புதிய ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக்கில் அப்படி என்ன இருக்கு?

ஜீப் காம்பஸ் காரின் புதிய வேரியன்டாக டிரையல் ஹாக் காரில் சிறிய மாற்றங்கள் செய்து அறிமுகப்படுத்தவுள்ளது ஜீப் நிறுவனம். இதன் மூலம் விற்பனையை அதிகரிக்கலாம் என திட்டமிட்டுள்ளது.

By Balasubramanian

ஜீப் காம்பஸ் காரின் புதிய வேரியன்டாக டிரையல் ஹாக் காரில் சிறிய மாற்றங்கள் செய்து அறிமுகப்படுத்தவுள்ளது ஜீப் நிறுவனம். இதன் மூலம் விற்பனையை அதிகரிக்கலாம் என திட்டமிட்டுள்ளது.

ஜூனில் வெளியாகவுள்ள ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக்கில் என்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?

கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக் கார்கள். இந்தியாவில் எஸ்.யூ.வி ரக கார்களில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. சமீபத்தில் இந்த கார் பல விருதுகளையும் வாங்கியது.

ஜூனில் வெளியாகவுள்ள ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக்கில் என்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?

கடந்த 7 மாதங்களில் இந்தியா முழவதும் 25,000 ஜீப் காம்பஸ் கார்களை விற்று அந்நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

ஜூனில் வெளியாகவுள்ள ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக்கில் என்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?

இந்நிலையில் ஃபியட் நிறுவனம் இந்த காரில் சில மாற்றங்களை செய்து அதன் லுக்கை மாற்ற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் காரின் விற்பனையை அதிகரிக்க முடியும் என நம்புகிறது.

ஜூனில் வெளியாகவுள்ள ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக்கில் என்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?

புதிதாக மாற்றம் செய்யப்படும் டிசைன் கார் ஆப் ரோட்டில் ஓட்டுவதற்கு ஏற்றவகையில் டிசைன் செய்யப்படும் என கூறப்பட்டது.

ஜூனில் வெளியாகவுள்ள ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக்கில் என்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?

இந்நிலையில் புதிதாக மாற்றம் செய்யப்படவுள்ள மாற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அவற்றை கீழே காண்போம்.

ஜூனில் வெளியாகவுள்ள ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக்கில் என்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?

1. புதிய ஜீப் காம்பஸ் காரில் முன்பக்கமும், பின்பக்கமும் பம்பரில் மாற்றம் செய்யப்படவுள்ளது. காரின் க்ரோம் கலர் மெட்டாலிக் பிளாக் நிறத்திலும் கார் சிவப்பு நிறத்திலும் மாற்றம் செய்யப்படவுள்ளது.

ஜூனில் வெளியாகவுள்ள ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக்கில் என்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?

2. ஜீப் காம்பஸ் காரில் டோர் அருகே இருந்த காம்பஸ் என்ற பேட்ஜ் அகற்றப்பட்டு காரின் பின்புறம் டிரையல் ஹாக் என்ற எழுத்து பெரிய அளவு பேட்ஜ் பொருத்தப்படுகிறது.

ஜூனில் வெளியாகவுள்ள ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக்கில் என்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?

3.காரின் முன்புறம் டோ செய்வதற்காக இரண்டு ஹூக்குள் காரின் கலருக்கு மேட்சாகவே அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பின்புறம் ஒரு ஹூக் மட்டுமே அமைக்கப்படுகிறது.

ஜூனில் வெளியாகவுள்ள ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக்கில் என்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?

4. காருக்கு இரண்டு டோன்களை கொண்ட அலாய் வீல் அமைக்கப்படுகிறது.

ஜூனில் வெளியாகவுள்ள ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக்கில் என்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?

5.காரின் உட்புறம் காரின் கலரான அதே சிவப்பு, மற்றும் கருப்பு நிறங்கள் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. கார் முழுவதும் கருப்பு நிற லெதர்களால் அமைக்கப்பட்டு சிவப்பு நிறங்களால் பினிஷிங் செய்யப்படுகிறது. கார் சிட்டுகளில் டிரையல் ஹாக் என்ற எழுத்து சிவப்பு கலரில் எம்ப்ராய்டு செய்யப்படுகிறது.

ஜூனில் வெளியாகவுள்ள ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக்கில் என்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?

6. காரின் கியர் லிவர், ஸ்டியரிங் வீல் பேனல்கள் முழுவதும் கருப்பு கலரில், சிவப்பு கலர் ஹெலெட் செய்யப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஜூனில் வெளியாகவுள்ள ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக்கில் என்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?

7. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே ஆகிய வசதிகளுடன் இன்போடெயின்மென்ட் அமைக்கப்படுகிறது.

ஜூனில் வெளியாகவுள்ள ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக்கில் என்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?

8. இதன் இன்ஜின் 9 ஸ்பீடு ஆட்டோகியர், 2.0 லிட்டர் 170 பி.எச்.பி., மல்டி ஜெட் இன்ஜின் மற்றும் 1.4 லிட்டர், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்களில் வருகிறது.

ஜூனில் வெளியாகவுள்ள ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக்கில் என்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?

9. புதிதாக ராக் மோடு என்ற கியர் இதில் அமைக்கப்பட்டுள்ளது. ஆப் ரோடு டிரைவிங்கின் போது இதை பயன்படுத்தலாம்.

ஜூனில் வெளியாகவுள்ள ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக்கில் என்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?

10. இதன் விலை எக்ஸ்ஷோரூம் விலைப்படி ரூ 23 லட்சம் விலையில் விற்பனைக்கு வருகிறது. ஜீப் காம்பஸ் கார் ரூ15.16 லட்சத்தில் இருந்து 21.37 லட்சம் வரையில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass Trailhawk: All You Need To Know. Read in Tamil
Story first published: Saturday, March 31, 2018, 16:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X