ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
இந்தியாவில் 25,000 ஜீப் காம்பஸ் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதை கொண்டாடும் விதமாக, ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்போர்ட் என்ற பேஸ் வேரியண்ட்டில
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சிறப்பு பதிப்பு ஜீப் காம்பஸ் எஸ்யூவி குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் 25,000 ஜீப் காம்பஸ் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதை கொண்டாடும் விதத்தில் இந்த சிறப்பு பதிப்பு மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. ஜீப் காம்பஸ் பெட்ராக் என்ற பெயரில் இந்த விசேஷ மாடல் கிடைக்கும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்போர்ட் என்ற பேஸ் வேரியண்ட்டில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு பெட்ராக் எடிசனாக மாற்றப்பட்டுள்ளது. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல்வேறு சிறப்பம்சங்களை இந்த பெட்ராக் எடிசன் பெற்றிருக்கிறது.

ஜீப் காம்பஸ் பெட்ராக் எடிசன் மாடலானது வோக்கல் ஒயிட் என்ற வெள்ளை வண்ணத்திலும், மினிமல் க்ரே என்ற சாம்பல் வண்ணத்திலும் எக்ஸோட்டிகா ரெட் என்ற சிவப்பு வண்ணத்திலும் கிடைக்கும். இந்த மாடலில் கருப்பு வண்ண ரூஃப் ரெயில்கள் மற்றும் 16 அங்குல அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த எஸ்யூவியின் கதவுகளில் விசேஷ பாடி டீக்கெல் ஸ்டிக்கர் மற்றும் பெட்ராக் மோனோகிராம் ஒட்டப்பட்டு இருக்கிறது.

உட்புறத்தில் பெட்ராக் எடிசன் பேட்ஜ் பதிக்கப்பட்ட சீட் கவர்கள், 5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, புதிய மிதியடிகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. டைனமிக் கெயிடென்ஸ் வசதியுடன் கூடிய நேவிகேஷன் கொடுக்கப்பட்டு இருக்கிிறது.

இந்த சிறப்பு பதிப்பு மாடலில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வசதி, எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஃபோல்டிங் ரியர் வியூ மிரர்கள் இடம்பெற்றுள்ளன.

விலை அடிப்படையில் பார்க்ப்போனால், புதிய ஜீப் காம்பஸ் பெட்ராக் எடிசன் மாடலானது ஸ்போர்ட் மற்றும் லான்ஜிடியூட் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

இந்த எஸ்யூவியில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 173 பிஎச்பி பவரை அளிக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. முன்சக்கரங்களுக்கு எஞ்சின் சக்தி செலுத்தப்படுகிறது.

புதிய ஜீப் காம்பஸ் பெட்ராக் எடிசன் ரூ.17.53 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாடலைத் தொடர்ந்து அடுத்து ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் ட்ரெயில்ஹாக் என்ற விலை உயர்ந்த மாடலை ஜீப் கார் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


Click it and Unblock the Notifications








