ஜாகுவார் எக்ஸ்ஜே50 சிறப்பு பதிப்பு மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஜாகுவார் எக்ஸ்ஜே கார் அறிமுகம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த பொன்விழாவை கொண்டாடும் விதத்தில் ஜாகுவார் எக்ஸ்ஜே50 என்ற சிறப்பு பதிப்பு மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஜாகுவார் எக்ஸ்ஜே50 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜாகுவார் எக்ஸ்ஜே50 சிறப்பு பதிப்பு மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஜாகுவார் எக்ஸ்ஜே கார் அறிமுகம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த பொன்விழாவை கொண்டாடும் விதத்தில் ஜாகுவார் எக்ஸ்ஜே50 என்ற சிறப்பு பதிப்பு மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதிக சிறப்பம்சங்கள் கொண்டதாக இந்த புதிய எக்ஸ்ஜே50 மாடல் வந்துள்ளது.

ஜாகுவார் எக்ஸ்ஜே50 சிறப்பு பதிப்பு மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஜாகுவார் எக்ஸ்ஜே எல் மாடலில் சிறிய மாற்றங்கள் செய்து சிறப்பு பதிப்பு மாடலாக வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய க்ரோம் க்ரில் அரணுடன் க்ரில் அமைப்பு, புதிய பம்பர்கள், 19 அங்குல அலாய் வீல்கள், இலுமினேட்டட் விளக்கொளியில் மிளிரும் ட்ரெட் பிளேட்டுகள் இதன் முக்கிய அம்சங்கள்.

ஜாகுவார் எக்ஸ்ஜே50 சிறப்பு பதிப்பு மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் வைரக்கற்கள் வடிவிலான தையல் வேலைப்பாடுகளுடன் உயர்தர இருக்கைகள், மெட்டல் பெடல்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. சிறப்பு பதிப்பு மாடலுக்கான பேட்ஜ்களும் பொருத்தப்பட்டுள்ளன. காரின் பல இடங்களில் XJ50 என்ற சிறப்பு பதிப்பு மாடலுக்கான பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளன.

ஜாகுவார் எக்ஸ்ஜே50 சிறப்பு பதிப்பு மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஜாகுவார் எக்ஸ்ஜே50 கார் ஃப்யூஜி ஒயிட், சான்டோர்னி பிளாக், லோரி புளூ மற்றும் ரோசெல்லோ ரெட்ஸ் ஆகிய 4 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

ஜாகுவார் எக்ஸ்ஜே50 சிறப்பு பதிப்பு மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஜாகுவார் எக்ஸ்ஜே50 மாடலில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 300 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 8 ஸ்பீடுஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பின்சக்கரங்களுக்கு எஞ்சின் பவர் செலுத்தப்படுகிறது.

ஜாகுவார் எக்ஸ்ஜே50 சிறப்பு பதிப்பு மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஜாகுவார் எக்ஸ்ஜே50 மாடல் ரூ.1.11 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மிக விசேஷமான அம்சங்கள் கொண்ட இந்த பொன்விழா மாடல் வாடிக்கையாளர்களை கவரும் என்று நம்பலாம்.

ஜாகுவார் எக்ஸ்ஜே50 சிறப்பு பதிப்பு மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ், பிஎமட்பிள்யூ 7 சீரிஸ் மற்றும் விரைவில் வரும் புதிய ஆடி ஏ8 கார்களுக்கு நிகரான மாடலாக கூறலாம். எனினும், இது சிறப்பு பதிப்பு மாடலாக இருப்பது கூடுதல் விசேஷமான விஷயம்.

Article Published On: Wednesday, December 5, 2018, 11:01 [IST]
English summary
Jaguar XJ50 launched in India at Rs 1.11 Crore, ex-showroom (India). The XJ50 is a special edition model, based on the company's Indian flagship, the XJ L model. The Jaguar XJ50 was first showcased earlier this year at the 2018 Beijing Motor Show and celebrates 50 years of the luxury sedan.
மேலும்... #ஜாகுவார்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+