விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்கும் இந்தியர்கள்; கஜானா காலியாவதால் மத்தியரசு கடுப்பு

இந்தியாவில் இருந்து பூட்டானிற்கு ஏற்றுமதியாகும் பெட்ரோலை, பூட்டானிற்கு சென்று இந்தியாவை விட குறைந்த விலையில் மேற்கு வங்க மக்கள் வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதால் அவ

இந்தியாவில் இருந்து பூட்டானிற்கு ஏற்றுமதியாகும் பெட்ரோலை, பூட்டானிற்கு சென்று இந்தியாவை விட குறைந்த விலையில் மேற்கு வங்க மக்கள் வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதால் அவ்வாறு பெட்ரோல் வாங்குபவர்களுக்கு தனியாக வரி விதிக்க வேண்டும் என இந்தியா முயன்று வருகிறது.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

இந்தியாவில் இன்று பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறியுள்ளது. பலர் பெட்ரோல் பங்க் பக்கம் செல்லவே பயப்படுகின்றனர். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக பெட்ரோல் விலை மேலும் ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

இதற்கிடையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் இருந்து அமெரிக்கா போடும் முட்டுக்கட்டைக்கு இந்தியா இன்னும் சரிவர முடிவு செய்யவில்லை. இதுவும் பெட்ரோல் விலையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

இதற்கிடையில் இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை ரூ.82ஐ தாண்டியும், டீசல் விலை ரூ.72ஐ தாண்டியும் விற்பனையாகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிக விலையில் விற்பனையாகி வந்த பெட்ரோல், டீசல் தற்போது மத்திய அரசின் கலால் வரி தள்ளுபடியால் மேலும் விலை சற்று குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

இந்நிலையில் மேற்கு வங்க மக்களுக்கு மட்டும் இந்தியாவில் விற்பனையாகும் பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு ரூ.12 குறைவாக பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. என்ன ரூ.12 குறைவா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? இந்த விஷயத்திற்கு பின்னர் ஒரு பெரும் கொடூரமான விஷயமும் உள்ளது.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டியுள்ள நாடு பூட்டான். இந்த நாட்டின் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டர் ரூ.72 என்றும், டீசல் லிட்டர் ரூ.64 என்றும் விற்பனையாகிறது. இது இந்தியாவை விட லிட்டருக்கு ரூ.12 வரை குறைவு.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

இதுமட்டுமல்லாது பூட்டானில் இந்தியாவில் உள்ளது போல் தினந்தோறும் பெட்ரோல் விலையில் மாற்றம் இருக்காது. அவ்வப்போது மட்டுமே மாற்றம் இருக்கும்.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

இந்நிலையில் மேற்கு வங்க மக்கள் தேசிய நெடுஞ்சாலை எண் 31 அதவாது அஸாம் சாலை என்று அழைக்கப்படக்கூடிய சாலை வழியாக செல்லும் போது அங்கிருந்து இன்னும் சில கி.மீ. சென்றால் பூட்டானிற்கு செல்லலாம். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பூட்டானிற்கு சென்று குறைந்த விலையில் பெட்ரோல் போட்டு வருகின்றனர்.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

இதனால் அந்த பகுதியில் பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக பெட்ரோல் டீலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

இந்தியாவும், பூட்டானும் நட்பு நாடாக இருக்கிறது. இந்தியாவில் இருந்து பூட்டானிற்கு செல்ல விசா எடுக்க வேண்டிய தேவையில்லை. மேலும் பூட்டானில் இந்திய பணம் செல்லும். மேலும் அங்கு இந்திய பணத்தை பூட்டான் நாட்டு பணமாக மாற்றி கொள்வதற்கான எளிமையான வழிமுறைகளும் உள்ளன.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

இது மட்டும் இல்லாமல் இந்தியாவில் இருந்து பூட்டானிற்கு சென்று பெட்ரோல் நிரப்பி வருவது சட்டப்படி தவறான விஷயமும் இல்லை. ஆனால் அவ்வாறு செய்வது இந்தியாவிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

என்.எச் 31ல் இந்தியாவை சேர்ந்த 150 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இந்த பங்க்குகளில் எல்லாம் மக்கள் பூட்டானிற்கு சென்று பெட்ரோல் போட்டு வருவதால் சுமார் 20 சதவீத விற்பனைைய இழக்கின்றனர்.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

தினமும் 250 கிலோ லிட்டர் டீசல் மற்றும் 135 கிலோ லிட்டர் பெட்ரோல் இதனால் விற்பனையாவதில்லை என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில், மாநில அரசிற்கான வரி லிட்டருக்கு ரூ.10 மற்றும் மத்திய அரசின் வரி லிட்டருக்கு ரூ.16 என கணக்கிட்டால் ரூ.750 கோடி மதிப்பிலான வியாபாரமும், ரூ.176 கோடி மதிப்பிலான வரி வருவாயும் இழப்பு ஏற்படுகிறது.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

இதற்கு ஒரு தீர்வாக பூட்டானிற்குள் செல்லும் இந்தியா வாகனங்களுக்க பூயல் லாக் கார்டு என்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

அதில் பூட்டானில் இந்திய வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டால் இந்த லாக் கார்டில் அவர்கள் நிச்சயம் பதிவு செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி அதை அவர்கள் நடைமுறைக்கு கொண்டு வரும் பட்சத்தில்

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

அங்கு செல்லும் வாகனங்கள் திரும்ப வரும் போது அந்த கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள அளவின் படி இந்தியாவிற்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்தால் மட்டுமே இந்தியாவிற்குள் அந்த வாகனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

இவ்வாறு செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்ய முடியும். ஆனால் வருவாய் இழப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கும் முன் பூட்டானில் மட்டும் எப்படி குறைவான விலையில் பெட்ரோல் கிடைக்கிறது என்று யோசித்தீர்களா?

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

இதில் பெரும் அதிர்ச்சிகரமான உண்மை ஒளிந்திருக்கிறது. பூட்டான் நாடு கச்சா எண்ணெயை நேரடியாக இறக்குமதி செய்து பெட்ரோல் தயாரிப்பதில்லை. மாறாக பெட்ரோலையே நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றனர்.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

கச்சா எண்ணெய்க்கு என்று சர்வதேச மார்கெட்டில் எப்படி ஒரு விலை இருக்கிறதோ அதே போல பெட்ரோலுக்கும் சர்வதேச மார்கெட்டில் ஒரு விலை இருக்கிறது. எந்த நாடு சர்வதேச அளவில் பெட்ரோலை வர்த்தகம் செய்தாலும் இந்த விலையில்தான் வர்த்தகம் செய்ய வேண்டும்.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

இன்றைய சர்வதேச பெட்ரோல் விலை ஒரு கேனுக்கு 2.25 அமெரிக்க டாலராகும். அதவாது லிட்டருக்கு ரூ.40 என கணக்கிட்டு கொள்ளலாம்.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

இந்த விலையில் பூட்டானிற்கு சென்றாலும் போக்குவரத்து செலவு, சேமிப்பு கிட்டங்கி செலவு, இன்சூரன்ஸ் செலவு என எல்லாம் சேர்ந்தது ரூ.52 வரை அசலாகிறது. அதன் பின் அந்நாட்டு அரசு வரி விதித்து பெட்ரோலை ரூ.72 என்ற விலையில் விற்பனை செய்கிறது.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

இந்த பெட்ரோல்கள் எல்லாம் எங்கு இருந்து வருகிறது தெரியுமா? எல்லாம் இந்தியாவில் இருந்துதான். ஆம் பூட்டான் இந்தியாவிடம் இருந்தே அதிக பெட்ரோலை இறக்குமதி செய்கிறது. குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனம்தான் அதிக அளவிலான பெட்ரோலை இந்தியாவில் இருந்து பூட்டானிற்கு ஏற்றுமதி செய்கிறது.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

ரிலையன்ஸ் நிறுவனம் மாதந்தோறும் 30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பெட்ரோலை லிட்டருக்கு ரூ.40 என்ற சராசரி மதிப்பில் விற்பனை செய்கிறது. இந்த பெட்ரோல்கள் எல்லாம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜமாநகர் என்ற பகுதியில் உள்ள ரிலையன்ஸ் ரிபைனரிஸில் இருந்து பூட்டானிற்கு செல்கிறது.

விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு...

இந்தியா பூட்டானிற்கு மட்டும் அல்ல வங்கதேசம், மியான்மர், ஈரான், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, சில ஆப்ரிக்க நாடுகள், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஈரானிடம் இருந்தே கச்சா எண்ணெய் வாங்கி அதை இதை சுத்திகரித்து பெட்ரோல், டீசலாக பிரித்து மீண்டும் அதை ஈரானிற்கே ஏற்றுமதி செய்யும் வேலையும் இங்கு நடக்கிறது.

Most Read Articles
English summary
Indians buying Bhutan's petrol as low as indian petrol price. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X