2019 ஜாகுவார் எஃப் பேஸ் பெட்ரோல் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

2019 ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 247 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்ட

2019 ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்கள், விலை விபரம் உள்ளிட்ட தகவலகளை இந்த செய்தியில் காணலாம்.

2019 ஜாகுவார் எஃப் பேஸ் பெட்ரோல் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி டீசல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. முதலில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்ட இந்த சொகுசு ரக எஸ்யூவி, கடந்த ஆண்டு முதல் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

2019 ஜாகுவார் எஃப் பேஸ் பெட்ரோல் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

இந்தநிலையில், தற்போது ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடலின் உற்பத்தியும் இந்தியாவிலேயே துவங்கப்பட்டுவிட்டது. பெட்ரோல் மாடலானது பிரஸ்டீஜ் என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

2019 ஜாகுவார் எஃப் பேஸ் பெட்ரோல் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

புதிய ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவியில் 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 247 பிஎச்பி பவரையும், 365 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

2019 ஜாகுவார் எஃப் பேஸ் பெட்ரோல் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

இந்த காரில் எஞ்சின் பவர் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. மணிக்கு 217 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக ஜாகுவார் தெரிவித்துள்ளது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 7 வினாடிகளில் தொட்டுவிடும்.

2019 ஜாகுவார் எஃப் பேஸ் பெட்ரோல் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

புதிய ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவியில் அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள், 10.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லேன் கீப் அசிஸ்ட், 360 டிகிரி பார்க்கிங் சென்சார்கள், ஓட்டுனர் அயர்ந்து போவது குறித்து எச்சரிக்கும் வசதி, வைஃபை ஹாட்ஸ்பாட் வசதி, பார்க் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது.

2019 ஜாகுவார் எஃப் பேஸ் பெட்ரோல் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

இந்த காரில் க்ரோம் பூச்சுடன் கூடிய சுவிட்சுகள், மெட்டல் பெடல்கள், 10 விதமான நிலைகளில் மாற்றும் வசதியுடன் இருக்கைகள் உள்ளிட்ட ஆக்சஸெரீகளும் உள்ளன. விசேஷ அலாய் வீல்கள், பிரேக் சிஸ்டம் ஆகியவையும் இந்த காருக்கு சிறப்பு சேர்க்கின்றன.

2019 ஜாகுவார் எஃப் பேஸ் பெட்ரோல் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

கடந்த ஆண்டு இறுதியில் ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவியின் டீசல் மாடலின் பிரஸ்டீஜ் வேரியண்ட் ரூ.60.02 லட்சத்தில் வந்தது. இறக்குமதி செய்யப்பட்ட மாடலைவிட ரூ.20 லட்சம் குறைவான விலையில் வந்தது வாடிக்கையாளர்களை கவர்ந்தது. தற்போது இந்த மாடல் ரூ.63.57 லட்சத்தில் விற்பனையாகிறது.

2019 ஜாகுவார் எஃப் பேஸ் பெட்ரோல் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

இந்த நிலையில், பெட்ரோல் மாடல் ரூ.63.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பிஎம்டபிள்யூ ேஎக்ஸ் - 3, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ மற்றும் வால்வோ எக்ஸ்சி60 ஆகிய சொகுசு ரக எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக வந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஜாகுவார்
English summary
Jaguar Land Rover has launched the petrol variant of the F-Pace in India. The Jaguar F-Pace petrol is priced at Rs 63.17 lakh, ex-showroom (India). Bookings for the petrol version of the Jaguar F-Pace are now open.
Story first published: Wednesday, October 31, 2018, 11:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X