முன்சக்கரம் தனியாக கழன்று வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி தந்த ஜீப் காம்பஸ்!

Written By:

அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனத்தின் எஸ்யூவி மாடல்கள் கட்டுமானத் தரத்திற்கும், பாதுகாப்பு அம்சங்களுக்கும் பெயர் பெற்றவை. ஆனால், சந்தைப் போட்டி மிகுந்துவிட்ட தற்போதைய காலக் கட்டத்தில் அவற்றை கார் நிறுவனங்கள் சமாதானப்படுத்தி கொள்கிறதோ என்ற ஐயம் பல வேளைகளில் வந்துவிடுகிறது.

முன்சக்கரம் தனியாக கழன்று வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி தந்த ஜீப் காம்பஸ்!

இதற்கு உதாரணமாக ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஒன்று ஷோரூமிலிருந்து டெலிவிரி எடுத்த 3 மணிநேரத்தில் விபத்தில் சிக்கி வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த உரிமையாளர் பதிவு செய்துள்ள விபரங்களும், படங்களும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றன.

முன்சக்கரம் தனியாக கழன்று வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி தந்த ஜீப் காம்பஸ்!

அஸாம் மாநிலம், கவுகாத்தியை சேர்ந்தவர் ஜெயந்தா புகன். இவர் நேற்று முன்தினம் புத்தம் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியை டெலிவிரி எடுத்துள்ளார். நாகான் அருகில் உள்ள துலியஜன் என்ற இடத்திற்கு தனது புத்தம் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் சென்றுள்ளார்.

முன்சக்கரம் தனியாக கழன்று வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி தந்த ஜீப் காம்பஸ்!

ஆசையாய் வாங்கிய எஸ்யூவியில் முதல் பயணமே மகிழ்ச்சியாக அமையவில்லை. கார் ஓடிக் கொண்டிருக்கும்போது, ஏதோ சப்தம் வருவதை கவனித்து காரின் வேகத்தை குறைத்துள்ளார். அப்போது பெருத்த சப்தத்துடன் இடது பக்க சக்கரம் தனியாக கழன்றுவிட்டது.

முன்சக்கரம் தனியாக கழன்று வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி தந்த ஜீப் காம்பஸ்!

காரை நிறுத்தி இறங்கி பார்த்த ஜெயந்த் புகன் கடும் அதிர்ச்சி அடைந்தார். அதிர்ஷ்டவசமாக பேராபத்தில் இருந்து அவர் தப்பிவிட்டார்.

முன்சக்கரம் தனியாக கழன்று வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி தந்த ஜீப் காம்பஸ்!

வாங்கி சில மணிநேரத்தில் இவ்வாறு நடந்ததால், செய்வதறியாமல், தனது காரின் முன்சக்கரம் மற்று அச்சு முறிந்துவிழுந்த படங்களை எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

முன்சக்கரம் தனியாக கழன்று வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி தந்த ஜீப் காம்பஸ்!

இது மிக மோசமான பாதுகாப்பு குறைபாடு. சர்வதேச அளவிலான கார் நிறுவனம் இவ்வாறு மிக மோசமான தரமுடைய கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதால், உயிர்களை காவு வாங்கும் விஷயமாகும்.

முன்சக்கரம் தனியாக கழன்று வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி தந்த ஜீப் காம்பஸ்!

அந்த கார் டெலிவிரி எடுத்து 3 மணிநேரத்தில் 172 கிமீ தூரம் மட்டுமே ஓடிய நிலையில், இவ்வாறு நடந்துள்ளது. நான் என்ன செய்வது என்பதற்கான ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்," என்று தனது பதிவில் கூறி இருக்கிறார்.

முன்சக்கரம் தனியாக கழன்று வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி தந்த ஜீப் காம்பஸ்!

இதுதொடர்பான ஜெயந்த் புகனின் ஃபேஸ்புக் பதிவிற்கு பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பழைய கார்களில் அச்சு மற்றும் சக்கரத்தை இணைக்கும் பால் ஜாயிண்ட் தேய்மானம் அடைந்து சக்கரம் கழன்று போவதற்கு வாய்ப்புண்டு என்று ஒருவர் கருத்து பதிவு செய்துள்ளார்.

முன்சக்கரம் தனியாக கழன்று வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி தந்த ஜீப் காம்பஸ்!

அஸ்வின் குகன் என்பவர், ஜீப் இந்தியா நிறுவனத்தின் சிறப்பான கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களினால்தான் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கிறது. வேறு காராக இருந்திருந்தால் நிச்சயம் பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கும் என்று கூறி இருக்கிறார்.

முன்சக்கரம் தனியாக கழன்று வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி தந்த ஜீப் காம்பஸ்!

எது எப்படி இருந்தாலும், இது உயிருடன் விளையாடும் சம்பவமாகவே பார்க்க முடியும். உரிய நேரத்தில் ஓட்டுனர் நிறுத்தியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது.

முன்சக்கரம் தனியாக கழன்று வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி தந்த ஜீப் காம்பஸ்!

டீலரில் ஒருமுறை பரிசோதித்தே டெலிவிரி வழங்கப்படும். டீலரில் இறுதி பரிசோதனை செய்ய தவறி இருக்கலாம். இதுகுறித்து ஜீப் இந்தியா நிறுவனம் உரிய ஆய்வு செய்து வரும் காலத்தில் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. Picture credit: Jayanta Phukan.

டாடா கார் டீலரின் ஹேண்ட்லிங் சார்ஜ் மோசடியை அம்பலப்படுத்திய வாடிக்கையாளர்!

டீலரின் ஹேண்ட்லிங் சார்ஜ் மோசடியை அம்பலப்படுத்திய டாடா நெக்ஸான் வாடிக்கையாளர்!

கார் வாங்கும்போது டீலர்களில் கொடுக்கப்படும் கொட்டேஷனில் ஹேண்ட்லிங் சார்ஜ் என்று குறிப்பிட்டு ஒரு கணிசமான தொகையை வாடிக்கையாளர்களிடம் இருந்து டீலர்கள் கறந்து வருகின்றனர். இது சட்ட விரோதமானது என்று நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் தீர்ப்புகள் கூட அளிக்கப்பட்டு இருக்கின்றன.

டீலரின் ஹேண்ட்லிங் சார்ஜ் மோசடியை அம்பலப்படுத்திய டாடா நெக்ஸான் வாடிக்கையாளர்!

இந்த சூழலில், டாடா டீலரில் கையாளும் கட்டணம் என்று குறிப்பிட்டு மோசடி செய்த சம்பவத்தை வாடிக்கையாளர் ஒருவர் அம்பலப்படுத்தி இருக்கிறார். அத்துடன் விடாமல் அதனை மீடியா பார்வைக்கும் கொண்டு வந்துள்ளார். இந்த மோசடியிலிருந்து அவர் எளிதாக தப்பிய விதம் குறித்து பார்க்கலாம்.

டீலரின் ஹேண்ட்லிங் சார்ஜ் மோசடியை அம்பலப்படுத்திய டாடா நெக்ஸான் வாடிக்கையாளர்!

அஸாம் மாநிலம் கவுகாத்தி நகரை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் அங்குள்ள காமக்யா மோட்டார்ஸ் என்ற அங்கீகரிக்கப்பட்ட டாடா டீலரில் நெக்ஸான் எஸ்யூவியை அண்மையில் புக்கிங் செய்துள்ளார்.

டீலரின் ஹேண்ட்லிங் சார்ஜ் மோசடியை அம்பலப்படுத்திய டாடா நெக்ஸான் வாடிக்கையாளர்!

டீலரில் கொடுக்கப்பட்ட விலை விபர பட்டியலை பார்த்தபோது, அதில் ஹேண்ட்லிங் சார்ஜ் என்ற பெயரில் ரூ.8,500 சேர்க்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து டீலர் பணியாளர்களிடம் வினவி இருக்கிறார் அந்த வாடிக்கையாளர். ஆனால், ஹேண்ட்லிங் சார்ஜ் கட்டாயம். அதனை கட்டினால்தான் கார் வாங்க முடியும் என்று கூறி இருக்கின்றனர்.

டீலரின் ஹேண்ட்லிங் சார்ஜ் மோசடியை அம்பலப்படுத்திய டாடா நெக்ஸான் வாடிக்கையாளர்!

ஹேண்ட்லிங் சார்ஜ் என்பது சட்டவிரோதமானது என்பதை ஏற்கனவே அறிந்திருந்த அந்த வாடிக்கையாளர் இதுகுறித்து டாடா நிறுவனத்திற்கு இ-மெயில் மூலமாக கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் டீலர் விபரங்களை குறிப்பிட்டு, ஹேண்ட்லிங் சார்ஜ் என்பது கட்டாயமா? என்று வினவியிருந்தார்.

டீலரின் ஹேண்ட்லிங் சார்ஜ் மோசடியை அம்பலப்படுத்திய டாடா நெக்ஸான் வாடிக்கையாளர்!

அந்த டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர் சேவை மைய இ-மெயில் முகவரிக்கு அந்த கடிதத்தை அனுப்பியதோடு, அதில் டாடா மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி குவென்ட்டர் பட்செக்கையும் இணைத்திருந்தார்.

டீலரின் ஹேண்ட்லிங் சார்ஜ் மோசடியை அம்பலப்படுத்திய டாடா நெக்ஸான் வாடிக்கையாளர்!

ஆச்சர்யம் தரும் விதத்தில், அந்த வாடிக்கையாளர் அனுப்பிய கடிதத்திற்கு, டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர் சேவைப் பிரிவிலிருந்து அன்றைய தினமே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் வந்தது.

டீலரின் ஹேண்ட்லிங் சார்ஜ் மோசடியை அம்பலப்படுத்திய டாடா நெக்ஸான் வாடிக்கையாளர்!

மேலும், மறுநாளே சம்பந்தப்பட்ட டீலரிடமிருந்து பதில் வந்துள்ளது. ஹேண்ட்லிங் சார்ஜிலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என்று தகவல் தெரிவித்துள்ளனர். ஹேண்ட்லிங் சார்ஜ் என்ற கட்டணம் சட்டவிரோதமாக குறிப்பிடப்பட்டாலும், பல டீலர்களில் இது எழுதப்படாத சட்டம்போல கட்டயாமாக வசூலிக்கப்படுகிறது.

டீலரின் ஹேண்ட்லிங் சார்ஜ் மோசடியை அம்பலப்படுத்திய டாடா நெக்ஸான் வாடிக்கையாளர்!

இதன்மூலமாக, டீலர்களும் கணிசமான அளவு கல்லா கட்டுகின்றனர். அனைத்து டீலர்களிலுமே இதனை வசூலிப்பதுடன், மாதத்திற்கு லட்சக்கணக்கில் வாடிக்கையாளர் பணத்தை அனாமத்தாக பிடுங்குகின்றனர். விழிப்புடைய வாடிக்கையாளர் மட்டும் பேரம் பேசி ஓரளவு குறைக்கின்றனர்.

டீலரின் ஹேண்ட்லிங் சார்ஜ் மோசடியை அம்பலப்படுத்திய டாடா நெக்ஸான் வாடிக்கையாளர்!

வாடிக்கையாளர் சேவையில் முன்னிலையில் இருக்கும் மாருதி நிறுவனம் உள்பட இதற்கு விதிவிலக்கல்ல. இந்த விஷயத்தில் போக்குவரத்து அலுவலகமும், கார் நிறுவனங்களும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும்.

Via- Rushlane

English summary
Jeep Compass Breaks Down In 3 Hours Of Taking Delivery.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark