற்றும் உபேர் இன்று சுமார் 35 லட்சம ரைடுகளை தினமும் வெற்றிகரமாக முடிக்கின்றனர். இந்த கேப் சர்வீஸ் எல்லாம் 10 சதவீத இந்தியர்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்கிறது. மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு இன்று அமையவில்லை.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

ஷட்டல் எனப்படும் அலுவலகத்திற்கு செல்லும் ஆஃப்ஸ் பேஸ்டு ஆபீஸ் பஸ் சர்வீஸ் இன்று டெல்லி மற்றும் கொல்கத்தா நகரங்களில் இயங்கி வருகிறது. சுமார் 1000 பஸ்கள் இயங்கும் இந்த சர்வீஸ் தினமும் 55 ஆயிரம் ரைடுகளை புக் செய்கிறது. இதை 2020க்குள் இன்னும் 10 நகரங்களுக்கு கொண்டு செல்ல அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுவும் எதிர்காலத்தில் சொந்த வாகனத்திற்கான தேவையை குறைக்க மிக முக்கிய காரணமாக இருக்கும்.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

வாடகை ஸ்கூட்டர் சேவையை வழங்கி வரும் வோகோ நிறுவனம் இன்று பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் இயங்குகிறது. இன்று 1000 ஸ்கூட்டர்களுடன் இயங்கி வரும் இந்நிறுவனம் 2020ம் ஆண்டிற்குள் 5 லட்சம் வாகனங்களுடன் தினமும் 10 லட்சம் ரைடை கொண்டு வர தன் இலக்காக கொண்டு செயல்படுகிறது.

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு வகையான வாய்ப்புகள் பெருகி விட்டன. இது இன்னும் சில ஆண்டுகளில் நாட்டில் பெரும்பாலான நபர்களுக்கு சென்று விடும். இதை உணர்ந்த வாகன தயாரிப்பாளர்களும் தனி நபர்களை விட கேப்ஸ்/ வாடகை வாகன நிறுவனங்களுக்கு வாகனங்களை விற்பனைதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனடியாக பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

இதை படிச்சா கார் வாங்குற ஆசையே போயிரும்..!

நீங்களும் உங்கள் வாழ்க்கை முறையை உங்கள் வருமானத்தையும், செலவையும் உணர்ந்து இது போன்று மாற்றிக்கொள்வதுதான் சிறந்தது. எதிர்காலத்தில் சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்குதான் மதிப்பு என்ற பிம்பம் உடைக்கப்பட்டுவிடும். சொந்தமாக காரே இல்லாவிட்டாலும் தினமும் காரில் பயணிப்பவர்களே ஸ்மார்ட்டாக யோசிப்பவர்கள்.

Most Read Articles
English summary
Indians are slowly changing their habit of commuting. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X