ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை உயர்ந்த புதிய வேரியண்ட் அறிமுகம்!!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை உயர்ந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய வேரியண்ட்டில் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் மற்

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை உயர்ந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை உயர்ந்த புதிய வேரியண்ட் அறிமுகம்!!

அண்மையில்தான் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பிளாக் எடிசன் என்ற சிறப்பு பதிப்பு மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது லிமிடேட் பிளஸ் என்ற பெயரில் புதிய டாப் வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட் ரூ.21.07 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை உயர்ந்த புதிய வேரியண்ட் அறிமுகம்!!

புதிய லிமிடேட் பிளஸ் வேரியண்ட்டானது ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். அதேநேரத்தில், டீசல் மாடல் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை உயர்ந்த புதிய வேரியண்ட் அறிமுகம்!!

ஜீப் காம்பஸ் லிமிடேட் பிளஸ் 4X2 பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலுக்கு ரூ.21.41 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. டீசல் 4 வீல் டிரைவ் மாடலுக்கு ரூ.22.85 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை உயர்ந்த புதிய வேரியண்ட் அறிமுகம்!!

தற்போது டாப் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படும் லிமிடேட் வேரியண்ட்டைவிட கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த புதிய லிமிடேட் பிளஸ் வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாடலில் பானோரமிக் சன்ரூஃப், 18 அங்குல மெஷிட் கட் அலாய் வீல்கள், யு-கனெக்ட் வசதியுடன் கூடிய 8.4 அங்குல தொடுதிரையுடன் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்கள்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை உயர்ந்த புதிய வேரியண்ட் அறிமுகம்!!

லிமிடேட் பிளஸ் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ஆட்டோ டிம்மிங் உட்புற ரியர் வியூ மிரர், 6 ஏர்பேக்குகள் ஆகியவை கூடுதல் சிறப்பம்சங்களாக இருக்கின்றன.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை உயர்ந்த புதிய வேரியண்ட் அறிமுகம்!!

இந்த காரில் 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் மற்றும் 160 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில்கிடைக்கும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை உயர்ந்த புதிய வேரியண்ட் அறிமுகம்!!

இந்த லிமிடேட் பிளஸ் வேரியண்ட் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் சிறப்பம்சங்களையும், பாதுகாப்பு வசதிகளையும் பெற்றிருக்கிறது. பண்டிகை கால தேர்வில் ஜீப் காம்பஸ் தன்னை சிறந்த தேர்வாக நிலைநிறுத்திக் கொள்வதற்கு இந்த புதிய வேரியண்ட் பயன்படும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை உயர்ந்த புதிய வேரியண்ட் அறிமுகம்!!

இந்த இரண்டு புதிய வேரியண்ட்டுகளை தவிர்த்து, ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ட்ரெயில்ஹாக் எடிசன் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது எஸ்யூவி ஆர்வலர்களை கவர்ந்திழுக்கும் பல்வேறு சிறப்புகளை பெற்றிருக்கிறது.

Article Published On: Friday, September 21, 2018, 14:12 [IST]
English summary
Jeep India has launched a new variant of its Compass SUV offering in India, the Limited Plus. The Jeep Compass Limited Plus variant has been priced at Rs 21.07 lakh, ex-showroom (Delhi).
மேலும்... #ஜீப்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+