ஆட்சியை இழக்கும் அபாயத்தில் மோடி... லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் உருவான திடீர் சிக்கல் இதுதான்

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு, திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு, திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

இந்தியாவில் டூவீலர், கார், பஸ் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக வாகனங்கள் இயங்க தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் தேவையும் முன்னெப்போதையும் விட வேகமாக உயர்ந்து கொண்டுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் சீனாவிற்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக திகழும் இந்தியாவிடம், பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் வளம் சொல்லிக்கொள்ளும்படி பெரிய அளவிற்கு இல்லை.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

எனவே சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து கொண்டுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் இறக்குமதியின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

இதனால் சர்வதேச அளவில், கச்சா எண்ணெய்யை மிக அதிக அளவில் இறக்குமதி செய்யும் 3வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிட்டு வருகிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள்!!

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவதால், இந்தியாவின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தனது அந்நிய செலாவணி கையிருப்பின் பெரும்பகுதியை இந்தியா இழக்க நேரிடுகிறது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் முடிவு கட்டும் விதமாக, கச்சா எண்ணெய் இறக்குமதியை பெருமளவில் குறைக்க தேவையான நடவடிக்கைகளை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிக தீவிரமாக எடுத்து வருகிறது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

வரும் 2022ம் ஆண்டிற்குள், கச்சா எண்ணெய் இறக்குமதியை, தற்போது உள்ளதை காட்டிலும், குறைந்தபட்சம் 10 சதவீதம் என்கிற அளவிற்காவது குறைக்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, எலெக்ட்ரிக் மற்றும் எத்தனால், மெத்தனால் மற்றும் சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இத்தகைய வாகனங்களின் விலை சற்று அதிகம்.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

இதனால் இத்தகைய வாகனங்களை வாங்க மக்கள் மத்தியில் சற்று தயக்கம் நிலவி வருகிறது. எனவே ஃபேம் இந்தியா என்ற திட்டத்தின் கீழ், இத்தகைய வாகனங்களை வாங்கும் பொது மக்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி கொண்டுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

மானியம் கிடைப்பதன் காரணமாக, இத்தகைய வாகனங்களை வாங்கும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவை குறைந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி வருங்காலத்தில் படிப்படியாக கட்டுக்குள் வரும் என மத்திய அரசு நம்புகிறது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

அத்துடன் உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. இதன்படி கடந்த நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் (ஏப்ரல்-நவம்பர்), 23,943 டிஎம்டி (TMT-Thousand Metric Tonne) கச்சா எண்ணெய்யை இந்தியா உற்பத்தி செய்திருந்தது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

போதிய அளவிற்கு கச்சா எண்ணெய் வளம் இல்லாத இந்தியாவை பொறுத்தவரை இது ஒரு சாதனை அளவாகும். இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி இன்னும் வெகுவாக அதிகரிக்கும் என மத்திய அரசு எதிர்பார்த்தது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக, நடப்பு நிதியாண்டில் தற்போது வரை, இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி சரிவை சந்தித்திருக்கும் தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய எரிபொருள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் (ஏப்ரல்-நவம்பர்), மொத்தம் 23,075 டிஎம்டி கச்சா எண்ணெய்யை இந்தியா உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்த நிதியாண்டின் முதல் 8 மாதங்களில், 23,943 டிஎம்டி கச்சா எண்ணெய்யை இந்தியா உற்பத்தி செய்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

அதாவது கடந்த நிதியாண்டின் முதல் 8 மாதங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில், இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி சுமார் 3.6 சதவீதம் என்கிற அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்தது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

இதுதவிர பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்து வரும் கலால் வரி, வாட் வரி ஆகியவற்றின் காரணமாகவும், அவற்றின் விலை மிகவும் அதிகப்படியாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலை கீழாக மாறியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை, கடந்த சில மாதங்களாக படிப்படியாக குறைந்து கொண்டே வந்து, தற்போது ஓரளவிற்கு கட்டுக்குள் உள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இது மத்திய அரசுக்கு கை கொடுக்கும் என கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஐந்தாண்டு பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே இன்னும் ஒரு சில மாதங்களில், நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தற்போதே தேர்தல் பரபரப்பு தொற்றி கொள்ள தொடங்கியுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி சரிவை சந்தித்திருப்பது மத்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை இதே நிலை நீடித்தால், இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு அதிகரிக்க கூடும்.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயரக்கூடிய அபாயம் நிலவுவதோடு சேர்த்து, நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடிய அபாயமும் நிலவுகிறது. இது வாகன ஓட்டிகளுக்கும், சாமானிய மக்களுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடிக்கு சிக்கல்... ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது இதனால்தான்

Image Source: India Headlines

அவர்களுடன் சேர்த்து, மத்தியில் ஆளும் பாஜ அரசிற்கும், எதிர்வரவுள்ள லோக்சபா தேர்தலில் இது பாதிப்பை ஏற்படுத்தலாம். ஏனெனில் இன்றைய சூழலில், ஆட்சியாளர்களின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் சர்வ வல்லமை பெட்ரோல், டீசலுக்கு உள்ளது.

Most Read Articles
English summary
India's Crude Oil Production Declined 3.6 Per cent In Current Financial Year So far. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X