ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பிளாக் பேக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!
பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரூ.20.59 லட்சத்தில் வந்துள்ள இந்த புதிய மாடலில் கூரை, சைடு மிரர்கள், அலாய்
பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலின் விலை மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிசன் என்ற பெயரில் இந்த சிறப்பு பதிப்பு மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை உயர்ந்த லிமிடேட் (O) வேரியண்ட்டில் மட்டுமே இது விற்பனைக்கு கிடைக்கும். வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது.

கருப்பு வண்ண கூரை, கருப்பு வண்ண சைடு மிரர்கள், 17 அங்குல விட்டமுடைய கருப்பு வண்ண அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருப்பதால், இதனை பிளாக் பேக் எடிசன் என்ற தனித்துவம் பெற்றுள்ளது. மேலும், சாதாரண மாடலிலிருந்து வேறுபடுத்தும் விதமாகவும், அதிக கவர்ச்சியாகவும் இருக்கிறது.

உட்புறம் முழுவதும் கருப்பு வண்ண தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சென்டர் கன்சோல், கதவுகள் மற்றும் கேபினில் பல இடங்களில் க்ரோம் அலங்கார பாகங்கள் பொருத்தப்பட்டு மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது.

மேலும், ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிசன் மாடலானது வோக்கல் ஒயிட், மினிமல் க்ரே மற்றும் மெக்னீசியோ க்ரே ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இவை அனைத்தும் கருப்பு வண்ண கூரையுடன் கிடைக்கும்.

ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிசன் மாடலில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 173 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் பிளாக் பேக் எடிசன் தவிர்த்து, கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட லிமிடேட் பிளஸ் என்ற புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் சன்ரூஃப், பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிசன் மாடல் ரூ.20.59 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. டாப் வேரியண்ட் மாடலைவிட அதிக சிறப்பம்சங்கள் கொண்டிருப்பதால், வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும்.

இந்த இரண்டு புதிய மாடல்களில் பிளாக் பேக் எடிசன் பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனிடையே, காம்பஸ் எஸ்யூவியின் ட்ரெயில்ஹாக் எடிசன் மாடல் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








