இசுஸு எம்யூ- எக்ஸ் இடைசீர்த்திருத்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இடைசீர்த்திருத்தம் செய்யப்பட்ட இசுஸு எம்யூ- எக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த எஸ்யூவி 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் மாடல்களில் வந்துள்ளது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியிலிருந்து எமது செய்தியாளர் ராகுல் நாகராஜ் அளித்த தகவல்கள் மற்றும் படங்கள் உள்ளிட்டவற்றுடன் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இசுஸு எம்யூ- எக்ஸ் இடைசீர்த்திருத்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. 2 வீல் டிரைவ் மாடலுக்கு ரூ.26.26 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், 4 வீல் டிரைவ் மாடலுக்கு ரூ.28.22 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இசுஸு எம்யூ- எக்ஸ் இடைசீர்த்திருத்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவியில் முக்கிய மாற்றங்களாக பை-எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. எல்இடி பகல்நேர விளக்குகள், பெரிய அளவிலான பனி விளக்குகள், புதிய பம்பர் அமைப்பு ஆகியவை முகப்பை வசீகரமாக காட்டுகின்றன.

இசுஸு எம்யூ- எக்ஸ் இடைசீர்த்திருத்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எஸ்யூவியில் 18 அங்குலத்தில் டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் ஆகியவை பக்கவாட்டின் முக்கிய அம்சங்கள். பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான ஸ்பாய்லர் இடம்பெற்றிருக்கிறது. இடைசீர்திருத்த மாடல் என்பதால், பெரிய அளவிலான டிசைன் மாற்றங்கள் இல்லை.

இசுஸு எம்யூ- எக்ஸ் இடைசீர்த்திருத்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

உட்புறத்தில் முழுவதுமான கருப்பு வண்ண இன்டீரியர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பியானோ பிளாக் என்ற பளபளப்பு மிக்க கருப்பு வண்ண டேஷ்போர்டு அமைப்பு, க்ரோம் அலங்கார விஷயங்கள், சென்ட்ரல் கன்சோல் மற்றும் கதவுகளிலும் க்ரோ்ம் அலங்கார தகடுகளுடன் பிரிமீயம் மாடல் என்பதை பரைசாற்றுகிறது.

இசுஸு எம்யூ- எக்ஸ் இடைசீர்த்திருத்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பல்தகவல் மின்னணு திரை அமைப்பு, லெதர் இருக்கைகள், ஸ்டீயரிங் வீலுக்கு லெதர் உறை ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இசுஸு எம்யூ- எக்ஸ் இடைசீர்த்திருத்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எஸ்யூவியில் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், எஞ்சின் ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டம், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் மற்றும் ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி ஆகியவையும் பிற முக்கிய வசதிகளாக இடம்பெற்றிருக்கின்றன.

இசுஸு எம்யூ- எக்ஸ் இடைசீர்த்திருத்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய இசுஸு எம்யூ- எக்ஸ் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் வசதி, ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகளும் இதன் பாதுகாப்பு அம்சங்களாக இருக்கின்றன.

இசுஸு எம்யூ- எக்ஸ் இடைசீர்த்திருத்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய இசுஸு எம்யூ- எக்ஸ் எஸ்யூவியில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 174 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இசுஸு எம்யூ- எக்ஸ் இடைசீர்த்திருத்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எஸ்யூவியின் 4 வீல் டிரைவ் மாடலில் லோ ரேஞ்ச் மற்றும் ஹை ரேஞ்சிற்கு எளிதாக மாற்றுவதற்கான ஷிஃப் ஆன் தி ஃப்ளை வசதியுடன் டெரைன் கமாண்ட் கன்ட்ரோல் சிஸ்டம் இடம்பெற்று இருக்கிறது. இது ஆஃப்ரோடு பிரியர்களுக்கு மிகச் சிறந்ததாக அமையும்.

இசுஸு எம்யூ- எக்ஸ் இடைசீர்த்திருத்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர், ஸ்கோடா கோடியாக் மற்றும் ஹோண்டா சிஆர்வி ஆகிய பிரமீயம் எஸ்யூவி மாடல்களுடன் இந்த புதிய இசுஸு எம்யூ- எக்ஸ் எஸ்யூவி போட்டி போட இருக்கிறது. கடும் போட்டி நிலவும் இந்த மார்க்கெட்டில் தனது தனித்துவமான அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவரும் என நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 17, 2018, 11:07 [IST]
English summary
Isuzu MU-X facelift launched in India: Isuzu has launched the new MU-X facelift in the country. The Isuzu MU-X facelift is launched in India at a starting price of Rs 26.26 lakh ex-showroom (Hyderabad). The new Isuzu MU-X facelift comes with updates to the exterior design and new features.
மேலும்... #இசுஸு
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+